இனத்துக்காகவேனும் திருந்துங்கள்

அண்மையில் இலங்கை அரசினால் செஞ்சோலை மீது நடாத்தப்பட்ட குண்டு வீச்சின்போது கொல்லப்பட்ட 61 பேருக்கும் இரங்கல் தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் கனடாவில் பல நிகழ்வுகள் இடம்ப்ற்றிருக்கின்றன. ஆனால் கனேடிய பத்திரிகைகளான Toronto Star, Sun, National Post, Global Mail என்பன இது பற்றி எதுவிதமான எதிர்வினைகளையும் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது. மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை பெற்ற ஓட்டாவாவில் பாராளுமன்ற முன்றிலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் கூட பத்திரிகைகளை ஈர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய விடயமாகும்.

1987இல் இந்திய இராணுவம் இலங்கையில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை பற்றி கூறும் பொழுது 98ம் ஆண்டு கம்பன் கழக விழாவிற்காக இலங்கை வந்திருந்த பிரபல இந்திய எழுத்தாளர் பாலகுமாரன், அந்நிகழ்வுகள் சரியான முறையில் இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியிருந்தது நினைவு இருக்கலாம்.ஆனால் சரியான முறையில் எம்மால் பதிவு செய்யப்பட்ட அண்மைக்கால நிகழ்வுகள் கூட எதுவிதமான சலனங்களையும் பத்திரிகை ஊடகங்களில் ஏற்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கின்றது. ஆனால் அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ் பல கைது நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை வைத்து பார்க்கின்றபோது தமிழர்களை தீவிரவாதிகளாக காட்டவேண்டும் என்கிற நோக்கத்துடன் பத்திரிகைகள் செயல்படுவது போன்ற தோற்றம் ஏற்படுவது இயற்கை.

ஆனால் இதனை இன்னொரு கோணத்தில் பார்த்தால் இதற்கான காரணங்களை எம்மால் ஒரளவு அறிந்து கொள்ளமுடியும். ஒரு ஆராய்ச்சி நோக்குடன் கனேடிய பத்திரிகை வட்டத்தில் கடந்த காலங்களில் தமிழர்களின் பெயர்கள் இடம்பெற்றது கோஷ்டி மோதல்களிலும், கடன் அட்டை துஷ்பிரயோகங்களிலும் தான். அது மட்டும் அன்றி வங்கிரோத்து, சமூக நல உதவிகள் போன்றவற்றில் தமிழர்கள் எவ்வாறு துஷ்பிரயோகங்களை செய்கிறார்கள் என்று சில மாதங்களின் முன்னர் வெளியான பத்திரிகை ஒன்று விசேட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்கார்பரோ பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு தமிழ் குழுக்களுக்கும் (Gangs) அவற்றின் வழிவந்த குழுக்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களால் தமிழர்களின் மதிப்பு மெல்ல மெல்ல செத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இம்மாதிரியான நிகழ்வுகளால் தமிழர்கள் மீது பிற சமூகத்தினருக்கு எதுஇதமான அனுதாபமோ, இரக்கமோ இல்லமல் போனது எமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பேயாகும்.

அமைதியாக ஓய்வை கழிக்கவும், சுக சுவாத்தியத்துக்குமாக பராமரிக்கப்படும் பூங்காக்கள் தோறும் தமிழ் இளைஞர்கள் குழுக்களாக நின்று பியர் அருந்துவதும் பின்னர் அத்தனை போத்தல்களையும் அங்கேயே உடைத்து எறிந்துவிட்டு போவதையும் நீங்கள் கண்கூடாக கவனித்திருப்பீர்கள். இத்தகைய நிகழ்வுகளால் எமது மதிப்பு கீழ் நோக்கி போய்க்கொண்டிருக்க, சிங்கள இனத்தவரோ தம்மை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பலப்படுத்திக்கொண்டதுடன் தம்மீது உயர்ந்த விம்பம் ஒன்றை (Descent Image) வருமாறும் பார்த்துக் கொண்டனர். குழு மோதல்களிலோ இல்லை கடன் அட்டை போன்ற துஷ்பிரயோகங்களிலோ எந்த ஒரு சிங்களவரினது பெயரோ இதுவரை இடம்பெறவில்லை (இல்லை) இடம்பெற்றது மிக மிக குறைவு. இவற்றை காரனம் காட்டி நாம் அவர்களை பசுக்கள் (பயந்தவர்கள்) என்று கேலி பேசி கொண்டிருக்க சிங்கள சமூகத்தினர் உண்மையாகவே பசுக்களாக, சாதுக்களாக மதிக்கப்பட்டு கொண்டார்கள். இது எமக்கு விடுதலை போராட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மிகப் பெரிய பின்னடைவாக அமைந்த்தது.

தம்மை மாவீரர்களாகவும், gangster களாகவும் வரித்து கொள்ளும் இவர்கள் உண்மையில் சாதித்தது என்ன ??? இங்கே வீண் வீரம் கதைத்து கொண்டு இருக்கும்போதே எமது சகோதரர்கள் அங்கே கொன்று குவிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்கு இவர்கள் என்ன எதிர்வினை ஆற்றினார்கள் ??? ஸ்கார்பரோவில் நடைபெற்ற எந்த ஒரு கண்டன கூட்டத்திலும் ஏன் இவர்கள் ஒருவரும் கலந்து கொள்ளவில்லை??????

எமக்கென்றொரு நற்பெயர் இருந்தது; அதை கெடுத்துவிட்டீர்கள். எம் இனத்தை அனாதரவு ஆக்கியதில் சிங்களவனுக்கு இருக்கும் அதே பங்கு உரிமை உங்களுக்கும் இருக்கிறது. நான் உங்களை குற்றம் கூற என்று இதை எழுதவில்லை. இப்பொது கூட எம்மால் முழுதாக முயன்றால் எமக்காக பிற சமூகத்தவரையும் பேசவைக்க முடியும். ஆப்கானிஸ்தான் எல்லாருமே டலிபான்கள் என்று அமெரிக்கா ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கியது போல எம்மீதும் ஒரு தோற்றத்தை உண்டாக்காமல் தடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது. இனி ஏனும் விழித்தெழுங்கள். இல்லாவிடில் எமது சமூகம் மட்டுமல்ல, எதிர் காலத்தில் உங்கள் பிள்ளைகள் கூட உங்கள் பெயரை இனிஷியலாக பயன்படுத்த யோசிப்பர்கள்

பின் குறிப்பு : இதை எல்லாம் வாசிக்க உங்களுக்கு நேரம் இல்லை என்பது எனக்கு தெரியும். சாட்டிங் தவிர வெறு எதற்கும் இணையத்தை உபயோகிக்காதவர்கள் நீங்கள். ஆனால் வலைப்பதிவுகள் சாகாவரம் பெற்றவை. இவற்றை என்றாவது ஒரு நாள் வாசிக்கும் போது உங்கள் இனத்தை நீங்களே எப்படி அழித்தீர்கள் என்று உணர்ந்து வருந்தக்கூடும். அதற்காகத்தான் இப்போதே இப்பதிவு. இதனை உங்கள் பெற்றோரோ இல்லை உறவினரோ வாசித்து உங்களுக்கு விளக்கட்டும் அல்லாவிட்டால் உங்களை ஒதுக்கி ஆவது வைக்கட்டும்

 

 

17 thoughts on “இனத்துக்காகவேனும் திருந்துங்கள்

Add yours

  1. வலைப்பதிவுக்கு வருக வருக //வலைப்பதிவுகள் சாகாவரம் பெற்றவை. இவற்றை என்றாவது ஒரு நாள் வாசிக்கும் போது உங்கள் இனத்தை நீங்களே எப்படி அழித்தீர்கள் என்று உணர்ந்து வருந்தக்கூடும்.//ம்……..

    Like

  2. வலைப்பதிவுக்கு வருக வருக //வலைப்பதிவுகள் சாகாவரம் பெற்றவை. இவற்றை என்றாவது ஒரு நாள் வாசிக்கும் போது உங்கள் இனத்தை நீங்களே எப்படி அழித்தீர்கள் என்று உணர்ந்து வருந்தக்கூடும்.//ம்……..

    Like

  3. நன்றி அருணன்,குழலிபுதியவரான என்னை வரவேற்றமைக்கு நன்றிகள்.குழலி தங்களின் “ம்” க்கு அர்த்தம் என்னவோ…..நான் இந்த பதிவை இட்ட இரண்டாம் நாளே மீண்டும் ஒரு தலைகுனிவான விடயத்ஹ்டில் எம் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதை கனேடிய பொலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்

    Like

  4. நன்றி அருணன்,குழலிபுதியவரான என்னை வரவேற்றமைக்கு நன்றிகள்.குழலி தங்களின் "ம்" க்கு அர்த்தம் என்னவோ…..நான் இந்த பதிவை இட்ட இரண்டாம் நாளே மீண்டும் ஒரு தலைகுனிவான விடயத்ஹ்டில் எம் தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதை கனேடிய பொலீசார் கண்டுபிடித்துள்ளார்கள்

    Like

  5. Every Tamil has to reform or be reformed for our race. We have to support our race even we know that we are going in a wrong way. You know, more than 100 Tamils were abducted within 3 weeks. 71 youths shot death from Aug 11 in Jaffna. But we don’t have anyone to speak for us because of our behaviors. If international community/media asks about those abductions and murders to ‘Mahinda’, he laughs and says, please ask to Karuna. Then that topic is over. Why international media can not ask to ‘Mahinda’ if Karuna did so, why do u allow him 2 have offices at Colombo with high security?. But they won’t ask. Because of our race behaviors.

    Like

  6. Every Tamil has to reform or be reformed for our race. We have to support our race even we know that we are going in a wrong way. You know, more than 100 Tamils were abducted within 3 weeks. 71 youths shot death from Aug 11 in Jaffna. But we don’t have anyone to speak for us because of our behaviors. If international community/media asks about those abductions and murders to ‘Mahinda’, he laughs and says, please ask to Karuna. Then that topic is over. Why international media can not ask to ‘Mahinda’ if Karuna did so, why do u allow him 2 have offices at Colombo with high security?. But they won’t ask. Because of our race behaviors.

    Like

  7. நன்றி சாருஇத்தனை காலம் கழித்து இந்த பதிவுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லைஇது எனது மனதின் குரல்…. இன விடுதலைக்கான போராட்டம் என்பது ஆயுதம் ஏந்துவது மட்டுமல்ல, இன மானம் காப்பதும் தான்

    Like

  8. நன்றி சாருஇத்தனை காலம் கழித்து இந்த பதிவுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லைஇது எனது மனதின் குரல்…. இன விடுதலைக்கான போராட்டம் என்பது ஆயுதம் ஏந்துவது மட்டுமல்ல, இன மானம் காப்பதும் தான்

    Like

Leave a reply to Anonymous Cancel reply

Website Powered by WordPress.com.

Up ↑