வேட்டையாடு விளையாடு பற்றி விமர்சனம் என்ற பெயரில் எழுதி கிழி கிழி என்று கிழித்துவிட்ட நிலையில் இன்னொரு கோணாத்திலான படம் பற்றிய பதிவு இது.இரண்டு நாட்களின் முன்னர் எனது நண்பன் ஒருவன் தான் இப்படத்தை பார்த்தாகவும் ஒரே “போரிங்” என்றும் கூறினான். ஏன் என்று கேட்டபோது கமல் வீணாக இங்கிலீஷ் கதைப்பதாக கூறினான். இன்று நான் அப்படத்தை பார்த்தபோது எனக்கு தோன்றியது, அமெரிக்க அதிகாரிகளுடன் உரையாடும்போது வேறு எவ்வாறு கதைக்கமுடியும் என்று. கமல் அமெரிக்க மற்றும் தனது உயர் அதிகாரிகளுடன் கதைக்கும்போது ஆங்கிலம் பரவலாக பயன்பட்டாலும் அது நடைமுறையில் இருப்பது தானே. இதற்கு முன்னர் வெளியான ஹே ராம், ஆளவந்தான் போன்ற படங்கள் மீதும் இதே கூறப்பட்டிருந்தாலும் இப்படதில் சப் டைட்டிலாக தமிழில் வசனங்கள் காட்டப்படுவது ஒரு நல்ல உத்தி (இந்த யோசனையை எழுத்தாளர் சுஜாதா அம்பலத்தில் ஆள்வந்தான் வெளியான நேரம் எழுதிய ஒரு பத்தியில் கூறியிருந்தார்)படம் மிக விறு விறுப்பாக போகின்றது. இடைவேளைக்குப்பின் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளினால் சிறு தொய்வு ஏற்பட்டாலும் காவல் துறையினருக்கு குடும்ப வாழ்வில் இருக்கும் ஆபத்துகளை சரியாக சித்திரிக்க ஜோதிகா பயன்பட்டிருக்கிறார். இதே இயக்குனரின் முன்னைய வெளியீடான “காக்க காக்க” விலும் காவல் துறையினரின் மனைவியராக வரும் ஜோதிகா மற்றும் தேவதர்ஷினி கொல்லப்படுவதாக காட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்பத்திலும், தரத்திலும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் இத்திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களை எவ்வளவு கவரும் என்பது அனுமானிக்க முடியாத ஒன்று. அது மட்டும் அல்ல அவனுக்கு பிடித்த டப்பாங்கூத்து பாடல்களோ, வேணுமென்றே திணிக்கப்பட்ட மட்டமான நகைச்சுவைகளோ, இல்லை சற்றேனும் நம்ப இயலாத மாய தந்திர காட்சிகளோ, பஞ்ச் வசனங்களோ இதில் கிடையாது. திருப்பதி, கள்வனின் காதலியை ஹிட்டாக்கிய அதே ரசிகன் தான் காதல், ஆட்டோக்ராப் ஐயும் ஹிட்டாக்கினவன். எனவே வேட்டையாடு விளையாடையும் வெற்றிப்படமாக்கி தனது ரசிப்பு தன்மையையும், நல்ல சினிமா எடுப்பதில் ஆர்வம் வைத்துள்ள கமல் போன்றோரின் நம்பிக்கையையும் வாழவைப்பான் என்று நம்புவோம்.
படம் பற்றி நான் சொல்ல நினைத்து எல்லம் நீங்களே சொல்லிவிட்டீர்கள். நன்றாக உள்ளதுமது
LikeLike