சோளகர் தொட்டி மீட்டுத் தந்த போர்க்கால நினைவுகள்


அண்மையில் வாசித்த நூல்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவை என்று சோளகர் தொட்டியையும், லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் வித்யா’வையும் குறிப்பிடலாம். வாசிப்பின் மீது அக்கறை கொண்டவர்கள் மாத்திரம் அல்லாமல் தாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று இவற்றைக் குறிப்ப்டவேண்டும். சோளகர் தொட்டி நாவல் அதன் ஆசிரியர் ச. பாலமுருகன் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி எழுத, வித்யா, தான் சந்தித்த அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். வாழ்வின் தரம் பற்றியும் அதை அழகாக்கும் தருணங்கள் பற்றியும் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கும் நாம், நாம் அதே வாழும் அதே சூழலில், அதே காலத்தில் எத்தனை மனிதர்கள் வாழ்வதற்கான உரிமைகளே மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று இந்த இரண்டு புத்தகங்களுமே சொல்கின்றன.

காட்டை அண்டிய பகுதி ஒன்றில் (தம் ஊரை தொட்டி என்றழைக்கிறார்கள் இவர்கள்) வசிக்கும் சோளகர் என்கிற இன மக்கள் தாம் வாழும் ஊரையும், அதை அண்டிய காட்டையும் புனிதமாக பாவித்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை அண்டிய காடுகளில் வீரப்பன் உலாவுகின்றதாக வரும் செய்திகளை அடுத்து வீரப்பன் வதம் செய்ய புறப்பட்ட காவல்துரையினராலும், அதிரடிப் படையினராலும் (தமிழக + கர்நாடக) எவ்வாறு துன்புறுத்தப்பட்டு, நார் நாராக சிதைக்கப்படுகிறார்கள் என்று இந்த நாவல் சொல்கிறது. அத்துடன், இந்தப் பழங்குடி மக்களின் பூர்விக நிலத்தை அபகரிக்க உயர்குடி மக்கள் செய்யும் தந்திரங்களும், அவர்கள் எப்படித் தம் சுயநலங்களிற்காக அரசு இயந்திரத்தை பழங்குடி மக்கள் மீது ஏவுகின்றார்கள் என்றும் விரிவாகக் காட்டப்படுகின்றது. நாவலை வாசித்து முடித்த கையோடு வாசிப்பில் ஆர்வம் உள்ள எனக்குத் தெரிந்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த நூலை வாசிக்கும்படி சிபாரிசு செய்தேன். விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் மனிதத் தன்மையே அல்லாத வக்கிரமான தாக்குதல்கள் எல்லாம் நாம் ஏற்கனவே கேட்ட கதைகளையே நினைவூட்டுகின்றன.

ஈழத்தில் நடந்து முடிந்த போரிலும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் நிலத்தின் பெயராலும், மொழியின் பயராலும், மதத்தின் பெயராலும் நடைபெறும் எல்லா யுத்தங்களிளும் எப்போதும் பாதிக்கப்பட்டு நசுக்கப்படுவது அந்த யுத்தத்தில் எந்த விதத்திலும் பங்கேற்காத/கட்டாயத்தின் பெயரால் மாத்திரமே பங்கேற்ற அப்பாவி மக்களே என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக எழுதப்படுகின்றது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கேள்விப்பட்ட செய்திகளும், பின்னர் வாசித்தறிந்த செய்திகளும், சனல் 4, மற்றும் வேறு ஒளித்துண்டங்கள் ஊடாக பார்த்த காட்சிகளும் வாழ்வு பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் தூர்த்துவிடுகின்றன. ‘சிங்கள தமிழ் முஸ்லீம் இனவெறிகட்கு பலியாகிப் போனோர்க்கு’ என்று சமர்ப்பணமிட்டு வெளிவந்த சக்கரவர்த்தியின் ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ சிறுகதைத் தொகுதியில் ‘படுவான் கரை’ என்று ஒரு சிறுகதை இருக்கிறது. அதில் வரும் கதாபாத்திரம் ஒன்று ராணுவத்துக்கு உதவுவதாக குற்றம் சாட்டப்பட்டு போராளிக் குழுக்களால் தாக்கப்படுகின்றது. பின்னர் விடுதலையாகி வீடு திரும்பிய அன்றே ராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் போராளிக் குழுவினரால் அவங்களுக்கு (புலிகளுக்கு) சப்போட்டாம் என்று குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்படுகின்றது. இது போன்ற கதைகள் எம் மண்ணில் எத்தனையோ பேருக்கு சுயசரிதங்கள். இரு புறத்தாலும் அடிவாங்கிய மத்தளம் போல் நின்ற மக்கள் பற்றிய நினைவுகள் வாழ்வின் அழகான தருணங்கள் அனைத்தையும் காலவதியாக்கி விட்டன என்றே தோன்றுகின்றது.

அண்மையில் இந்தியாவில் மீண்டும் மாவோயிஸ்டுகள் தமது தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தனர். சாடீஸ்கரில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ன்து ஒரு மாசவோயிஸ்ட் தலைவர் ‘”இந்தியாவில் 90% மக்கள் சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்வதாகவும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் எவர் மீதும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்றும் கீறி இருந்தார். இதைப் பார்த்ததும் பலர் ஆஹா, இந்திய அரசுக்கு சோதனை வந்து விட்டது என்று வெளிப்படையாகவே மகிழ்ச்சி தெரிவித்தனர். எனக்கோ, அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பற்றிய கவலைகளே அதிகரிக்கின்றது. ஈழத்தில் போர் நடைபெற்ற 30 ஆண்டும் கிரிக்கெட் ஸ்கோர் கேட்பது போலவே எத்தனை ராணுவம் செத்தது, எத்த்னை புலி செத்தது என்றும் கேட்டு, அப்பப்போ புளகாங்கிதமும் அப்பப்போ மெல்லிய வருத்தமும் பூண்டிருந்த நாட்களின் குருதிப் பிசுபிசுப்பு இன்னும் உடலை விட்டுப் போகவில்லை.

Some 300,000 Tamil civilians were displaced by
armed conflict, and subsequently detained in
government camps. Those suspected of ties with the
Liberation Tigers of Tamil Eelam (LTTE) – more than
12,000 – were detained separately. Many were held
incommunicado and sometimes in facilities not
designed to hold prisoners or in secret places of
detention. Civilians were trapped for months prior to
the conflict’s end in May without adequate food,
shelter, sanitation and medical care, or access to
humanitarian aid. The LTTE used civilians as human
shields and used threats and violence to prevent
them from fleeing the conflict zone. Government
artillery killed and wounded civilians, including
patients in hospitals and medical workers. The
government failed to address impunity for past
human rights violations, and continued to carry out
enforced disappearances and torture. Hundreds of
Tamils continued to be detained in the south for
lengthy periods without charge under special
security legislation. Human rights defenders and
journalists were killed, assaulted, threatened and
jailed. Police killings of criminal suspects
intensified.
Amnesty Internatioanl Report 2010ல் இருந்து

* வித்யாவின் ‘நான் வித்யா’ பற்றிப் பிறிதொருதரம் பார்ப்போம்.

4 thoughts on “சோளகர் தொட்டி மீட்டுத் தந்த போர்க்கால நினைவுகள்

Add yours

  1. வணக்கம்நண்பர்களேஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.நன்றிதலைவன் குழுமம் http://www.thalaivan.com

    Like

  2. நிலத்துக்கும் அதனுடன் வாழ்கின்ற மனிதனுக்குமான உறவு ஆழமானது – பிடிமானம் என்கின்ற ஒற்றைச் சொல்லில் அதை அடக்கிவிட முடியாது. ஆக்கிரமிப்பில் அவர்கள் நிலத்தின் பேரில் நிறையவற்றை இழக்கிறார்கள் – எப்போதும் அவர்களால் அதை தாங்கிக்கொள்ளவே முடிவதில்லை. 92-93 களில் ஈழநாதம் ஆண்டு மலரில் ஒரு கதை வெளியானது – வடலியடைப்பு பகுதியில் வாழ்ந்த முதியவர் ஒருவர் இடம்பேர்ந்து நினைவுகளின் கொடுமை தாளாமல் மீண்டும் அவருடைய கிராமத்துக்கே யாருக்கும் தெரியாமல் செல்லும்போது கொல்லப்படுகிறார் என்று – ஏறத்தாள சமகாலத்தில் வடக்கு மற்றும் யாழ்ப்பாணத்தில் பூர்வீக நிலங்களில் இருந்து புத்தளம் முதலிய தென் பகுதிக்கு பெயர்க்கப்பட்டவர்களை மறந்து விட்டு வாசித்திருக்கிறோம் என்பது இப்போது புலப்படுகிறது 😦 – சோளகர் தொட்டியை வாசிக்க எடுக்கும் போது சில நினைவுகள் எழுவது மறுப்பதற்கில்லை- துர்க்கா-தீபன்

    Like

  3. இடம்பெயர்வுகள், இருபக்கமும் மத்தளம் போல அடிவாங்கும் சந்தர்ப்பங்கள்….எல்லாம் கண்டோம். அனுபவித்தோம். வேறு எதுவும் சொல்லத்தெரியவில்லை. இப்படியான படைப்புகள் மூலம்தான் எமது அவலங்களை வெளிக்கொணரமுடியும் என்ற நிலை வந்துள்ளது. ஆனால் இவற்றின் மொழிபெயர்ப்புகள் எமது வாழ்வின் அவலங்களை எல்லா மக்களிடம் கொண்டு சேர்க்கும்.

    Like

  4. >சமிபத்தில் சோளகர்கள் தொட்டி வாசித்தேன்..கீழ் நாட்டில் நாம் பொருளாதார மோகத்தில் திளைத்து கொண்டிருக்கும் நிலையில் நாம் வாழும் காலத்திலேயே, நாம் வாழும் நிலப்பரப்புகளிலே வாழும் சோளகர் இனமக்கள் போன்ற அடையாளம் தெரியாமல் தூரத்து மலைகளில் விலங்குகளோடும் இயற்கையோடும் வாழ்ந்த பழங்குடி மனிதர்களை நாம் அறிந்திருக்க வில்லை.பெட்டி செய்திகளாய் வீரப்பனின் கூட்டாளிகள் ,உதவியவர்கள் பிடிபட்டனர் என்று ஒரு மூலையில் அடைபட்டு வரும் செய்திகளை நாம் கவர்சி நடிகைகளின் புடைப்பான மார்புகளாலும் நெளிந்த இடைகளுக்குள்ளுமான செய்திகளால் புறம்தள்ளினோம். நிலம் இழந்து, தன்மானம் இழந்து மனித இனம் அனுபவிக்க கூடாத அவமானங்களையும் வேதனைகளையும் அடைந்த மக்கள் தவறான சித்தரிப்புகளால் பரிதாபமாக கைவிளங்குகளுடம் நிற்கும் போதும் நாம் அவர்களை தீயசக்தியாய் நினைத்து புறக்கணித்தோம்.நம் கரங்களாலே நம் இனங்களை அழித்து வருவதை நாம் மறந்து தேசியம் பேசுகிறோம்…காடுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்தும், விரட்டப்பட்ட மக்களின் நாகரிகம் இழந்து நகரங்களின் சாலை யோரங்களில் காலங்களை கழிப்பதும் தான் நாம் வல்லரசாகின்றோம் என்று பறைசாற்றுகின்றது..”சோளகர்களின் தொட்டி” இந்திய மக்கள்நாயக நாட்டில் நடக்கும் இனஅழிப்புக்கான, அடக்குமுறைகளின் அடையாளம்.ச. பாலமுருகன் அவர்களுக்கு எனது நன்றிகள்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: