யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள்


தற்போது சில நாட்களாகவே யூதர்களையும், தமிழர்களையும் ஒப்பிட்டு – பெரும்பாலான நேரங்களில் மிகவும் மேம்போக்கான ஒப்பிடல்கள் – வெகுவாகப் பேசப்படுகின்றது.  அப்படி ஒப்பிடும்போது, யூதர்களும் உலகெல்லாம் பரவி இருந்தனர் என்றும், அவர்கள் தாம் இருந்த நாடுகளில் எல்லாம் மிகுந்த செல்வத்தோடும், வணிகங்களில் முக்கிய நிலைகளிலும் இருந்தனர் என்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.  ஆனால் நடைமுறையில், நிச்சயம் தமிழர்களுக்கு, யூதர்களுடன் ஒப்பிடும்போது எத்தனை வேறுபாடுகள் உள்ளனவென்பதை நாம் அவதானிக்கவேண்டும்.

 யூதர்கள் அவர்கள் இருந்த பல நாடுகளில் நிர்ணய சக்திகளாக, ஊடகத்துறை போன்றாவற்றில் பெரும் செல்வாக்கு கொண்டவர்களாக இருந்தார்கள். இன்றுவரை தமிழர்கள் அப்படி இல்லை.  யூதர்கள் நூற்றாண்டுகளால அந்த நாடுகளில் வாழ்ந்தவர்கள், ஆனால் தமிழர்கள் சில ஆண்டுகளாகத்தானே வாழ்கின்றனர் என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.  உண்மைதான், யூதர்கள் பல நூற்றாண்டுகளாக அவ்விதம் வாழ்ந்தபோதும் தம் யூத அடையாளங்களை தக்கவைத்துக் கொண்டே இருந்தனர்.  ஆனால் தமிழர்கள் ??.  இன்று புலம்பெயர் நாடுகளில் பெரும்பாலான இரண்டாம் தலைமுறை குழந்தைகளுக்கே தமிழ் தெரிவதில்லை, அதிகபட்சமாக பெற்றோருடன் மாத்திரமே அவர்கள் தமிழ் நின்று போகின்றது.  இப்படி இருக்கின்ற போது 3ம் 4ம் தலைமுறை குழந்தைகளுக்கு தமிழ் அடையாளங்கள் அருகிப்போகவே அதிக வாய்ப்புகள் உள்ளன.  

பெரும்பாலும் இங்கே பிறந்து வளர்ந்த, அல்லது சிறு வயதிலேயே இங்கு வந்த அனேகம் பேர் தம் திருமண விழா மற்றும் ஏனைய எல்லா சடங்குகளிலும் வட இந்திய – குறிப்பாக பாலிவுட் பாணி – முறைகளையே பின் பற்றுகின்றனர்.  இங்கு வந்திருக்கின்ற 1ம், 2ம் தலைமுறையினர் பிற நாட்டவர்களுடன் பழகிக் கலப்பதும், ஊடகத்துறை, மற்றும் பொது வாழ்வில் கலப்பது மிகக் குறைவாக இருக்க,  அப்படிக் கலக்க ஆரம்பிக்கக் கூடிய அடுத்த தலைமுறையினர் ஈழம் பற்றிய எந்த பொறுப்புணார்வும் இல்லாமலேயே வள்ர்கின்றனர்.சென்ற ஆண்டு வன்னியில் போர் முற்றி இருந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட நிறைய இளைஞர்கள் கலந்து கொண்டது – சிறுவயதில் கனடா வந்த / இங்கேயே பிறந்து வளர்ந்த சிலர் – நல்லதோர் ஆரம்பம் என்ற நம்பிகையை தந்தாலும், கனேடிய புலம்பெயர் ஈழத் தமிழர்களின் அரசியல் காய்களை நகர்த்துபவர்களால் அவர்கள் ஏமாற்றத்துடன் மெல்லக் கைவிடப்பட்டனர்…

இது போன்ற நிலைகளை நாம் கவனிக்கவேண்டும்.தவிர யூதர்களுடன் ஒப்பிட்டு நம்மை உறுவேற்றிக் கொள்ள முயல்கின்றபோது, இன்று இஸ்ரேலால் ஒடுக்கப்படும் பலஸ்தீனம் பற்றியும் நிச்ச்யம் நினைக்கவேண்டியே இருக்கின்றது.  இந்தியாவிடம் சமர்த்துப் பட்டம் வாங்கவேண்டும் என்றும், அமெரிக்காவிடம் நல்லபெயர் வாங்கவேண்டும், இங்கிலாந்துக்கு செல்லப் பிள்ளையாயிருகக்வேண்டும் என்றும் கொள்கை வகுப்பதன் தொடர்ச்சியாகவே யூதர்களைப் பார்த்து அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையும் முடியும்.

 ** தவிர இன்னொன்றையும் சொல்லவேண்டி இருக்கின்றது.  முகப் புத்தகத்தில் ஒரு கட்டுரைக்கு இணைப்புக் கொடுக்கின்ற போது அதில் வருகின்ற எல்லாவரிகளையும் வரிக்கு வரி ஏற்றுக் கொள்கிறேன்/றோம் என்ற கட்டாயம் இல்லை.  ஏதாவது ஒரு காரணதால் அந்தக் கட்டுரையை மற்றர்கள் படிக்கவேண்டும் என்றோ/அல்லது அந்தக் கட்டுரை பற்றி மற்றவர்களுடன் கதைக்க விரும்புகின்றோம் என்றோ கருதும்போது அதற்கு முகப் புத்தகத்தில் இணைப்புக் கொடுக்கின்றோம்/றேன்.  கலையரசனின் புத்தகம் கிழக்கு பதிப்பகம் ஊடாக வெளிவந்தது ஓரளவு அதிர்ச்சி அளித்தாலும் அவரது கட்டுரைகளை தொடர்ந்து வாசிகக்வே செய்கின்றேன். 

கலையரசனின் இது தொடர்பான பதிவுகள்

2 thoughts on “யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் என்ற கலையரசனின் கட்டுரை பற்றிய என் கருத்துக்கள்

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: