“ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.

அவிழ்க்கப்படாத மர்மங்களுடன் இருக்கின்ற அரசியற் படுகொலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.  அந்த வகையில் ராஜீவ் காந்தி படுகொலையும் ஒன்று.  அதுவும் ராஜீவ் காந்தியின் படுகொலை ஒரு இனத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியதில் பெரும்பங்கு வகித்தது என்பதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகவே கண்டிருக்கின்றோம்.
1991ம் ஆண்டு மே 21ம் திகதி இரவு கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் விசாரணைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதுடன், 5 ஆண்டுகாலம் விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி மாற்றப்பட்டு புதிதாகப் பொறுப்பேற்ற நீதிபதி சில மாதங்களிலேயே ஐந்தாண்டுகால விசாரணை பற்றிய ஆவணங்களையெல்லாம் படித்தறிந்து 26 பேருக்குத் தூக்குதண்டனையும் வழங்கினார்.  இந்தக் கொலையில் எந்த விதமான சட்ட நுணுக்கங்களும், துப்புத் துலக்கவேண்டிய தேவைகளும் இல்லாமல் இந்த விசாரணை நடத்தபட்ட முறையிலும், அதில் சாட்சியங்களைச் சேர்த்தது, குறிப்பிட்ட சிலரை விசாரணை செய்யாமல் தவிர்த்தது போன்ற மிகச் சாதாரணமாக வெளித்தெரிகின்ற ஓட்டைகளை முன்வைத்து திருச்சி வேலுசாமி ஜெயின் கமிஷன் முனிலையில் தனது மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.  தனது மனுவில் சுப்ரமணிய சாமியையும், சந்திரசுவாமியையும் குற்றம் சாற்றி இருந்த வேலுச்சாமி அதற்கான மிக எளிதான ( கணித பாடத்தில் வெளிப்படை உண்மை என்று படிப்போமே அதை விட வெளிப்படையான உண்மைகள் இவை) காரணங்களையும் பட்டியல் போட்டிருந்தார்,  ஆனால் துரதிஸ்ட வசமாக சுவாமியும் சாமியும் சரியான முறையில் விசாரிக்கப்படாததுடன் வழக்கு தனக்கேயுரிய எல்லாவிதமான ஓட்டைகளுடன் அப்படியே மூடிக்கட்டப்பட்டது.
இது பற்றி குமுதம் இணையத்தில் பேட்டி ஒன்றினைக் கொடுத்திருந்த திருச்சி வேலுச்சாமி, பின்னர் அந்தப் பேட்டியையே “ராஜீவ் காந்தி படுகொலை வெளிவராத மர்மங்கள்” என்ற பெயரில் ஒர் சிறு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.  நாம் வாழ்ந்த காலத்திலேயே நடந்து, நம் இனத்தின் தலைவிதியையும் பாதித்த இந்தக் கொலைவழக்கு கொண்டு செல்லப்பட்ட விதம் பற்றிய மர்மங்களை நிச்சயம் எல்லாரும் படிப்பதும் தொடர்ந்து கேள்வி எழுப்புவதும் முக்கியமானதாகும்.  இந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று பேசுவதற்கு முன்னர் இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கக்கூடிய மிகப்பெரிய சதிவலையையும், சதிவலையில் இன்னும் நிறையப் பேர் பங்குபற்றி உள்ளனர் என்றும் ஆராயவேண்டியது முக்கியமானது என்று நினைக்கின்றேன்.  மாறாக கொலை நடந்து காவல்துறை ஆரம்பகட்ட விசாரணையையே ஆரம்பிக்க முன்னரே எல்லா உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களும் சுப்பிரமணியசுவாமியையே மேற்கோள்காட்டி இந்தக் கொலையை புலிகள் செய்தனர் என்ற செய்தியை வெளியிட்டனர் என்பதில் தொடங்கி ஆரம்பிக்கின்றது இந்த கொலை தொடர்பான மர்மமுடிச்சுகள்.
திருச்சி வேலுச்சாமி எழுப்புகின்ற எளிய கேள்விகள் சில
  1. ராஜீவ்காந்தி படுகொலையை விசாரித்த ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில் கடைசியாக “இந்தக் கொலையில் உண்மையான குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்த கமிஷன் கருதுகின்றது.  ஆகவே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும்”  என்று சொன்ன ஜெயின் கமிஷன் அதற்கு காரணமாக திருச்சி வேலுச்சாமி கொடுத்த வாக்குமூலத்தையும் குறிப்பிட்டிருந்தது.  அந்த வாக்கு மூலத்தில் திருச்சி வேலுச்சாமி சுப்ரமணிய சுவாமியையும் சந்திரசாமியையுமே குற்றஞ்சாற்றி இருந்தார். (பக்கம் 13)
  2. மே 21ம் திகதி இரவு 10 15 மணிக்கு ராஜீவ் கொலைசெய்யப்பட்டு பின்னர் அது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் மறுநாள் காலை 9 மணிக்குத்தான் ஆரம்பமாகின.  ஆனால் இரவு 11 மணிக்கு முன்னரே சுப்ரமணிய சுவாமி ஊடகங்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலையை விடுதலைப்புலிகளே நிகழ்த்தியதாக சொல்லி இருக்கின்றார் (பக்கம் 14)
  3. கொலை நடந்த இடத்தில் இருந்த ஜெயந்தி நடராஜனும் மூப்பனாருமே கூட கொலை நடந்து 30 நிமிடங்களின் பின்னரே ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்டதை உறுதி செய்திருக்கின்றனர்.  ஆனால் 10;20க்கே அதாவது 5 நிமிட நேரத்தில் வேலுச்சாமி சுப்ரமணியசுவாமியுடன் மறு நாள் நடைபெற உள்ள கூட்டம் பற்றி பேசிய போது ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்று சுப்ரமணிய சுவாமி கூறுகிறார்.  (இது நேர்காணல் ஒளிவடிவத்தில் உள்ளது)
  4. மே 22ம் திகதி சுப்ரமணிய சுவாமி மதுரையில் பேச இருந்த கூட்டம் ராஜீவ் கொலை காரணமாக ரத்துச் செய்யப்படுகின்றது.  ஆனால் ராஜீவ் கொலை ஆகும் முன்னரே அதற்கான விமான டிக்கட்டை சுப்ரமண்ய சுவாமி ஏன் உறுதி செய்யவில்லை / ஏன் ரத்துச் செய்தார்.
  5. ராஜீவ் இறந்த போது அவருக்கு மிக அருகில் இருந்து உயிர் தப்பிய அனுசுயா என்கிற காவல்துறை அதிகாரி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் தா. பாண்டியன் போன்றோரிடம் சரியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.  
இது போன்ற மிக எளிய கேள்விகளின் மூலம் ராஜீவ் காந்தி கொலையிலும் வழக்கு விசாரணையிலும் அனேக மர்மங்கள் இருக்கின்றன என்கிற நியாயமான கேள்விகளை முன்வைக்கின்றார் திருச்சி வேலுச்சாமி.  இது தொடர்பான வீடியோ இணைப்புகளையும் கீழே தருகின்றேன்
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
புத்தக வெளியீடு
அன்னைத் தமிழ் படைப்பகம்

தொலைபேசி இலக்கம் 0431-2766939

 

15 thoughts on ““ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.

Add yours

  1. I have seen these videos. ///இந்தக் கொலைக்கும் புலிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதிடுவது எனது நோக்கமல்ல (சிலவேளை புலிகள் கொலை செய்திருந்தாலும் கூட அந்த சதிவலையில் இன்னும் நிறையப் பேர் பங்குபற்றி உள்ளனர் என்றே நினைக்கின்றேன்),///இதுதான் உண்மையாக இருக்கலாம். அரசியல் தீர்க்கதரிசனம் இல்லாமல் புலிகளால் எடுக்கப்பட்ட பல முடிவுகளில் ஒன்றாக (சதிக்குத் துணைபோனது, புலிகளுக்கும் ராஜீவ் மீதான கோபங்கள் இருந்தபடியால்) இது இருந்திருக்கலாம்.

    Like

  2. குற்றம் புரிய மோடிவ் என்னும் நோக்கம் இருக்கவேண்டும். சுப்பிரமணிசாமிக்கும் ராஜிவ்காந்திக்கும் எந்த முன்விரோதமும் இல்லை. ஆனால் இவையெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு உண்டு. விடுதலைப்புலித்தலைவரே அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.ஆனால் உங்களைப்போன்று சிலர்தான் இப்படி ஏதாவது எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.

    Like

  3. மணி அய்யரே, துன்பியல் சம்பவம் என்று சொன்னால் போறுப்பாகிவிடுமா? நீர் யாருக்கும் அனுதாபமே தெரிவிததில்லையா? நீர் கருமாதி அய்யரா?

    Like

  4. கிருத்திகன்அப்படி இருக்கின்ற வாய்ப்புகள் அதிகம் என்றே நினைக்கின்றேன். இந்த புத்தகத்தின் முன்னுரையில் நெடுமாறன் ஒரு விடயத்தைக் குறிப்பிடுவார், அதாவது காந்தி, இந்திரா காந்தி போன்றோரின் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் போலன்றி ராஜீவ் காந்தி படுகொலை பற்றிய விசாரணைகள் மிகவும் ஒளிப்பு மறைப்புடன் நடைபெற்றதாக. அதுவே இந்த விடயத்தில் நிறைய விடயங்களை மறைக்க விரும்புகின்றார்கள் என்பதைக் காட்டுகின்றதல்லவா?தவிர வேலுச்சாமி சொல்பவை மிக எளிய சந்தேகங்கள்.

    Like

  5. அய்யா மணி,துன்பியல் நிகழ்வு என்பதற்கும் ஒப்புதல் வாக்குமூலம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?. எனது கேள்விகள் எல்லாம் ஏன் இந்தக் கொலை விவகாரத்தில் இத்தனை ஒளிப்பு மறைப்புகள் கையாளப்பட்டன. சுப்ரமணியசுவாமி கொலை நடந்ததற்கு முதல் நாள் எங்கே இருந்தார் என்பதை ஏன் மனைவிக்கு தான் சென்னையில் இருப்பதாகவும், சென்னையில் இருப்பவர்களுக்கு டெல்லிக்குப் போவதாகவும் சொல்லிவிட்டு மறைந்து இருந்தார். இப்படி ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.தவிர, இந்தக் கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாகவே இருக்கட்டும், அபப்டி இருந்தால் கூட சுப்ரமணிய சுவாமியின் நடவடிக்கைகள் அந்த நேரத்தில் (இன்றும் கூட) மிகுந்த சந்தேகத்திற்கு உரியனவே. அப்படி இருக்கின்ற போது ஏன் அவரை விலக்கி வைத்தே விசாரணைகள் தொடர்ந்தன?ஜெயின் கமிஷன் அறிக்கையில் வேலுச்சாமியின் மனு பற்றிக் குறிப்பிடப்பட்டது அதற்குப் பின்னர் அந்த மனு பற்றி எவ்வளவு தூரம் அக்கறையுடன் விசாரணைகள் நடந்தன, இதெல்லாம் கவனமாகக் கவனிக்கப்படவேண்டியனவே,மோடிவிற்காகத் தான் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்று துப்பறியும் சாம்பு போல தீர்ப்பளிக்கத் தொடங்காதீர்கள், மோடிவ் என்பது முன்பகை, முன் விரோதம் மாத்திரமல்ல, அர்சியல் ரீதியான காரியங்களாகவோ, ஏன் லாப நோக்கிலாக தேவைகளாகக் கூட இருக்கலாம்….

    Like

  6. மணியின் கருத்தை ஆமோதித்த அனாமிக்குமணிக்குச் சொன்ன பதிலையே அப்படியே உங்களுக்கும் அனுப்பி வைக்கின்றேன், அது சரி, இதைச் சொல்வதற்கு கூட ஊரையும் பேரையும் ஒளித்து வருவது ஏனோ. சிலவேளை மணி அய்யாவின் கருத்துக்களை ஆமோதிப்பது உள் மனதில் உங்களுக்குக் கூட வெட்கமாக இருக்கின்றதோ?

    Like

  7. இதெல்லாம் மணி அய்யர் வாளுக்கு எங்கே புரியப்போகின்றது. அவருக்கு சுபிரமணிய சாமிய சொன்னதுதான் கடுப்பு

    Like

  8. நன்றிகள் அனாமி,ஆனால் நீங்களும் உங்கள் பெயரை தெரிவித்துக் கருத்தைத் தெரிவிக்கலாமே. கருத்தொன்றைத் தெரிவிக்கின்றபோது நான் சரியென்று நினைக்கின்ற ஒன்றையே கூறுகின்றோம். அப்படிக் கூறுவதற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வதுதானே அழகு.

    Like

  9. உங்கள் கருத்துக்கு எதிர் கருத்துக் கூறினால் நான் பார்பனனா? அடப்பாவமே….

    Like

  10. மணி,உங்களுக்கு நான் எழுதிய பதிலில் உங்கள் கருத்தில் இருக்கின்ற போதாமையையும், குறைபாடுகளையும் தான் சுட்டி காட்டி இருக்கின்றேன்

    Like

  11. >பாலசிங்கம் பிரபாகரன் கூட்டிய அந்த பிரஸ் மீட்டில்தான் பிரபாகரன் துன்பியல் சம்பவம் என்று கூறினார் மேற்கொண்டு அந்த படுகொலையைப் பேச மறுத்துவிட்டார்.. மேலும் நிருபர்கள்கேள்விக் கணைகளை தொடத்தவுடன் பாலசிங்கன் ஆத்திரம் கொண்டு அவ்வளவு துரம் ஏன் வந்தீர்கள் கொலையைப் பற்றி கேள்வி கேட்கவா அல்லது ஈழத் தமிழர்கள் பற்றிப் பேசவா என்று எரிந்து வீழந்தார் அதிலிருந்தே தெளிவாக தெரியவில்லையா….

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑