ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆழ்வாப்பிள்ளை

bavani-2ஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆழ்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர்.  ஈழத்தில் பெண்ணிய நோக்கிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார்.  ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார்.  1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு பெற்றது” என்கிற சிறுகுறிப்புடன் வெளியாகியிருக்கின்றது.  அவர் அக்காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது எழுதிய கதையாக இது இருக்கலாம்.  Continue reading

பாட்டி சுடாத வடை : கனடாவில் சிறுவர் இலக்கியம்

Arani 2அண்மையில் வழமைபோல ரொரன்றோ முருகன் புத்தக நிலையத்துக்குச் சென்றிருந்தபோது பாட்டி சுடாத வடை என்கிற அழகிய முகப்புடன் கூடிய புத்தகத்தினைப் பார்க்கக் கிடைந்தது.  சிறுவர் நூல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்ற இன்றைய சூழலில் (குறிப்பாக கனடாவில் அல்லது புலம்பெயர் நாடுகளில்) சிறுவர்களுக்கான நூலொன்றினைக் காண நேர்ந்தது ஈர்க்கவே அதனை எடுத்துப் பார்த்தேன்.  இந்த நூலினைக் கனடாவைச் சேர்ந்த ஆரணி ஞானநாயகன் என்கிற மாணவி எழுதியிருப்பது இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.  Continue reading

குறமகள் என்றோர் ஆளுமை

சிறுபிராயம்

KMஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், பெண்நிலைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவரும் என்ற வகையில் தவிர்க்கவே முடியாத ஆளுமைகளில் குறமகளும் ஒருவர் ஆவார்.  1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற காங்கேசன்துறை என்கிற கிராமத்தில் ”முக்கந்தர்” எம். ஏ. சின்னத்தம்பி என்பவருக்கும் செல்லமுத்து என்பவருக்கும் மூத்தமகளாகப் பிறந்த இவரது உண்மைப்பெயர் வள்ளிநாயகி என்பதாகும்.  அந்நாட்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த வியாபாரங்களில் ஒப்பந்தக்காரராக குறமகளின் தந்தை பணியாற்றியதால் ஒப்பந்தக்காரர் என்பதற்குரிய தெலுங்குச்சொல்லான முக்கந்தர் என்பது அவரது பெயருடன் ஒட்டிக்கொண்டது.  இவரது சிறுவயதுப் பிராயம் பெண்கள் கல்வி என்பது ஆரம்பநிலைகளில் இருந்தபோதும் பெண்கள் ஆரம்பக்கல்வி பெறுவது என்பது பரவலாகத் தொடங்கியிருந்த காலம்.  Continue reading