ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு நவம்பர் 12. 2022 அன்று Scarborough Village Recreation Centre மண்டபத்தில் இடம்பெற்றது. தாய்வீடு, காலம் ஆகிய இதழ்கள் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வினை நான் ஒருங்கிணைத்திருந்தேன். நிகழ்வில் தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துகள் குறித்து எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் அவர்களும், தெளிவத்தை ஜோசப்புடனான தம் நினைவுகள் குறித்து பி.ஜெ. டிலிப்குமார் மற்றும் செல்வம் அவர்களும் உரையாற்றினார்கள். மலையகத்தின் இன்றைய நிகழ்வு குறித்த உரையினை சுபாஸ் சுந்தரராஜ் அவர்கள் ஆற்றியிருந்தார். Thadayam World யூ ட்யூப் தளத்திற்காக கிருபா கந்தையா அவர்கள் தொகுத்திருந்த இந்தக் காணொலியினை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.
தெளிவத்தை ஜோசப்பின் நினைவேந்தல் நிகழ்வு

Leave a Reply