ஈழக்கூத்தன் தாசீசியஸ்

இந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும்.  பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.  அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது.  அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம்.  இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.

பா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து

அகதியாதல், போரின் அவலம், பின் போர் விளைவுகள் ஏற்படுத்தும் அஞர் என்பன எப்படி எல்லைகளும் கண்டங்களும் கடந்து மானுடத்தைப் பாதித்தன என்பதையும், இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் கூட தம் நினைவுகளையும் வடுக்களையும் எப்படி பொருட்களூடாகவும் ஞாபகச் சின்னங்களூடாகவும் பேணி அதை அஞரிலிருந்து கடப்பதற்கான ஒருவிதமான கருவிகளாகவும் கையாளுகின்றனர் என்பதை ஜயகரனின் கதைகளில் காணலாம். 

DIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்!

ஏற்றங்களும் இறக்கங்களும் சேர்க்கைகளும் பிரிவுகளும் இழப்புக்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது மீள மீள நினைவூட்டப்பட்டாலும் இந்த இரவில் இருந்து திரும்பிப்பார்க்கின்றபோது இறந்துபோன நண்பர்களின் பிரிவுகளும் அவர்களுடன் சேர்ந்த களித்த, கழித்த தருணங்களின் தடங்களுமே நினைவெல்லாம் தளும்பிக்கிடக்கின்றன.  வாழ்வில் தவிர்க்கவே முடியாத யதார்த்தம் மரணம் என்றபோதும் நெஞ்சார்ந்து கூடிப் பழகினவர்களின் மரணந்தரும் வலிகூட மரணத்திற்கொப்பானது என்பதே அனுபவமாகின்றது.  கருணா அண்ணையுடன் நான் நெருக்கமாகப் பழகியது மிகக் குறுகிய காலமே என்றாலும் அந்தத்தாக்கங்கள் இருந்தே தீரும். கருணா அண்ணையை நான்... Continue Reading →

வரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு

சத்தியன் சமகாலத்தின் முக்கியமான தமிழ்வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவராவார்.  தமிழ்ப்பாஷை நூலின் பதிப்பாசிரியரும் மோகனாங்கியின் பதிப்பாசிரியர்களில் ஒருவருமான சத்தியன் இலக்கிய வரலாறு குறித்துத் தொடர்ச்சியாக உரையாடியும் செயற்பட்டும் வருபவராவர்.  IBC தொலைக்காட்சியின் இன்றைய விருந்தினர் நிகழ்வில் சத்தியன் கலந்துகொண்டு கூறுகின்ற தகவல்கள் மிக முக்கியமானவை.  அதற்கான வீடியோ இணைப்பினைக் கீழே காணலாம். மோகனாங்கியை தேடிய சத்தியனின் பயணத்தினைப் பற்றி முன்னர் நான் எழுதிய கட்டுரைக்கான இணைப்பையும் இங்கே இணைத்துள்ளேன் https://arunmozhivarman.com/2018/02/08/mohanaangi/ சத்தியன் பதிப்பாசிரியராக இருந்த தமிழ்ப்பாஷை நூலினை நூலக... Continue Reading →

இன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை

தெணியான் ஈழத்தின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார்.  இவரது இயற்பெயர் கந்தையா நடேசு என்பதாகும். ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருக்கின்ற பொலிகண்டி என்ற கிராமத்தில் “தெணி” என்ற இடத்தில் பிறந்தவர்.  அவரது வீட்டின் பெயரும் தெணியகம் என்பதாகும்.  இன்று ஈழத்தில் கிராமங்களுக்குப் பெயர்கள் இருப்பதுபோல முன்னர் ஒவ்வொரு காணிகளுக்கும் வீடுகளுக்கும் பெயர்கள் இருந்தன என்பதை அறிந்திருப்பீர்கள்.  அந்தப் பெயரினையே தனது புனைபெயராகவும் தெணியான் வரித்துகொண்டார்.  தெணியான் முற்போக்கு இயக்கத்துடன் சேர்த்து அடையாளம் காணப்படுபவர்.  சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகவும் தூண்டியாகவும்... Continue Reading →

ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்

ஈழத்து இலக்கியம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தொடர்ச்சியாக உரையாடுகின்றபோது ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்கவேண்டி இருக்கின்றது.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதான ஒரு கருதுகோள் அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகின்றபோது அதன் உண்மைத்தன்மை பற்றியும் குறுக்குவெட்டுத் தோற்றம் பற்றியும் அலசவேண்டியது அவசியமாகின்றது.  அப்படிப் பார்க்கின்றபோது அவற்றின் செல்நெறி, இலக்கியத் தரம், கலைத்துவம், அவற்றின் உள்ளடக்கம் தனித்துவம் என்பவற்றோடு சமகாலத்தில் இலக்கிய முயற்சிகளும் செயற்பாடுகளும் ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலும் எவ்வாறு பரவியும், வளர்ச்சியடைந்தும் இருக்கின்றன என்பதைக் குறித்துக்... Continue Reading →

“சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் – சில விமர்சனங்கள்” நூலினை முன்வைத்து ஓர் உசாவல்

வாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் செய்வதாக அமைந்துவிடும் நூல்கள் எல்லாம் முக்கியமானவையாகவே அமைந்துவிடுகின்றன.  வாசிப்பு தரும் அனுபவமானது இதற்கு முன்னர் வாசித்த ஏதோ நூலுடனோ, கண்ட சம்பவத்துடனோ தனி அனுபவத்துடனோ தொடர்புபட்டதாகி, அனுபவத்தின் நீட்சியை ஏற்படுத்திவிடுகின்றது.  அத்தகைய, அனுபவ நீட்சியை ஏற்படுத்திய ஒரு நூலாக செல்வமனோகரன் எழுதிய ”சொற்களால் அமையும் உலகு” என்ற நூலினைச் சொல்லமுடியும். செல்வமனோகரன் எனக்கு முதலில் ஒரு பேச்சாளராகத்தான் அறிமுகமானார்.  நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில்,... Continue Reading →

க. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை

தொடர்ச்சியாக பல்வேறு கலை இலக்கியப் பரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற நவம் அவர்களின் பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய மூன்று நூல்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான்காவது பரிமாணம் வெளியீடாக வந்திருந்தன.  கனடாவின் ஆரம்பகால பதிப்பகங்களின் ஒன்றான நான்காவது பரிமாணம் பதிப்பகத்தின் ஊடாக பல்வேறு நூல்களை வெளியிட்டவராக நவம் அவர்கள் இருந்தபோதும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது எழுத்துகள் நூலுருவாக்கம் காணவில்லை.  ஆயினும் மிகவும் சிரத்தையுடனான தயாரிப்புகளுடனும் தெளிவுடனும் நவம் அவர்கள்... Continue Reading →

தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்

ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.  ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது.  இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன.  இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →

காத்திருப்பு கதை குறித்து…

 தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது.  பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம்.  அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது.  ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: