பால் – பாலியல், காமம் – காதல், பெண் – பெண்ணியம்: ஓர்ஆண்நிலைநோக்கு : உரையாடல் ஒன்றுக்கான குறிப்புகள்

குறிப்பு: மீராபாரதி எழுதிய பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு என்கிற நூலின் வெளியீட்டினை முன்வைத்து ரொரன்றோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்படி நூலாசிரியர் மீராபாரதி கேட்டிருந்தார்..  இந்நூல் பேசுகின்ற விடயமும் அது பற்றி மீராபாரதி அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும் முக்கியமானது.  அந்த வகையில் இந்நூலையும் அதில் உள்ள கட்டுரைகளையும் தன் அக்கறையின் பாற்பட்டும், தான் கொண்ட கருத்தியலின் மீதிருக்கும் நம்பிக்கையின் பாற்பட்டும் மீராபாரதி தன்னோடும் சமூகத்தோடும் தொடர்ச்சியாக நடத்திய... Continue Reading →

என். செல்வராஜாவின் நமக்கென்றொரு பெட்டகமும் நூலகச் சிந்தனைகளும்

செல்வராஜா அவர்கள் - பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானது போல - எனக்கும் நூல் தேட்டம் செல்வராஜா என்றே அறிமுகமானவர்.  புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து நான் புத்தக வாசிப்பிற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.   இப்பொழுது ரொரன்றோவில் தமிழ்ப் புத்தகக் கடையென்று ஒன்றுதான் இருக்கின்றது.  ஆனால் அந்தக் காலப்பகுதியில் 5 புத்தகக் கடைகள் இருந்தன.  இவற்றைத் தவிர தனிப்பட்ட முயற்சிகளால் புத்தகங்களை எடுத்து விற்பவர்களும் இருந்தனர். ... Continue Reading →

அ. யேசுராசாவின் “பதிவுகள்” நூல் குறித்து…

கலை இலக்கியத்தின் போக்குக் குறித்த விவாதங்களும் உரையாடல்களும் ஈழத்தில் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியாக எழுபதுகளைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் இயங்கத் தொடங்கிய யேசுராசா இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம்,  இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் இன்றுவரை தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர்.  இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய இதழ்களுக்குச் சரியான முன்மாதிரியாக விளங்குகின்ற “அலை” இதழின் ஆரம்பத்தில் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவும் விளங்கியவர்; தவிர மாணவர்களுடையே... Continue Reading →

”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம்

நூலக நிறுவனத்தின் பொறுப்பொன்று காரணமாக அதன் எண்ணிம நூலகத்தில் இருக்கின்ற புத்தகங்களை தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது மேமன் கவி தொகுத்த ”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” என்கிற நூலினைப் பார்த்ததும் அதன் தலைப்பு ஏற்படுத்திய கவனயீர்ப்பினால் உடனேயே தரவிறக்கி வாசிக்கத் தொடங்கினேன். நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் நான் ஊகித்துக் கொண்டதைப் போலவே 2001 ஆம் ஆண்டு ஈழத்து இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் எழுத்தாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவர் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் பணிகளுக்காக கௌரவ... Continue Reading →

எதைச் சொல்லித் தேற்றுவது!

புதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார்.  தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார். 

பா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து

அகதியாதல், போரின் அவலம், பின் போர் விளைவுகள் ஏற்படுத்தும் அஞர் என்பன எப்படி எல்லைகளும் கண்டங்களும் கடந்து மானுடத்தைப் பாதித்தன என்பதையும், இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் கூட தம் நினைவுகளையும் வடுக்களையும் எப்படி பொருட்களூடாகவும் ஞாபகச் சின்னங்களூடாகவும் பேணி அதை அஞரிலிருந்து கடப்பதற்கான ஒருவிதமான கருவிகளாகவும் கையாளுகின்றனர் என்பதை ஜயகரனின் கதைகளில் காணலாம். 

ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்

ஈழத்து இலக்கியம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தொடர்ச்சியாக உரையாடுகின்றபோது ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்கவேண்டி இருக்கின்றது.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதான ஒரு கருதுகோள் அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகின்றபோது அதன் உண்மைத்தன்மை பற்றியும் குறுக்குவெட்டுத் தோற்றம் பற்றியும் அலசவேண்டியது அவசியமாகின்றது.  அப்படிப் பார்க்கின்றபோது அவற்றின் செல்நெறி, இலக்கியத் தரம், கலைத்துவம், அவற்றின் உள்ளடக்கம் தனித்துவம் என்பவற்றோடு சமகாலத்தில் இலக்கிய முயற்சிகளும் செயற்பாடுகளும் ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலும் எவ்வாறு பரவியும், வளர்ச்சியடைந்தும் இருக்கின்றன என்பதைக் குறித்துக்... Continue Reading →

தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்

ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.  ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது.  இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன.  இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும்... Continue Reading →

காத்திருப்பு கதை குறித்து…

 தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது.  பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம்.  அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது.  ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →

ஈழத்தின் முதல் தலைமுறைப் பெண்படைப்பாளி பவானி ஆழ்வாப்பிள்ளை

ஈழத்தின் மூத்த, முதல் தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான பவானி ஆழ்வாப்பிள்ளை, அறுபதுகளில் எழுத ஆரம்பித்தவர்.  ஈழத்தில் பெண்ணிய நோக்கிலான கருத்துகளை தனது படைப்புகளினூடாக வெளிப்படுத்திய முதல் பெண் எழுத்தாளர் இவரே என்று ஈழத்துச் சிறுகதை வரலாறு நூலில் செங்கை ஆழியான் குறிப்பிடுகின்றார்.  ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற அளவெட்டிக்கிராமத்தில் பிறந்த இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியும் ஆவார்.  1958/59 ஆம் ஆண்டுக்குரிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கத்தின் இதழாக “இளங்கதிரில்” இவரது அர்ப்பணம் என்கிற சிறுகதை “மதிற்பிற்குரியது, நூற்பரிசு... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: