ஈழப்போராட்டம் குறித்த பிரச்சனைகள்

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.  இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம், ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக... Continue Reading →

கடுப்பூட்டும் கட்டுரைகள் – அருண்மொழிவர்மனின் ‘தாயகக்கனவுகள்’ நூல் குறித்த ஒரு பார்வையும் சில குறிப்புக்களும் – வாசன்

அருண்மொழிவர்மனின் ‘தாயகக் கனவுகள்’ நூல் பார்வையிடக் கிடைத்தது. ‘பிரதிகளை முன் வைத்து ஓர்  உரையாடல்’  என்ற தலைப்புடன்   தனது வாசிப்பனுபவங்களையும் வாழ்பனுவங்களையும் திரட்டி அவர் எழுதிய 15 கட்டுரைகளின் தொகுப்பாக  நூல் வெளிவந்திருக்கின்றது. ஆழமானதும் விசாலமானதுமான அவரது வாசிப்பும், அந்த  எல்லைகளின் விஸ்தீரணமும்  வியக்க வைக்கின்றது. தமிழிலும் ஆங்கிலத்திலுமான அவரது வாசிப்புப் பயணமானது    மிலன் குந்த்ரோவின் ‘மாயமீட்சி’ இல் இருந்து தமிழினி, ஷோபா சக்தி, அகரமுதல்வன் போன்றவர்களின் படைப்பிலக்கியங்கள் ஊடாக பயணித்து,  கோர்டன் வைஸ் இன் ‘The... Continue Reading →

தாயகக் கனவுகள் நூல்வெளியீடு – தீபன் சிவபாலனின் தொகுப்பும் உரையும்

“தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற தலைப்பில் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் இடம் பெற்றது. நிகழ்வில் தீபன் சிவபாலன் ஆற்றிய உரை. https://www.youtube.com/embed/UQc-VZlR5IA நன்றி - வடலியின் யூட்யூப் தளம்

நூல்தேட்டப் பதிவு

நூல்தேட்டப் பதிவு 894.8(64)சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல். அருண்மொழிவர்மன் (இயற்பெயர்: சுதர்சன்ஸ்ரீநிவாசன்).கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1;,1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).xix, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5x14 சமீ.,ISBN : 978-1-7779375-1-5. ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில்அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி... Continue Reading →

நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து…

ஈழப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் குறித்தும் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும், பின்போர்க்கால நிலைமைகள் குறித்ததுமான பல்வேறு தொகுப்புகளும் அறிக்கைகளும் பதிவுகளும் வெவ்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளன என்றாலும் இன்று வரை போரினால் நிகழ்த்தப்பட்ட அழிவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு முடியவில்லை என்பதே உண்மை.  அதுபோல போர் நிறைவடைந்த பின்னரும் தொடருகின்ற பண்பாட்டு இனப்படுகொலையும் அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அம்பலப்படுத்தப்படவில்லை.  இவை குறித்த செய்திகளும் பதிவுகளும் பெரும்பாலும் தனித்த சம்பவங்களாகவே கடந்து செல்லப்படுகின்றன.  இத்தகைய சூழலில் இந்த அழிவுகளை... Continue Reading →

பௌத்த குருமாரும் இலங்கை அரசியலும்

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் ஞானசார தேரர் தலைமையில் நீதிமன்றத் தீர்ப்பினைப் புறம் தள்ளி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்திருக்கின்ற நிகழ்வு இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் காட்டுகின்ற செல்வாக்கினையும் அதிகாரத்தையும் மீண்டும் வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அங்கே சிறுபான்மையினருக்கு எந்தவிதமான சம உரிமைகளும் இலகுவில் கிடைக்கப்போவதில்லை என்பதையும் காட்டுகின்றது சமவுரிமைக்கும் சமத்துவத்துக்கும் குரல் எழுப்புகின்றனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தவிடயம் குறித்துப் போராடவேண்டும். செப்ரம்பர் 2019 தாய்வீடு பத்திரிகையில் க. சண்முகலிங்கம் எழுதிய பௌத்த குருமாரும் இலங்கை... Continue Reading →

காத்திருப்பு கதை குறித்து…

 தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது.  பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம்.  அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது.  ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →

மானுடத்தின் வரலாற்றுக் களங்கம்

முற்குறிப்பு ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் நுழைந்து பேரழிவுகளையும் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றி இவ்வாண்டு 30 ஆண்டுகள் ஆகின்றது.  இந்த நேரத்தில் ரொரன்றோவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு என்கிற மாதப் பத்திரிகை மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்புப் பகுதியினை ஓகஸ்ட் 2017 இற்குரிய இதழில் வெளியிட்டுள்ளது.  அதன் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பிற்கான முன்னுரையையும் சிறப்புப்பகுதியின் PDF இனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் ஈழத்தமிழர்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இந்தியாவின் செல்வாக்கு... Continue Reading →

வெற்றிச்செல்வியின் “ஒரு போராளியின் காதலி”

ஒரு போராளியின் காதலி என்கிற இந்த நாவலானது ஈழப்போரின் இறுதிக்கட்டங்களின் நடந்த சம்பவங்களை வைத்து எழுதப்பட்டிருக்கின்றது.  இதனை எழுதிய வெற்றிச்செல்வி மன்னாரில் 1974 இல் பிறந்து 1991 இலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தன்னை இணைத்து ஈழப்போராட்டத்தில் ஈடுபட்டவர்.  வெடிவிபத்தொன்றில் தனது வலது கண்ணையும் வலது கையையும் இழந்த வெற்றிச்செல்வி தொடர்ந்தும் ஊடகத்துறையில் நிதர்சனம், புலிகளின் குரல், சுதந்திரப் பறவைகள் ஆகியவற்றில் தனது பங்களிப்புகளைத் தொடர்ந்து செய்துள்ளார்.  ஆரம்பத்தில் வலது கைப் பழக்கமுள்ளவராக இருந்தபோதும் பின்னர் இடது கையால்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: