”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் – பா.அகிலன்”

akilan-2யாழ்ப்பாணம் அராலியைப் பிறப்பிடமாகக் கொண்ட பாக்கியநாதன் அகிலன் நல்லூரை நெடுங்காலமாக வாழிடமாகக் கொண்டிருக்கிறார். தனது ஆரம்பப் பாடசாலைக் கல்வியை வவுனியா சைவப்பிரகாச வித்தியாசாலை, நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் மிகக் குறுகிய காலம் பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் சென் ஜோன் பொஸ்கோவிலிருந்து பெற்றுக் கொண்டார்.  பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றில் (நுண்கலை) பட்டமும் குஜராத்திலுள்ள பரோடா எம்.எஸ் பல்கலைக்கழகத்தில் கலை விமர்சனத்தில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார்.  தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்று விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.  காண்பியக்கலைகள், நாடக அரங்கியல் மற்றும் மரபுரிமை ஆகிய துறைகள் சார்ந்து எழுதிவரும் அவர் தற்போது யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற கலை, கட்டடக்கலை, வடிவமைப்புக்கான இலங்கை ஆவணக் காப்பகத்தில் ஷாமினி பெரேரா, சனாதனன் ஆகியவர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார். Continue reading “”மரபுரிமையக் காப்பதும் ஓர் அரசியற் செயற்பாடுதான் – பா.அகிலன்””

“தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்பது மனிதருக்கான இயல்பு! -அ. யேசுராசாவுடன் ஓர் உரையாடல்-

யேசுராசா1946 டிசம்பர் 30 அன்று ஈழத்தின் வடகரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருக்கின்ற குருநகர் என்கிற கடலோரக் கிராமத்தில் பிறந்த யேசுராசா அவர்கள் ஈழத்தின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரும், இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமாவார்.  இவர் ஈழத்தில் இலக்கியத்தின் போக்குப் பற்றிய விவாதங்களும் உரையாடல்களும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த எழுபதுகளில் இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம், இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர்.  இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய இதழ்களுக்குச் சரியான முன்மாதிரியாக விளங்குகின்ற “அலை” இதழின் ஆரம்பத்தில் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவும் விளங்கியவர் அ. யேசுராசா.  தவிர மாணவர்களுடையே கலை இலக்கியம் பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்ற நோக்குடன் வெளிவந்த கவிதை, தெரிதல் இதழ்களின் ஆசிரியராகவும் பங்களித்திருக்கின்றார்.  ஒரு இடைவெளிக்குப் பின்னர் தெரிதல் இதழ் தற்போது மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது.  இதழியல் துறையில் திசை என்கிற வாரப் பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியிருக்கின்றார். Continue reading ““தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்பது மனிதருக்கான இயல்பு! -அ. யேசுராசாவுடன் ஓர் உரையாடல்-“

ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள்

DSC_4714-05ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாடகம், பட்டிமன்றம், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டவருமான குறமகள் என்று பரவலாக அறியப்பட்ட வள்ளிநாயகி இராமலிங்கம் ஈழத்தின் வடக்கிலே இருக்கின்ற காங்கேசன்துறையில் ஜனவரி 9 ஆம் திகதி 1933 ஆம் ஆண்டில் பிறந்தவர்.  தனது பாடசாலைக்கல்வியைக் கல்வியை நடேஸ்வராக் கல்லூரியிலும், இளவாலை கொன்வென்டிலும் கற்ற இவர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் பயிற்றப்பட்ட ஆசிரியராவார்.  இந்தியாவில் இருக்கின்ற உத்கல் என்கிற பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டதாரியாக கல்விகற்றவர்.  பின்னர் கொழும்புப் பல்கலைக்கழத்தில் நாடகவியலிலும், கல்வியியலிலும் டிப்ளோமா தகைமைகளைப் பெற்றுக்கொண்டவர். Continue reading “ஒழுக்க மதிப்பீடுகள் பெண்ணுக்கு மாத்திரம் இருக்கமுடியாது – குறமகள்”

“தமிழரின் வாழ்வியற்கலையே சிலம்பம்!”

digi-silambam-2015-first-009பழந்தமிழரின் ஆதிக்கலைகளில் முக்கியமானது சிலம்பம்.  சிலம்பல் என்கிற சொல்லுக்கு ஓசை என்பது பொருள்.  இன்றும் கூட வழக்கத்தில் தண்ணீருக்குள் கையையோ காலையோ வீசு சிறுவர்கள் ஓசை எழுப்புகின்றபோது “சிலம்பாதே” என்று பெரியோர்கள் கூறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  சிலம்ப விளையாட்டில் கம்பினை வேகமாக வீசும்போது அது காற்றைக் கிழித்து ஓசை எழுப்புவதாலும், கம்புகள் ஒன்றுடன் ஒன்று மோதி ஓசை எழுப்புவதனாலும் அதற்கு சிலம்பம் என்கிற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.  மலைகளில் தொடர்ச்சியாக அருவிகளதும், பறவைகளதும் மிருகங்களதும் ஓசைகள் கேட்டுக்கொண்டிருப்பதால் மலைகளுக்கும் சிலம்பம் என்கிற பெயர் உண்டு என்றும், அதன் காரணமாக மலைகளில் வாழும் கடவுளாக முருகனுக்கு சிலம்பன் என்ற பெயர் உருவானதென்றும், அதன் வழி வேடுவர் தலைவனான முருகன் வழி பரப்பப்பட்ட கலைக்கும் சிலம்பம் என்கிற பெயர் உருவானது என்போரும் உள்ளனர்.  Continue reading ““தமிழரின் வாழ்வியற்கலையே சிலம்பம்!””

“புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை”

A. Veluppillaiஈழத்தமிழர்களின் மிக முக்கியமான புலமையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ் மொழியிலும், சாசனவியலிலும், மதங்கள் பற்றியும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார்.  தனது 28வது வயதிலேயே இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்த அவர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் மாணவர்.  வடமராட்சியில் இருக்கின்ற புலோலியில் 1936ல் பிறந்தவர்.  தனது ஆரம்பக் கல்வியை புலோலித் தமிழ்ப்பாடசாலையிலும், பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றவர்.  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர்.  பின்னர் 1984 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர்.  இது தவிர கேரளப் பல்கலைக்கழகத்திலும், திராவிட மொழியியல் நிறுவனத்திலும், சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும், அரிசோனாப் பல்கலைக்கழகத்திலும், எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் ஆய்வாளராகவும், பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். Continue reading ““புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை””