கொன்சர்வேடிவ் கட்சியினரின் தேர்தல் விளம்பரமும் கனேடியத் தமிழரின் மெத்தனமும்

கனேடிய பாராளுமன்ற தேர்தல்கள் மீண்டும் ஒருமுறை (கடந்த 7 ஆண்டுகளில் கனடா சந்திக்கின்ற 4வது பாராளுமன்ற தேர்தல் இது.  இந்த விடயத்தில் இந்தியா கூட கனடாவின் தற்போதைய நிலையை எண்ணிப் பெருமைப்படலாம்).  கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்றா மே மாதம் 2ம் திகதி நடைபெற உள்ளன.  இந்தச் சூழ்நிலையில் Conservative Party of Canada அண்மையில் வெளியிட்ட தனது தேர்தல் விளம்பர வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.  அந்த விளம்பரத்தின் ஒளித்துண்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கனடாவிற்கு... Continue Reading →

தொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்

அண்மைக்காலமாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகக் குறைவென்றாலும், மிக நீண்ட காலத்தின் பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நிறையத் தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தது.  மிக மிக பெரும்பான்மையான தமிழ் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஏனோ தானோ என்ற அளவிலேயே இருந்ததில் எந்த வியப்பும் இல்லை என்றாலும், சில நிகழ்ச்சிகள் பற்றி கவலைப்படுவதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன. கனேடியத் தமிழ் கூறு நல்லுகத்தில் இப்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற சிறுவர் நிகழ்ச்சிகள் அதிக... Continue Reading →

G8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்

கனடாவில் G8 மற்றும் G20 கூட்டங்களுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் G20 என்றால் என்னவென்று கேட்டார். இயலுமானவரை சுருக்கமாக எப்படி விளங்கப்படுத்தலாம் என்று யோசித்தேன். சட்டென்று பொறி தட்டக் கூறினேன் "பாட்ஷா திரைப்படத்தில் ரகுவரன் எல்லாக் கொள்ளைக்காரர்களையும் அழைத்து தாம் ( கொள்ளைக்காரர்கள்) நன்றாக இருக்கவும் மென்மேலும் கொள்ளை அடிக்கவும் தம்மிடையே புரிந்துணர்வுடன் இருப்பது எவ்வளவு அவசியம் என்று (சாத்தான்) வேதம் ஓதுவார். அது போல உலகின் மிகப் பெரிய கொள்ளைக்காரர்களின் பிரதிநிதிகள் 20... Continue Reading →

நம்மை நாமே சிலுவையில் அறைவோம்

1 யூலை மாதம் 11ம் திகதி 20 பேர் கொண்ட இன்னொரு தமிழ்க் குழுவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 23 வயது இளைஞரின் கொலையுடன், அதற்கு சில வாரங்கள் முன்னர் மோதல் ஒன்றின் தொடர்ச்சியாக காரால் இடித்துக் கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது இந்த கோடை காலத்திலும் வழமை போல தமிழ் இனக்குழுக்களின் இடையிலான மோதல் வலுப்பெறத்தான் போகிறது என்பது தெளிவாகின்றது. அதிலும் பெரும்பாலும் 16 வய்து முதல் 28 வயதுக்கு இடையிலான,... Continue Reading →

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகிவரும் கோயில்கள்

”நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை, கோயில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன்” என்ற வசனம் கிட்டத் தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதியால் எழுதப்பட்டது. தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்பட்ட பராசக்தி வசனங்களுல் முக்கிய வசனங்களுள் இதுவும் ஒன்று. (கால ஓட்டத்தில் இந்த வ்சனம் பேசி நடித்த நடிகர் திருப்பதி கணேசா திரும்பிப் போ என்று கழகத் தோழர்களால் கேலி செய்யப்பட்டதும் கருணாநிதி “நான் நாத்திகன், நான் நாத்திகன்”... Continue Reading →

புலம்பெயர் ஊடகங்களும் குளறுபடிகளும்

எந்த விதத்திலும் அழகியலுடன் ஒன்றிக்க முடியாத அளவுக்கு குரூரத்தை எம் வாழ்வுடன் பிணைத்து எம்மை அழைத்துச் செல்லுகின்றது நாம் வாழும் தலைமுறை. ஒரு கொலை நடந்தாலும் பதைக்கின்ற மனம் போய் 10, 20 என்றாகி பின் ஐம்பது, நூறாகி இப்போது இதெல்லாம் சாதாரணம் என்று வாழப் பழகிவிட்டது எம் தலைமுறை. கொத்து கொத்தாக இன அழிப்பு நடந்தாலும், தம் தினசரி வாழ்வை அப்படியே வாழப்பழகி விட்டது ஒரு சமூகம். இத்தனை கொலையும் கண்டு, இத்தனை சதைப்பிடங்களையும், அவை... Continue Reading →

இனத்துக்காகவேனும் திருந்துங்கள்

அண்மையில் இலங்கை அரசினால் செஞ்சோலை மீது நடாத்தப்பட்ட குண்டு வீச்சின்போது கொல்லப்பட்ட 61 பேருக்கும் இரங்கல் தெரிவித்தும் கண்டனம் தெரிவித்தும் கனடாவில் பல நிகழ்வுகள் இடம்ப்ற்றிருக்கின்றன. ஆனால் கனேடிய பத்திரிகைகளான Toronto Star, Sun, National Post, Global Mail என்பன இது பற்றி எதுவிதமான எதிர்வினைகளையும் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது. மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை பெற்ற ஓட்டாவாவில் பாராளுமன்ற முன்றிலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் கூட பத்திரிகைகளை ஈர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய விடயமாகும்.... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: