யாழ்ப்பாணத்து நினைவுகள் என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக நான் எழுதிவந்த சில கட்டுரைகளை, போர் சூழ்ந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் குறிப்பாக 90க்கும் 96க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பதின்மவயதுகளைச் சேர்ந்த ஒருவனின் நினைவுகளின் பதிவுகளாகவே பதிவுசெய்தேன். வெறும் நனவிடைதோய்தலாக மாத்திரமல்லாமல், அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்வியலின் ஒரு பகுதியை இப்பதிவுகள் பதிவுசெய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. இதேபோல, இன்னும் பலரும் தம் அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது அவை மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும். உதாரணமாக இக்கட்டுரைகளை... Continue Reading →
ஒவ்வொரு பாடலிலும்… (யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுக் கூடங்கள்)
“ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஓர் அழகானபாடலினை என்னவளே திரைப்படத்திற்காக எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுத உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். சற்று நினைத்துப்பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்கமுடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்விற்காக பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்துபோன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம்சரமாக ஒன்றுடன்ஒன்று... Continue Reading →
அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்)
யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும்கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த பெருமையும்... Continue Reading →
நான் கடந்த நளபாகம்
உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து... Continue Reading →
185ம் கட்டை, மீசாலை வடக்கு : நினைவுகள்
சோகங்களில் எல்லாம் பெரிய சோகம் சொந்த ஊரை விட்டுப் பிரியும் சோகம் என்று போறாளே பொன்னுத்தாயி பாடலிற்கு முன்னராக பாரதிராஜாவின் குரலில் ஒரு சிறு அறிமுகம் ஒன்று செய்துவைக்கப்படும். நினைவுதெரிந்து எந்த இடப்பெயர்வையும் அனுபவித்திராத அந்தவயதில் இதெல்லாம் ஒரு வலியா என்றுதான் நினைத்திருந்தேன். பின்னாட்களில் அந்த வலியை 1995ம் ஆண்டு ஒக்ரோபர் 30ல் நானும் உணர்ந்தேன். உறவினர் ஒருவரின் மரணச்சடங்கிற்காக என்னையும் ஒரு தம்பியையும் தவிர குடும்பத்தில் மற்ற எல்லாரும் கொழும்பு சென்றிருந்தனர். நாம் அப்பம்மா மற்றும்... Continue Reading →
கையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்
கையால் எழுதும் கலையானது மெல்ல ஒழிந்துவருகின்றது என்று சில ஆண்டுகளிற்கு முன்னர் வெளியான ரொரொன்றோ ஸ்ரார் நாளிதழில் ஒரு கட்டுரயொன்று வெளியாகி இருந்தது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுத்தெழுதும் வழக்கமும், அதற்காக பயிற்சியளிப்பதும் கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. அதுபோல கடிதம் எழுதும் வழக்கமும் மிக மிகக் குறைந்துவிட்டது. நாம் கடைசியாக எப்போது உறவினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ கடிதம் ஒன்றை எழுதினோம் என்றோ, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் என்றோ நினைத்துப்பார்க்க திகைப்பாக இருக்கின்றது.... Continue Reading →
நானும் நூலகங்களும்
நூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு,... Continue Reading →