அகதியாதல், போரின் அவலம், பின் போர் விளைவுகள் ஏற்படுத்தும் அஞர் என்பன எப்படி எல்லைகளும் கண்டங்களும் கடந்து மானுடத்தைப் பாதித்தன என்பதையும், இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் கூட தம் நினைவுகளையும் வடுக்களையும் எப்படி பொருட்களூடாகவும் ஞாபகச் சின்னங்களூடாகவும் பேணி அதை அஞரிலிருந்து கடப்பதற்கான ஒருவிதமான கருவிகளாகவும் கையாளுகின்றனர் என்பதை ஜயகரனின் கதைகளில் காணலாம்.
காத்திருப்பு கதை குறித்து…
தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது. பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம். அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது. ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” -... Continue Reading →
புழுங்கலரிச் சோற்றுடன் குஞ்சுக்கணவாயின் புளி அவியல் | ”ஏழு கடல் கன்னிகள்”
தமயந்தி என்கிற பெயரினை, ஒரு ஆளுமையாக நிறையக் கேட்டிருக்கின்றேன். அவரது புகைப்படக் கண்காட்சி - அனேகம் அவரது முதலாவது கண்காட்சியாக இருக்கவேண்டும் - யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் இடம்பெற்றதனை யேசுராசா ”பதிவுகள்” என்கிற தனது நூலில் பதிவுசெய்திருக்கின்றார். அவர் எடுத்த நிறையப் புகைப்படங்களை அவரது முகநூல் பதிவுகளூடாகப் பார்த்திருக்கின்றேன். சாதியம், அரசியல் உள்ளிட்ட கருத்துகளை குறிப்புகளாகவும், கட்டுரைகளாகவும் வாசித்திருக்கின்றேன். தவிர, எனக்கும் கூத்துக்கலை மீது ஆர்வம் இருப்பதால் அவர் பகிரும் கூத்துகள் தொடர்பான விடயங்களையும் காணொலிகளையும் பார்த்திருக்கின்றேன். ஈழத்துக்... Continue Reading →
ஓர் எழுதுவினைஞனின் டயறியை முன்வைத்து…
ஆனந்தமயிலின் எழுத்துகளையும், அவ்வாறு ஒரு எழுத்தாளர் இருந்தார் என்பதையும் மிக மிகத் தாமதமாக, அவர் இறந்தும் சில வருடங்களுக்குப் பின்பாகவே நான் அறிந்துகொண்டேன். சென்ற ஆண்டு யேசுராசா அவர்கள் எழுதிய நினைவுக்குறிப்பு ஒன்றினூடாகவே ஆனந்தமயில் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. சில காலங்களின் பின்னர் “ஓர் எழுதுவினைஞனின் டயறி” என்கிற அவரது சிறுகதைக் தொகுதியும் கிடைத்தது. படைப்பு என்பது ஓயாமல் பிரசவித்துக் கொண்டிருப்பது அல்ல, அது ஒரு எழுத்தாளரது இயல்பான மனவெழுச்சியாலும், பாதித்த, மனதிலும் நினைவுகளிலும் அசைபோட்ட... Continue Reading →
கதாகாலம்: மகாபாரத மறுவாசிப்பு
அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே. எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரசகதைகளும் தீனியிட்டு வளர்த்துவந்தன. அதே நேரம் எமக்குப் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்களான சண்முகராஜாவும், கோபியும் கூட வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன்,... Continue Reading →
“புறநானூறு மீது தமிழ்ப்பண்பாடு வைத்த விமர்சனமே திருக்குறள் என்பார் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை”
ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான புலமையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ் மொழியிலும், சாசனவியலிலும், மதங்கள் பற்றியும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார். தனது 28வது வயதிலேயே இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்த அவர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் மாணவர். வடமராட்சியில் இருக்கின்ற புலோலியில் 1936ல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை புலோலித் தமிழ்ப்பாடசாலையிலும், பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர். பின்னர் 1984 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத்... Continue Reading →
ஜெயகாந்தன் காலத்திற்குப் பின்னர் ஜெயகாந்தன் பற்றிய பார்வை
ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் பிற எவரும் பெற்றிராத அளவுக்கு பிரபல்யத்தையும், பெரும் ரசிகர் கூட்டத்தினையும் பெற்றிருந்தவர். படைப்பிலக்கியம் சார்ந்து மட்டுமல்லாமல் அரசியல், திரைப்படம் என்று பல்வேறு துறைகளிலும் தீவிரமாக ஈடுபட்டவர். வரலாற்றில் ஜெயகாந்தன் என்கிற பொருளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இன்றைய நிகழ்வில் பேசப்படுகின்ற விடயங்களூடாகவும் ஜெயகாந்தனின் இந்தப் பன்முக ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம். நான் மிகச் சிறுவனாக இருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் எழுதுவதை நிறுத்தியிருந்தார். அதன்பின்னர் அவரது மீள் பிரவேசம் நிகழ்ந்தாலும் அது தொடர்ச்சியான இயக்கமாக இருக்கவில்லை. எனவே,... Continue Reading →
ஐ. சாந்தனின் “காலங்கள்”
எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும். அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன. அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த... Continue Reading →
நந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”
சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் இணைந்து நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்கிற சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிய அறிமுகம் ஒன்றினைச் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தனர். அதன் நிமித்தம் நெல்லிமரப் பள்ளிக்கூடத்தினை வாசித்ததன் ஊடாக நந்தினி சேவியரின் அறிமுகம் எனக்கு நிகழ்ந்தது. அதன் பின்னர் அண்மையில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட “நந்தினி சேவியர் படைப்புகள்” என்கிற தொகுப்பினையும் வாசிக்கக் கிடைத்தது. ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் படைப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிகரமானது என்றாலும், அவர் எழுதிய 30 சிறுகதைகளில் 16 மட்டுமே... Continue Reading →
ஒருநாள் : சாத்தனூர் என்னும் “கனவுக் கிராமம்”
ஒரு மாற்றத்திற்காக தொடர்ச்சியாக சில புனைவுகளைப் படித்துக்கொண்டிருப்பதுவும் நல்லதோர் அனுபவமாகவே இருக்கின்றது. அந்த வகையில் க.நா.சு எழுதிய சர்மாவின் உயில், ஒருநாள் ஆகிய இரண்டு புனைவுகளையும் அடுத்தடுத்து வாசிக்கமுடிந்தது. “ஒருநாள்”, சாத்தனூர் என்கிற கற்பனை கிராமத்தில் மேஜர் மூர்த்தி கழிக்கின்ற ஒருநாளில் நிகழ்கின்ற நிகழ்வுகளையும், அவனது நினைவு மீட்டல்களையும், அவன் நிகழ்த்துகின்ற உரையாடல்களையும், அவை ஏற்படுத்துகின்ற சிந்தனைகளையும் கொண்டு எழுதப்பட்டது. அமைப்பு ரீதியில் இதனை குறுநாவல் என்று சொல்லலாம் என்று நினைக்கின்றேன். கிருஷ்ணமூர்த்தி என்கிற மூர்த்தி பெற்றோரை... Continue Reading →