சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் இணைந்து நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்கிற சிறுகதைத் தொகுப்பினைப் பற்றிய அறிமுகம் ஒன்றினைச் செய்வதற்குத் திட்டமிட்டிருந்தனர். அதன் நிமித்தம் நெல்லிமரப் பள்ளிக்கூடத்தினை வாசித்ததன் ஊடாக நந்தினி சேவியரின் அறிமுகம் எனக்கு நிகழ்ந்தது. அதன் பின்னர் அண்மையில் விடியல் பதிப்பகம் வெளியிட்ட “நந்தினி சேவியர் படைப்புகள்” என்கிற தொகுப்பினையும் வாசிக்கக் கிடைத்தது. ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் படைப்புகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பது மகிழ்ச்சிகரமானது என்றாலும், அவர் எழுதிய 30 சிறுகதைகளில் 16 மட்டுமே இவ்விதம் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பதும், ஏனைய 14 கதைகளின் பிரதிகளைப் பெறமுடியவில்லை என்பதும் கவலைக்குரியதாக இருக்கின்றது. Continue reading