ஓர் எழுதுவினைஞனின் டயறியை முன்வைத்து…

ஆனந்தமயில்ஆனந்தமயிலின் எழுத்துகளையும், அவ்வாறு ஒரு எழுத்தாளர் இருந்தார் என்பதையும் மிக மிகத் தாமதமாக, அவர் இறந்தும் சில வருடங்களுக்குப் பின்பாகவே நான் அறிந்துகொண்டேன்.  சென்ற ஆண்டு யேசுராசா அவர்கள் எழுதிய நினைவுக்குறிப்பு ஒன்றினூடாகவே ஆனந்தமயில் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது.  சில காலங்களின் பின்னர் “ஓர் எழுதுவினைஞனின் டயறி” என்கிற அவரது சிறுகதைக் தொகுதியும் கிடைத்தது.  படைப்பு என்பது ஓயாமல் பிரசவித்துக் கொண்டிருப்பது அல்ல, அது ஒரு எழுத்தாளரது இயல்பான மனவெழுச்சியாலும், பாதித்த, மனதிலும் நினைவுகளிலும் அசைபோட்ட விடயங்களை இயல்பாகவும் கலையமைதியுடனும் வெளிப்படுத்துவதாலும் உருவாகுபவையே நல்ல படைப்புகளாகும் என்கிற வாதத்தை ஒட்டியவை ஆனந்தமயிலின் சிறுகதைகள். Continue reading “ஓர் எழுதுவினைஞனின் டயறியை முன்வைத்து…”