புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களின்போது பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் ரீதியான வன்முறைகளை முன்வைத்து அகில்குமார் என்பவர் எழுதிய காமத்தைக் கொண்டாடுதல் என்கிற பதிவினைப் படிக்கநேர்ந்தது. இந்தப் பதிவு பலராலும் தொடர்ச்சியாக பகிரப்பட்டும் வந்ததை அவதானித்ததன் அடிப்படையில் அதுபற்றிய சிலவிடயங்களைப் பகிர்வது முக்கியமானது எனக் கருதுகின்றேன். பொதுவாகவே எமது சமூகத்தில் பெண்கள் பற்றியதாக இருக்கின்ற பொதுப்புத்தியின் அடிப்படையிலான எதிர்பார்ப்புகளும், ஆணாதிக்கப் போக்கும் பெண்ணை ஒரு பண்டமாக நினைக்கின்ற போக்கும் இது போன்ற நிகழ்வுகளின் ஊடாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது. ... Continue Reading →