ஐ. சாந்தனின் “காலங்கள்”

Santhanஎனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும்.  அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம்.  அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன.  அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த  ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.  அந்த வயதில் மிகவும் வித்தியாசமானதாக அந்த நாடகம் இருந்தது. ஒருவருக்குப் பின் ஒருவராக இரண்டு பேரை நிற்கவைத்து, அதில் ஒருவரின் கைகளையே கால்களாக்குவதன் மூலம் குள்ளமான மனிதர் ஒருவரை உருவாக்கும் உத்தியுடன், இரண்டு குள்ள மனிதர்களை மேடையில் தோன்ற வைத்து அந்த நாடகம் அமைந்திருந்தது.  புத்தக வாசிப்பினை எப்போதும் ஆதரித்து வந்த எனது வீட்டினரும் அப்போது வீதியால் அடிக்கடி செல்லும் சாந்தனை எழுத்தாளர் என்று மரியாதையுடன் எனக்கு அறிமுகஞ்செய்து வைத்திருந்தனர்.  Continue reading “ஐ. சாந்தனின் “காலங்கள்””