ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ

கௌரவன்

கௌரவன்பாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும்.  எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது.  ஆயினும் வாசித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது.  இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஆகும்.  அந்த வகையில் பல்வேறு மகாபாரதங்களை வாசித்திருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான ஒன்றாக ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் Ajaya  என்ற பெயரில் எழுதி, நாகலட்சுமி சண்முகம் கௌரவன் என்ற பெயரில் தமிழாக்கம் செய்த நூல் அமைகின்றது. Continue reading “ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ”