ஈழத்தில் நான் வாழ்ந்த போர் சூழ்ந்த 1990 முதல் 97 வரையான காலப்பகுதியில் என் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அன்றைய வாழ்வை, அதை எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்தியில் தொடரொன்றை 2014 ஆம் ஆண்டின் இறுதியில் எழுதிவந்தேன். சில வாரங்கள் மட்டுமே வந்த இந்தத் தொடர் அன்றைய யாழ்ப்பாணத்து உணவகங்கள், சிற்றுண்டிச் சாலை, தனியார்கல்வி நிலையங்கள் பற்றிய நினைவுகள், யாழ்ப்பாண வெளியேற்றத்துக்குப் பின்னரான தென்மராட்சி... Continue Reading →
அரசியல் கிரிக்கெட் பகுதி 2: கிரிக்கெட் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பும் அதன் தாக்கமும்
இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனியார் தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கான அனுமதியை விற்கத் தொடங்கியது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் கிரிக்கெட்டின் பரவலிலும் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியதுடன் கிரிக்கெட் ஒளிபரப்பானது பொருளாதார ரீதியிலும் மிகப்பெரிய அளவில் உதவக்கூடியது என்பதையும் நிரூபிப்பதாக இருந்தது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் 1980 வரை கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக கிரிக்கெட் வாரியம் தூர்தர்ஷனுக்கு கட்டணம் செலுத்துகின்ற நிலைமையே இருந்தது. மெல்ல மெல்ல இந்த நிலைமை மாறி 1992 இல் இடம்பெற்ற இந்தியாவிற்கும்... Continue Reading →
185ம் கட்டை, மீசாலை வடக்கு : நினைவுகள்
சோகங்களில் எல்லாம் பெரிய சோகம் சொந்த ஊரை விட்டுப் பிரியும் சோகம் என்று போறாளே பொன்னுத்தாயி பாடலிற்கு முன்னராக பாரதிராஜாவின் குரலில் ஒரு சிறு அறிமுகம் ஒன்று செய்துவைக்கப்படும். நினைவுதெரிந்து எந்த இடப்பெயர்வையும் அனுபவித்திராத அந்தவயதில் இதெல்லாம் ஒரு வலியா என்றுதான் நினைத்திருந்தேன். பின்னாட்களில் அந்த வலியை 1995ம் ஆண்டு ஒக்ரோபர் 30ல் நானும் உணர்ந்தேன். உறவினர் ஒருவரின் மரணச்சடங்கிற்காக என்னையும் ஒரு தம்பியையும் தவிர குடும்பத்தில் மற்ற எல்லாரும் கொழும்பு சென்றிருந்தனர். நாம் அப்பம்மா மற்றும்... Continue Reading →