ஈழத்தமிழ் அடையாளங்கள் பேணப்படவேண்டும் என்பதாலேயே பொங்குதமிழ் என்று பெயரிட்டேன்! – சுரதா யாழ்வாணனின் நேர்காணல்

சுரதாஇன்று இணையத்தில் தமிழ் படிப்பதும், பகிர்வதும் மிக இலகுவானதாக இருக்கின்றது.  தமிழ் தேடுபொறிகள், வலைப்பதிவுகள், தமிழ் தட்டச்சுக்கான மென்பொருட்கள் எழுத்துருக்கள் என்று பெருவளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்குள் வேகமாக அரங்கேறியிருக்கின்றது.  இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய முன்னோடிகளுள் ஒருவர் சுரதா யாழ்வாணன்.  யுனிக்கோடு பரவலான பாவனைக்கு வருவதற்கு முன்னைய காலங்களில் தமிழில் வெவ்வேறு இணையத்தளங்களும் வெவ்வேறு எழுத்துருக்களைப் பாவித்து வந்தன.  அந்தத் தளங்களைப் பார்ப்பதற்கு வெவ்வேறு எழுத்துருக்களை கணனியில் நிறுவ வேண்டியது அவசியமானதாக இருந்தது.  இது ஒருவிதத்தில் தமிழ் இணையத்தளங்களை அணுகவும், ஆக்கங்கள், கருத்துக்களைப் பகிரவும் தடையாகவும் இருந்தது.  இத்தகைய ஒரு காலப்பகுதியில் வெவ்வேறு எழுத்துருக்களை மாற்றுகின்ற வசதியை அறிமுகம் செய்ததுடன் அதனை இணையத்தில் இலவசமாகவும் வழங்கினார்.  இவரது புதுவை, பொங்குதமிழ் ஆகிய எழுத்துரு மாற்றிகளே இணையத்தில் முதன் முதலாகக் கிடைத்த தமிழ் எழுத்துருமாற்றிகள்.  பொதுவாக எந்த நேர்காணல்களுக்குமோ அல்லது தன்னை முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கோ முக்கியத்துவம் கொடுக்காத சுரதா யாழ்வாணன், இந்த முயற்சிகள் பதிவாக்கப்படவேண்டும் என்கிற எமது வேண்டுதலை ஏற்று தாய்வீடு பத்திரிகைக்கு தொலைபேசி ஊடான நேர்காணல் இது.

Continue reading “ஈழத்தமிழ் அடையாளங்கள் பேணப்படவேண்டும் என்பதாலேயே பொங்குதமிழ் என்று பெயரிட்டேன்! – சுரதா யாழ்வாணனின் நேர்காணல்”