புதிய பயணி இதழ் பயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று. சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது. பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார். இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர். 1850 முதல் 1925 வரை வெளியான பலரது... Continue Reading →
குறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை
ஈழத்தமிழர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக உணர்வது போல தமக்கான தனியான பண்பாட்டு வெளிப்பாடுகளையும் பேணவேண்டும் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. துரதிஸ்டவசமாக, பெரும்பாலும் நாம் எம்மை தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுடன் கலந்தே அடையாளப்படுத்தி வருகின்றோம். இது எமக்கான தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடுவதுடன், தேச உருவாக்கத்திலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. எளிய உதாரணமாக, புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற திருமண விழாக்கள் போன்ற சடங்குகளில் தமிழகத்து, வட இந்திய பாணியினது செல்வாக்குகள் அதிகரித்து வருவதை அவதானிக்கலாம். தவிர, புலம்பெயர்... Continue Reading →