Toronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது. மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத்... Continue Reading →
ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளையினரால் பதிப்பிக்கப்பட்டு, சோமேசசுந்தரி கிருஷ்ணகுமாரை பதிப்பாசிரியராகக் கொண்டு ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை இந்துசாதனத்தில் எழுதிய எழுத்துகள் “உலகம் பலவிதம்” என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. கொழும்புவில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவினைத் தொடர்ந்து ஒக்ரோபர் மாதம் 22ம் திகதி ரொரன்றோவில் இந்நூலின் அறிமுக வெளியீட்டுவிழாவினை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினரும் நூலக நிறுவனத்தினரும் இணைந்து ஒருங்கிணைத்திருந்தனர். புலம்பெயர் நாடுகளில் இயங்கிவருகின்ற பழைய மாணவர் சங்கங்கள்,... Continue Reading →
கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட்
கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று. விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின்... Continue Reading →
மீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம்
மீசை என்பது வெறும் மயிர் புனைவு நூலொன்றின் புனைவு எதில் இருந்து தொடங்குகின்றது? என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது. என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனைவாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது. யார் இந்த நந்தஜோதி பீம்தாஸ்? நாடு திரும்பாத... Continue Reading →
ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம்
ரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் ரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது. இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை... Continue Reading →
ஆவணப்படுத்தலும் தமிழர்களும்
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள்... Continue Reading →
புதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு
புதிய பயணி இதழ் பயண அனுபவங்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகப் பதிவுசெய்வது தமிழுக்குப் புதிய மரபன்று. சங்க இலக்கியங்களின் ஆற்றுப்படை, வழிநடைச் சிந்து ஆகிய பாடல்வகைகளை பயண இலக்கியங்களாக வகைப்படுத்தலாம் என்று அறிய முடிகின்றது. பயண இலக்கியம் சார்ந்து இவ்வாறான ஒரு நீண்ட மரபு இருப்பினும் தமிழில் பயண இலக்கியத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஏ.கே. செட்டியார். இவரே, பயண இலக்கியம் என்கிற பிரக்ஞையுடன் தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிட்டவர். 1850 முதல் 1925 வரை வெளியான பலரது... Continue Reading →
தெட்சிணாமூர்த்தி ஆவணப்பட வெளியீடு | மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் | ஈழத்துத் தமிழ் இதழ்கள்
மேற்கிந்தியத் தீவுகளில் பொங்கல் கொண்டாட்டம் மேற்கிந்தியத் தீவுகளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா என்று சாம் விஜய் எழுதிய கட்டுரை ஒன்று தை மாத “காக்கைச் சிறகினிலே” இதழில் வெளியாகி இருக்கின்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யுனெஸ்கோ ஒருங்கிணைப்பாளரும் பிரான்சில் உள்ள “நான் இந்தியாவை காதலிக்கின்றேன்” அமைப்பின் தலைவருமான சாம் விஜய் அவர்கள் “தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் அடிச்சுவட்டில் அவர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று, அவர் ஆராய்ச்சியின் தொடர்ச்சியை தன்னார்வத்துடன் செய்துகொண்டிருப்பவர்” என்று காக்கைச் சிறகினிலே இதழ்... Continue Reading →