ஈழத்தவர்கள் மீதான இந்திய ஆதிக்கம் பற்றிய உரையாடல்கள் மிக நீண்டகாலமாகவே தொடர்ந்துவருகின்றன. அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் பிரக்ஞைபூர்வமாக இந்த உரையாடல்களை முன்னெடுக்கவேண்டிய தேவைகள் முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கின்ற சமகாலச் சூழலில் ஜீவநதி இதழ் தொடர்ச்சியாக ஈழத்தின் கலை இலக்கியச் செயற்பாடுகள் குறித்த பதிவுகளையும் சிறப்பிதழ்களையும் கொண்டுவருவது முக்கியமானதாகும். அதிலும் ஈழத்தின் பதிப்பு முயற்சிகளும் நூல் வெளியீடுகளும் இந்தியாவின் அரசியல் நடைமுறைகள் மற்றும் பண்பாட்டு ஆதிக்கத்தால் தொடர்ந்தும் நலிவடைந்தே செல்கின்ற காலப்பகுதியில் இதழ்கள் குறித்த சிறப்பிதழ் ஒன்றினை... Continue Reading →
அ. யேசுராசாவின் “பதிவுகள்” நூல் குறித்து…
கலை இலக்கியத்தின் போக்குக் குறித்த விவாதங்களும் உரையாடல்களும் ஈழத்தில் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியாக எழுபதுகளைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் இயங்கத் தொடங்கிய யேசுராசா இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம், இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் இன்றுவரை தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர். இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய இதழ்களுக்குச் சரியான முன்மாதிரியாக விளங்குகின்ற “அலை” இதழின் ஆரம்பத்தில் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவும் விளங்கியவர்; தவிர மாணவர்களுடையே... Continue Reading →
ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்
ஈழத்து இலக்கியம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தொடர்ச்சியாக உரையாடுகின்றபோது ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்கவேண்டி இருக்கின்றது. குறிப்பாக ஈழத்து இலக்கியம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதான ஒரு கருதுகோள் அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகின்றபோது அதன் உண்மைத்தன்மை பற்றியும் குறுக்குவெட்டுத் தோற்றம் பற்றியும் அலசவேண்டியது அவசியமாகின்றது. அப்படிப் பார்க்கின்றபோது அவற்றின் செல்நெறி, இலக்கியத் தரம், கலைத்துவம், அவற்றின் உள்ளடக்கம் தனித்துவம் என்பவற்றோடு சமகாலத்தில் இலக்கிய முயற்சிகளும் செயற்பாடுகளும் ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலும் எவ்வாறு பரவியும், வளர்ச்சியடைந்தும் இருக்கின்றன என்பதைக் குறித்துக்... Continue Reading →
க. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை
தொடர்ச்சியாக பல்வேறு கலை இலக்கியப் பரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற நவம் அவர்களின் பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய மூன்று நூல்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான்காவது பரிமாணம் வெளியீடாக வந்திருந்தன. கனடாவின் ஆரம்பகால பதிப்பகங்களின் ஒன்றான நான்காவது பரிமாணம் பதிப்பகத்தின் ஊடாக பல்வேறு நூல்களை வெளியிட்டவராக நவம் அவர்கள் இருந்தபோதும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது எழுத்துகள் நூலுருவாக்கம் காணவில்லை. ஆயினும் மிகவும் சிரத்தையுடனான தயாரிப்புகளுடனும் தெளிவுடனும் நவம் அவர்கள்... Continue Reading →
குறமகள் என்றோர் ஆளுமை
சிறுபிராயம் ஈழத்தின் ஆரம்பகால பெண் எழுத்தாளர்களில் ஒருவரும், பெண்நிலைவாதிகளின் முன்னோடிகளில் ஒருவரும் என்ற வகையில் தவிர்க்கவே முடியாத ஆளுமைகளில் குறமகளும் ஒருவர் ஆவார். 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற காங்கேசன்துறை என்கிற கிராமத்தில் ”முக்கந்தர்” எம். ஏ. சின்னத்தம்பி என்பவருக்கும் செல்லமுத்து என்பவருக்கும் மூத்தமகளாகப் பிறந்த இவரது உண்மைப்பெயர் வள்ளிநாயகி என்பதாகும். அந்நாட்களில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாட்டுக்கோட்டைச் செட்டிமார்கள் இலங்கையில் பல பகுதிகளிலும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ... Continue Reading →
சட்டநாதனின் “மாற்றம்” சிறுகதைத் தொகுப்பு…
எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை அண்மைக்காலமாக வாசித்துவருகின்றபோது இந்தக் காலகட்டத்தில் உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது. அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும் அந்நேரத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கு இலக்கியம் பற்றிய வரையறைகளையும் தொடர்ந்து கலையமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளடக்கத்திலும் பல்வேறு புதிய கருக்களைப் படைப்புகளூடாகப் பேசிய காலப்பகுதியாக இது அமைகின்றது. குறிப்பாக தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும்... Continue Reading →
ஐ. சாந்தனின் “காலங்கள்”
எனது சிறிய வயதில் நான் நேரடியாகக் கண்டறிந்துகொண்ட முதல் எழுத்தாளர் என்று ஐ. சாந்தனையே சொல்ல முடியும். அவரது கிராமத்தையே நானும் சேர்ந்தவன் என்பது அதற்கான வாய்ப்பினையும் எனக்கு நல்கியது எனலாம். அப்போது நான் படித்துக்கொண்டிருந்த சிறுவர் பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் 1987ல் நடைபெற்றன. அந்நிகழ்வுகளின் போதோ அல்லது அதனைத் தொடர்ந்து வந்த ஒருசில ஆண்டுகளிலோ இடம்பெற்ற ஏதோ ஒரு பாடசாலை விழாவில் சாந்தன் அவர்களின் இயக்கத்தில் “சுப்பன்ணாவும் சோமன்ணாவும்” என்றொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அந்த... Continue Reading →
குப்பிழான் சண்முகனின் “கோடுகளும் கோலங்களும்”
தொண்ணூறுகளுக்கு முன்னர் வெளியான ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் குறித்து எழுதுவது என்று யோசித்தவுடன் தனித்துத் தெரியும் மற்றும் ஒருவர் குப்பிழான் ஐ. சண்முகன் அவர்கள். 70களில் ஈழத்தில் படைப்பிலக்கியம் தொடர்பாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வாதங்கள், உரையாடல்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக படைப்பிலக்கியங்கள் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்தன. அந்த நேரத்தில் இருந்த, அவர்கள் சார்ந்திருந்த இலக்கிய அணிகள், போக்குகள் என்பவற்றைப் புறந்தள்ளி ஒரு வாசகனாக தற்போது பார்க்கின்றபோது, மொழிக்கும் வடிவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அழகியலை முன்னிலைப்படுத்திய... Continue Reading →
அ. யேசுராசாவின் “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்”
“தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” என்கிற அ. யேசுராசவின் சிறுகதைத் தொகுப்பினை சென்ற ஆண்டளவில் வாசித்து இருந்தேன். அப்போது அது பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்த சிறு குறிப்பும், வழமைபோலவே “எழுத நினைத்த விடயங்கள் பட்டியலில்” சென்று புதைந்துவிட்டது. சில நாட்களின் முன்னர் யேசுராசா அத்தொகுப்புப் பற்றி நினைவுக்குறிப்பு ஒன்றினை முகநூலில் பகிர்ந்திருந்தார்; அதனை வாசித்தவுடன் மீண்டும் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பினை எடுத்து வாசித்தேன். அண்மைக்காலத்தில் உணர்வுரீதியாக மிக நெருக்கமாக உணர்ந்த தொகுப்பாக அந்த... Continue Reading →