சத்தியன் சமகாலத்தின் முக்கியமான தமிழ்வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவராவார். தமிழ்ப்பாஷை நூலின் பதிப்பாசிரியரும் மோகனாங்கியின் பதிப்பாசிரியர்களில் ஒருவருமான சத்தியன் இலக்கிய வரலாறு குறித்துத் தொடர்ச்சியாக உரையாடியும் செயற்பட்டும் வருபவராவர். IBC தொலைக்காட்சியின் இன்றைய விருந்தினர் நிகழ்வில் சத்தியன் கலந்துகொண்டு கூறுகின்ற தகவல்கள் மிக முக்கியமானவை. அதற்கான வீடியோ இணைப்பினைக் கீழே காணலாம். மோகனாங்கியை தேடிய சத்தியனின் பயணத்தினைப் பற்றி முன்னர் நான் எழுதிய கட்டுரைக்கான இணைப்பையும் இங்கே இணைத்துள்ளேன் https://arunmozhivarman.com/2018/02/08/mohanaangi/ சத்தியன் பதிப்பாசிரியராக இருந்த தமிழ்ப்பாஷை நூலினை நூலக … Continue reading வரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு
Tag: நூலக நிறுவனம்
ஆவணப்படுத்தலும் தமிழர்களும்
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள் … Continue reading ஆவணப்படுத்தலும் தமிழர்களும்
நூலகம் – உன்னதம் – விழாக்கள் : சில எண்ணங்கள்
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 28 ஆண்டுகளாகிவிட்டன. சில வருடங்களின் முன்னர் எரியும் நினைவுகள் என்ற பெயரில், இப்போது பார்த்தாலும் நெஞ்சை உலுக்கும் அந்த நினைவுகளை சோமிதரன் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த நூலக எரிப்புப் பற்றி அதிகம் பேசும் பலர் கூட இந்த ஆவணப் படத்தைப் பார்க்கவில்லை என்று பலருடன் பேசியபோது தெரிந்து கொண்டேன். 'யாழ்ப்பாணம் எரிகிறது', '24 மணி நேரம்' ஆகிய இரண்டு நூல்களிலும் யாழ்ப்பாண எரிப்புப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா “ஒரு லட்சம் புத்தகங்கள்” என்ற பெயரில் … Continue reading நூலகம் – உன்னதம் – விழாக்கள் : சில எண்ணங்கள்