மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்

தேர்தல் பரபரப்புகள் நடந்துகொண்டிருந்த அதே சமகாலப் பகுதியில் சைவ மகாசபையின் ஏற்பாட்டில் எழுப்பப்பட்ட இராவணன் சிலை பற்றிய குறிப்பொன்றினையும் சைவ மகாசபையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பரா. நந்தகுமாரின் முகநூலில் காணநேர்ந்தது.  தேர்தல் பற்றிய தொடர்ச்சியான செய்திகள், பரபரப்பு என்பனவற்றாலும், தொடர்ச்சியாக மதவாதப்போக்கு அதிகரித்துச் செல்வதை அவதானிப்பதில் ஏற்படுகின்ற சலிப்பாலும் இதையும் கடந்துபோகவே விரும்பினாலும் சில விடயங்களை நாம் உரையாடுவது அவசியம் என்று கருதுகின்றேன். ஈழத்தில் இப்படியாக இராவணனை இராவணேசுவரர் என்கிற ”சைவத் தமிழ்” அடையாளங்களுடன் முன்னிறுத்துகின்ற போக்கினையும்... Continue Reading →

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர்.  அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும், அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார்.  இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனாக் காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன்.  தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு... Continue Reading →

ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு

பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது.  நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் தீவிரடைந்து இருப்பதை அண்மைக் காலங்களில் நிகழும் சம்பவங்கள் ஊடாக நம்மால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பொதுவாக படையெடுப்பு என்கிறபோது அதை போர் சம்பந்தமாகவும் ராணுவத்துடன்... Continue Reading →

கல்வியும் மதமும் குறித்து பெரியார்…

பெரியாரை வெறுமனே ஒரு நாத்திகவாதியாய் மட்டுமே குறுக்கி அடையாளப்படுத்திக் கடந்துபோவர்களிடம் ஓர் அரசியலும், அறியாமையும் இருக்கின்றது என்றே கருதவேண்டியிருக்கின்றது.  பெரியார் தன்னளவில் நாத்திகராய் இருந்தாலும், கடவுள் மறுப்பை வலியுறுத்தினாலும் அதற்குக் காரணம் அவர் கல்வி, சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற அனைத்துப் பரப்புகளிலும் மதம் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவும் ஒடுக்குமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும் நியாயப்படுத்துவதுமாக இருந்தது என்பதே.  சிதம்பரம் அண்ணாமலை நகரில் 19-2-1956 இல் பெரியார் ஆற்றிய உரையின் கீழ்க்காணும் பகுதியைப் பாருங்கள், இதே பிரச்சனை இன்றும்... Continue Reading →

பிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் பல்வேறு பாடநூல்களை எழுதியவருமான பிரான்சிஸ் மாஸ்ரர் என்றழைக்கப்படுகின்ற மனுவேல்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 18 அன்று தனது 91வது வயதில் இயற்கையெய்தியிருக்கின்றார்.  அவரது இழப்பு, பலவாண்டுகளுக்கு முன்னர் அவரிடம் கற்ற பல்வேறு மாணவர்களுக்கும் கூட ஏற்படுத்தியிருக்க்கின்ற  தாக்கத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. பிரான்சிஸ் மாஸ்ரரிடம் நான் கல்விகற்கவில்லை; ஆனாலும் அவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் 2017 ஆம் ஆண்டிற்கான கலையரசி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவம் செய்யப்பட்ட... Continue Reading →

சிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார்

ஈரோட்டின் பகுதியாகிய கருங்கல்பாளையம் என்ற ஊரில் இயங்கிவந்த வாசகசாலையின் 9வது ஆண்டுவிழா நிகழ்வினைப் பற்றி குடியரசு இதழில் 1925 இல் வெளிவந்த துணைத்தலையங்கம் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் வாசகசாலைகளுக்கு இருக்கக் கூடிய அவசியத்தையும் சிறு சங்கங்கள் தொடர்ச்சியாக செயற்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைகின்றது.   அன்றைய இந்திய - தமிழகச் சூழலில் கூறப்பட்ட இந்த விடயங்கள் இன்றைய ஈழத்துச் சூழலுக்கும் பொருந்தும்; தொடர்ச்சியாக சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இதன் சாரத்தினை உள்வாங்கிக்கொள்வது அவசியம் என்று கருதின்றேன்.  பல்வேறு... Continue Reading →

நாம் தமிழர் கட்சி ஆவணம் தொடர்பாக சில கருத்துக்கள்

  ##நாம் தமிழர் ஆவணத்தை ஒருவாறாக இன்று வாசிக்கக் கிட்டியது.  ஆவணத்தில் திராவிடர்கள் யாரென்பது தொடர்பாகக் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களிலும், தமிழ்நாட்டில் நிலவுகின்ற முகாமையான முரண்பாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள 10 முரண்பாடுகளில் முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பாக எச்சரிக்கையோடும், விழிப்போடும், அன்போடும் கையாளப்படவேண்டிய தரப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலும் உடன்பாடு இல்லை.  முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பான இந்தப் பார்வை முழுக்கத் தவறானதும் கூட.  (இந்த முரண்பாட்டுப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லாத வேறு முரண்பாடுகளுன் இருந்தாலும், முக்கியத்துவம் கருதி இங்கே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.)... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: