தேர்தல் பரபரப்புகள் நடந்துகொண்டிருந்த அதே சமகாலப் பகுதியில் சைவ மகாசபையின் ஏற்பாட்டில் எழுப்பப்பட்ட இராவணன் சிலை பற்றிய குறிப்பொன்றினையும் சைவ மகாசபையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பரா. நந்தகுமாரின் முகநூலில் காணநேர்ந்தது. தேர்தல் பற்றிய தொடர்ச்சியான செய்திகள், பரபரப்பு என்பனவற்றாலும், தொடர்ச்சியாக மதவாதப்போக்கு அதிகரித்துச் செல்வதை அவதானிப்பதில் ஏற்படுகின்ற சலிப்பாலும் இதையும் கடந்துபோகவே விரும்பினாலும் சில விடயங்களை நாம் உரையாடுவது அவசியம் என்று கருதுகின்றேன். ஈழத்தில் இப்படியாக இராவணனை இராவணேசுவரர் என்கிற ”சைவத் தமிழ்” அடையாளங்களுடன் முன்னிறுத்துகின்ற போக்கினையும்... Continue Reading →
மதச்சார்பின்மையின் தேவை
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு இடிக்கப்பட்டதைக் குறித்த செய்திகளை மார்ச் மாத 4 ஆம் திகதி யாழ்ப்பாண உதயன் பத்திரிகை வெளியிட்ட விதம் குறித்தும் அதன் முகப்புப் பக்கத்தில் இருந்த செய்திகளிலும் அவற்றுக்கு சிவப்பு வர்ணமூட்டி கவனம் குவியவைக்கப்பட்டவற்றில் மக்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டி நல்லிணக்கத்தைக் குலைக்கின்ற மக்கள் விரோத முனைப்பிருந்ததையும் சுட்டிக்காட்டி முகநூலில் பதிவொன்றினை எழுதியிருந்தேன். வேறு சில நண்பர்களும் இதை ஒத்த பதிவுகளைப் பகிர்ந்து உதயன் பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதேநேரம் முகநூல் உள்ளிட்ட... Continue Reading →