17வது அரங்காடல் ஒரு பார்வை

Arangadalரொரன்றோவில் வெகுஜனக் கலாசாரத்தின் மத்தியில் சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களை இழுக்கும் நோக்குடன் நாடகம் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் இணைந்து 1996 இல் உருவாக்கிய அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும்.  பொதுவாக மனவெளி கலையாற்றுக் குழுவினர் வருடாந்தம் “அரங்காடல்” என்ற பெயரில் நாடகவிழாக்களை ரொரன்றோவில் நடத்துவது உண்டு.  அந்த வகையில் அதன் 17வது அரங்காடல் ஏப்ரல் 26ம் திகதி “ஃப்ளேடோ மார்க்கம் தியேட்டர்” இல் நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர்.

மனவெளி கலையாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்வன் அரங்காடலின் ஒத்திகைகளை வந்து பார்வையிடுமாறு இருமுறை  கேட்டிருந்தார்.  ஆயினும் பல்வேறு காரணங்களால் இரண்டுமுறையும் அவரது வேண்டுதலை நிறைவேற்றமுடியவில்லை.  ஆனால் நிகழ்வினைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்துகொண்டே வந்தது.  இறுதியில் மதிய நேர அளிக்கைகளில் பார்க்கமுடிந்தது. Continue reading “17வது அரங்காடல் ஒரு பார்வை”