ஈழப்போராட்டம் குறித்த பிரச்சனைகள்

ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள், ஈழப்போராட்டத்தின் மூலோபாய தந்திரோபாய பிரச்சனைகள் என்கிற மூன்று நூல்களைக் கொண்ட நூற்தொகுதி ரகுமான் ஜான் அவர்கள் தொகுத்து, வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது.  இந்த நூல்களுக்குள் நுழையமுன்னர் நூலின் தொகுப்பாசிரியர் ரகுமான் ஜான் குறித்து இந்நூலிலேயே தரப்பட்டுள்ள அறிமுகத்தைப் பார்ப்போம், ரகுமான் ஜான் தமிழீழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர், ஈழப்போராட்டத்தை அதன் குறுகிய எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்கள் தரப்பில் அரசியல் தலையீடு செய்யவேண்டும் என்பதில் தீவிரமாக... Continue Reading →

தாயகக் கனவுகள் நூல்வெளியீடு – தீபன் சிவபாலனின் தொகுப்பும் உரையும்

“தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற தலைப்பில் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று கனடாவின் ஸ்கார்பரோ நகரில் இடம் பெற்றது. நிகழ்வில் தீபன் சிவபாலன் ஆற்றிய உரை. https://www.youtube.com/embed/UQc-VZlR5IA நன்றி - வடலியின் யூட்யூப் தளம்

நூல்தேட்டப் பதிவு

நூல்தேட்டப் பதிவு 894.8(64)சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல். அருண்மொழிவர்மன் (இயற்பெயர்: சுதர்சன்ஸ்ரீநிவாசன்).கனடா: வடலி வெளியீடு, இல. 35, Long Meadow Road, Brampton, Ontario L6P 2B1;,1வது பதிப்பு, தை 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).xix, 122 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5x14 சமீ.,ISBN : 978-1-7779375-1-5. ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில்அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி... Continue Reading →

நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும்

ஈழத்திலக்கியம் பெரிதும் போரையும் போரின் தாக்கங்களையுமே தன் உள்ளடக்கமாகக் கொண்டதாக அமைவதான குற்றச்சாற்று பரவலாக முன்வைக்கப்படுவதுண்டு.  அதை முன்வைத்தே ஈழத்திலக்கியம் புலம்பல் இலக்கியமாகவே அமைகின்றது என்கிறதான அபிப்பிராயமும் கூறப்படுவதுண்டு.  போரும் போரின் தாக்கமும் அதன் நேரடி அனுபவமும் என்பது எப்போதும் தமிழகத்தவருக்கும் ஈழத்தவருக்கும் வெவ்வேறு அனுபவங்களை தரக்கூடியதாகவே இருக்கின்றது.  போரையோ அல்லது அதன் தாக்கத்தையோ நேரடியாகவோ அல்லது நெருங்கிய உறவுகளூடாகவொ சந்தித்திராத ஈழத்தவர் ஒருவரைக் காண்பது என்பதே மிக அரிதானதாகவே இருக்க, மாறாக போரை நேரடியாக -... Continue Reading →

மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்

அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச் சிலுவையில் அறைவதா? என்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும்  மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் குரலை எழுதிய எஸ்போஸ் என்றறியப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தனது ஏழு வயது மகனின் கண்ணெதிரே மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எஸ்போஸ் படைப்புகள் மற்றும் எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் என்கிற இந்தத் தொகுப்பு நூல் கருணாகரன், ப, தயாளன், சித்தாந்தன் ஆகியோரைத்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: