யாழ்ப்பாணத்து நினைவுகள் என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக நான் எழுதிவந்த சில கட்டுரைகளை, போர் சூழ்ந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் குறிப்பாக 90க்கும் 96க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பதின்மவயதுகளைச் சேர்ந்த ஒருவனின் நினைவுகளின் பதிவுகளாகவே பதிவுசெய்தேன். வெறும் நனவிடைதோய்தலாக மாத்திரமல்லாமல், அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்வியலின் ஒரு பகுதியை இப்பதிவுகள் பதிவுசெய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. இதேபோல, இன்னும் பலரும் தம் அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது அவை மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும். உதாரணமாக இக்கட்டுரைகளை … Continue reading நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்!
Tag: வரதர்
ஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள்
சென்ற கோடைகாலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீஸ்கந்தன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பல்வேறு சஞ்சிகைகளிலும், இதழ்களிலும் தொடர்ச்சியாக தான் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளை அரியாலையூர் நாடகக் கலைஞர்கள் பற்றிய ஒரு தொகுப்பாகவும், தனது அனுபவங்களை, நினைவுப்பதிவுகளை, அவரே சொன்ன வார்த்தையையில் குறிப்பிட்டால் முசுப்பாத்திகளை ஒரு தொகுப்பாகவும் ஆக இரண்டு புத்தகங்களாக்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார். அடடே, நல்ல விஷயம் தானே. அது முக்கியமானதும் கூட என்று எனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தேன். நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை … Continue reading ஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள்