குறிப்பு: மீராபாரதி எழுதிய பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு என்கிற நூலின் வெளியீட்டினை முன்வைத்து ரொரன்றோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்படி நூலாசிரியர் மீராபாரதி கேட்டிருந்தார்.. இந்நூல் பேசுகின்ற விடயமும் அது பற்றி மீராபாரதி அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும் முக்கியமானது. அந்த வகையில் இந்நூலையும் அதில் உள்ள கட்டுரைகளையும் தன் அக்கறையின் பாற்பட்டும், தான் கொண்ட கருத்தியலின் மீதிருக்கும் நம்பிக்கையின் பாற்பட்டும் மீராபாரதி தன்னோடும் சமூகத்தோடும் தொடர்ச்சியாக நடத்திய... Continue Reading →
என். செல்வராஜாவின் நமக்கென்றொரு பெட்டகமும் நூலகச் சிந்தனைகளும்
செல்வராஜா அவர்கள் - பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானது போல - எனக்கும் நூல் தேட்டம் செல்வராஜா என்றே அறிமுகமானவர். புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து நான் புத்தக வாசிப்பிற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. இப்பொழுது ரொரன்றோவில் தமிழ்ப் புத்தகக் கடையென்று ஒன்றுதான் இருக்கின்றது. ஆனால் அந்தக் காலப்பகுதியில் 5 புத்தகக் கடைகள் இருந்தன. இவற்றைத் தவிர தனிப்பட்ட முயற்சிகளால் புத்தகங்களை எடுத்து விற்பவர்களும் இருந்தனர். ... Continue Reading →
பா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து
அகதியாதல், போரின் அவலம், பின் போர் விளைவுகள் ஏற்படுத்தும் அஞர் என்பன எப்படி எல்லைகளும் கண்டங்களும் கடந்து மானுடத்தைப் பாதித்தன என்பதையும், இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் கூட தம் நினைவுகளையும் வடுக்களையும் எப்படி பொருட்களூடாகவும் ஞாபகச் சின்னங்களூடாகவும் பேணி அதை அஞரிலிருந்து கடப்பதற்கான ஒருவிதமான கருவிகளாகவும் கையாளுகின்றனர் என்பதை ஜயகரனின் கதைகளில் காணலாம்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்
நவாஸ் சௌபி எழுதிய “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்கிற நூல் ஈழத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்பில் இருந்தும், ஏற்கனவே அழைக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்பில் இருந்தும் வேறுபட்டு, மேற்குறித்த பகுப்புகளின் போதாமையை எடுத்துரைத்து “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்ற அடையாளத்தின் அவசியத்தினை தர்க்கபூர்வமாக முன்வைக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் தமிழ்மொழியைப் பேசுவதால் தமிழ்பேசும் மக்கள் என்ற அரசியல் அடையாளத்தாலேயே நீண்டகாலம் அழைக்கப்பட்டனர், அவர்கள் படைக்கும் இலக்கியமும் ஈழத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தினுள்ளேயே உள்ளடக்கப்பட்டது.... Continue Reading →
நானும் நூலகங்களும்
நூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு,... Continue Reading →