இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தமிழன் – கறுப்பிக்கு நன்றிகள்01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?தொடக்க காலத்தில் எனது கிறுக்கல்களுக்கெல்லாம் சூரிய புத்திரன் என்ற பெயரைத்தான் பயன்படுத்திவந்தேன். அப்போதைய கல்லூரிக் கால நட்பொன்றை மறக்கும் பொருட்டும், சூரிய என்று தொடங்கும் வானம்பாடித் தனமான கவிதைகள் மேல் ஏற்பட்ட ஒரு வெறுப்பினாலும் அந்த பெயரை விட்டொழித்தேன். அதன் பின்னர் ராஜ ராஜ சோழன் மேல் அந்நாட்களில் கொண்டிருந்த அதீத... Continue Reading →
இருள்-யாழி : திருமாவளவனுடன் ஒரு இலக்கிய சந்திப்பு
கவிஞர் திருமாவளவனுடனான எனது அறிமுகம் சென்ற ஆண்டு நடந்த குறுந்திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் நடந்தது. வழமை போல காலம் செல்வம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவரைப் பற்றி எனக்கு பெரிதாக தெரிந்திருக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடத்திய வலைத்தளத்திலும் இணையத்திலுமாக அவரது சில கவிதைகளை ரசித்திருக்கின்றேன். பின்னர் நண்பர்களுடனான உரையாடலின்போது அவர் “உயிர் நிழல்” கலைச்செல்வனின் சகோதரர் என்று அறிந்தேன். புலம் பெயர் சூழலில் கலைச்செல்வன் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு தந்தவர்... Continue Reading →
பொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிகழ்வுகள், சில விமர்சனங்கள்
கனடாவில் பிடித்த காலம் எது என்ன என்று கேட்டால் கோடைகாலம் என்று உடனடியாகவே சொல்லிவிடுவேன். கோடை காலம் தொடங்கிவிட்டாலே பல் கலாசார நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கிவிடும். இந்த முறையும், வழமையைவிட சற்று அதிகமாகவே இலக்கிய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. மே மாதம் 16ம் திகதி முதல் இன்றுவரை 5 ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக அறிமுகங்கள் நடைபெற்று இருக்கின்றன பொ. கருணாகரமூர்த்தி 80களின் தொடக்கத்திலேயே போரினால் இடம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளார் கருணாகரமூர்த்தி அண்மையில் வெளியிட்ட... Continue Reading →
”சுடருள் இருள்”
கனடாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சமூக, இலக்கிய நிகழ்வுகளில் எமது பங்களிப்பாக நண்பர்கள் இணைந்து “சுடருள் இருள்” என்கிற இலக்கிய நிகழ்வு ஒன்றை எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு “ஸ்கார்பறோ சிவிக் சென்ரர்” இல் நடாத்த உள்ளோம்.ஆர்வலர்கள் கலந்து கொள்ளுமாறும், நண்பர்களுக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.(மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழின் மேல் அழுத்தவும்)
காலம் – 2009: சில எண்ணங்கள்
கனடாவில் நல்ல படைப்பாளிகள் இருக்கின்ற அளவுக்கு இலக்கிய அமைப்புகளோ, இலக்கிய இதழ்களோ வெளிவருவதில்லை என்றிருக்கின்ற பொதுக் கருத்தை அவ்வப்போது வெளிவந்தாலும் “காலம்” தழ் அடிக்கடி தகர்த்து வருவது வழக்கம். இந்த வகையில் ஜூன் – ஆகஸ்ட் 2009 ற்கான 32வது காலம் இதழ் இதுவரை வெளிவந்த காலம் இதழ்களில் என்னளவில் அதிக நிறைவை தந்ததாக இருக்கின்றது. கடந்த காலம் இதழ்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சிறு கதைகளையும், கவிதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அகோரமான யுத்தத்தில் அகப்பட்டிருக்கின்ற ஒரு காலத்தின்... Continue Reading →
கடல்புரத்தில் நாவலும் கரையோர நினைவுகளும் சில எண்ணங்களும்
“மனுஷன் அப்படியில்லை. அவனுக்கு ஒன்றின் மீதும் நம்பிக்கையில்லை. வல்லம் ஒரு ஜீவனுள்ள சாட்சியம். அது பேசாது. அது சொல்லுகிற கதைகளை கேட்டால் அந்தப் பறையக்குடியே தீப்பிடித்துவிடும். எல்லா வல்லங்களுக்கும் எல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் தங்கள் எஜமானர்களுடைய நன்மையைக்கருதி பேசாமல் இருக்கின்றன. கடல் காற்றில் புதிய லாஞ்சிகள் கூட துருப்பிடித்துவிடுகிறதுண்டு. இந்த மரம் துருப்பிடிக்கிறதேயில்லை. அது கடலுக்கு விசுவாசமாயிருக்கின்றது. வல்லங்களைக் கடல் அலைகள் கவர்ந்து கொண்டதில்லை. சிலுவைப் பாறைச்சுழலில் வல்லங்கள் கவிழ்ந்தால் வல்லங்கள் கரையில் ஒதுங்கிவிடுகின்றன. அந்தச் சுழலில்... Continue Reading →
காலச்சுவடு: கருணா பற்றிய கட்டுரைக்கு ஒரு எதிர்வினை
தொடர்ச்சியாக திணிக்கப்பட்ட ஒரு கட்டாய ஓய்வுக்குப் பின்னர், ஒரு முழு மூச்சுடன் வாசிப்பில நான் இறங்கியபோது தீவிர இலக்கிய இதழ்கள் மீது பெரும் காதலுடன் தான் அவற்றை அணுகினேன். தொடர்ச்சியான வாசகர் ஆதரிப்பில் தமிழில் ஓரளவு நிலைத்துவிட்ட தீவிர இலக்கிய இதழ்கள் என்ற நிலையை காலச்சுவடு, உயிர்மை இதழ்கள் அடைந்திருந்தாலும் காலச்சுவடை என்னளவில் ஒரு மாற்றாந்தாய் மனப்பாங்குடனேயே அணுக முடிந்தது. இதற்கு நான் வாசிப்பில் இறங்கிய அந்த நாட்களில் கண்ணன் தலைமையில் காலச்சுவடு செய்த சில இலக்கியத்துக்கு... Continue Reading →
தேர்தல் கூட்டணி: ஈழத்தமிழன், திமுக, அதிமுக மற்றும் ஞாநி
வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து பேசிப் பேசியே வரலாற்றில் தன் இடத்தை இழந்து கொண்டு வருகின்றான் தமிழன். கனக விசயனின் முடியினை… என்று தொடங்கி தம்புகழ் பாடி, புற நானூற்று வீரம் என்றெல்லாம் பழையதையே மீண்டும் மீண்டும் பேசி மீண்டும் மீண்டும் தமிழனின் தலையில் மிளகாய் அரைத்து வளர்ந்தவர்கள் அடுத்த தேர்தலுக்கு புதிய கூட்டணிகளுடனும், புதிய (கு)யுக்திகளுடனும் மக்களை ஏமாற்ற தயாராகிவிட்டனர். திமுக, அதிமுக என்கிற பெரிய முதலைகள் குழப்புகிற குட்டையில் குதித்து மருத்துவர் ராமதாஸ், கலிங்கப்பட்டி வீரன் வைகோ,... Continue Reading →
உண்மைக்கு நெருக்கமாக: அ. முத்துலிங்கம்
குழந்தைகளாக பிறக்கின்றபோது நாம் நூறு வயதுடன் பிறக்கின்றோம். அதன் பின்னர் வாழ்க்கை வெள்ளம் இழுத்துச் செல்ல செல்ல அதன் திசையிலும், அதை எதிர்த்தும் பயணித்து ஒதுக்கப்பட்ட ஆண்டுகள் மெல்ல கழிந்து செல்ல ஆயுள் கரைந்து இறந்து போகின்றோம். எல்லா மனிதர்களும் பால்யத்தில் ஒரே சாயலான வாழ்வையே வாழ்கின்றனர். அதனால் தான் அந்த வயதில் பொறாமையுணர்வும், ஏற்றத்தாழ்வுகளும் மனதில் குடியேறுவதில்லை. நாட்கள் போக போக, திறந்து வைத்த கற்பூரம் போல பால்யம் கரைந்து செல்ல பொய்மையும் கசடும் குடியேறி... Continue Reading →
புலம்பெயர் ஊடகங்களும் குளறுபடிகளும்
எந்த விதத்திலும் அழகியலுடன் ஒன்றிக்க முடியாத அளவுக்கு குரூரத்தை எம் வாழ்வுடன் பிணைத்து எம்மை அழைத்துச் செல்லுகின்றது நாம் வாழும் தலைமுறை. ஒரு கொலை நடந்தாலும் பதைக்கின்ற மனம் போய் 10, 20 என்றாகி பின் ஐம்பது, நூறாகி இப்போது இதெல்லாம் சாதாரணம் என்று வாழப் பழகிவிட்டது எம் தலைமுறை. கொத்து கொத்தாக இன அழிப்பு நடந்தாலும், தம் தினசரி வாழ்வை அப்படியே வாழப்பழகி விட்டது ஒரு சமூகம். இத்தனை கொலையும் கண்டு, இத்தனை சதைப்பிடங்களையும், அவை... Continue Reading →