டாம் சிவதாசனை அவர்களைக் கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அறிவேன் என்றாலும் இடையில் சில மாதங்கள் அவருடன் சற்றுக் கூடுதலாகப் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்தது. அவரது அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்புகளில் சிலகாலம் தொடர்ந்து சென்றும் வந்தேன். வெவ்வேறு விடயப் பரப்புகள் குறித்துத் தேடி ஆர்வமுடன் வாசிக்கின்றதோர் வாசகராகவும், அவ்வாறு வாசித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து உரையாடி மகிழ்பவராகவும் அவரைக் கணித்திருக்கிறேன். கதையாக அவரது ஒரே ஒரு கதையை மட்டுமே முன்னர் வாசித்திருந்தது நினைவில் இருக்கின்றது எவ்விதமோ ஏனைய கதைகளைத்... Continue Reading →
பாரதியும் சரவணமுத்துப்பிள்ளையும்
“ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னைஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறைமேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்” என்று தொடங்குகின்ற பாரதி எழுதிய பாடல், நாட்டுப் பாட்டு என்ற பெயரில் 1919 இல் வெளியான அவரது கவிதை / பாடல் தொகுதியில் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலில் பாரதி, புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லைசொல்லவும் கூடுவ தில்லை –... Continue Reading →
“தலைமறைவு வாழ்க்கை: ஒரு நினைவுக் குறிப்பு”நூல் பற்றிய அறிமுகக் குறிப்புகள்
ரெஜி சிறிவர்த்தனவின் “Working Undergroud: The LSSP in Warime, A memoir of happenings and personalities என்கிற நூலின் தமிழாக்கமான “தலை மறைவு வாழ்க்கை ஒரு நினைவுக் குறிப்பு” என்ற நூல் சமூகம் இயல் பதிப்பகத்தின் வெளியீடாக எஸ் கே விக்னேஸ்வரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. எஸ். கே. விக்னேஸ்வரன் அவர்களுடனான எனது அறிமுகம் கிட்டத்தட்ட 10 - 12 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் கனடாவுக்கு வந்து சேர்ந்த சில காலங்களின் பின்னர் ஆரம்பித்தது. ... Continue Reading →
பல்வங்கர் பலூ : இந்தியக் கிரிக்கெட்டின் பிதாமகன்
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நிறைய சூப்பர் ஸ்டார்களால் ஆனது என்று சொல்வார்கள். எனக்குக் கிரிக்கெட் அறிமுகமான காலத்தில், இந்தியாவில் இருந்து வருகின்ற தமிழ் இதழ்கள் தந்த அறிமுகத்தால் கவாஸ்கர், கபில்தேவ் என்கிற நாயகர்களின் வழிபாட்டுடன் சேர்ந்தே கிரிக்கெட்டும் அறிமுகமாகி இருந்தது. பின்னர் வெவ்வேறு காலப்பகுதிகளில் சச்சின், கங்கூலி, ஷேவாக், தோணி, கோலி, என்று அந்த ”சூப்பர் ஸ்ரார்” மரபு தொடர்ந்தது. இந்த நாயக வழிபாடு கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்கிற விமர்சனங்களும் நடந்தபடிதான் இருக்கின்றன. அந்த... Continue Reading →
ஏர் கனடா விமானப் பணியாளர் வேலை நிறுத்தமும் கனடா தொழிலாளர் சட்டம் 107ம்
ஏர் கனடாவின் விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக கனடா தொழிலாளர் சட்டத்தின் 107 ஆம் பிரிவைப் பிரயோகித்து அவர்கள் வேலைத்துக் திரும்புவது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது என்பதை பெரும்பாலோனோர் அறிவோம். தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காகப் பல்வேறு பேச்சுவார்த்தைப் படிநிலைகளின் பின்னர் அவை எவையும் தமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை என்கிறபோதே வேலைநிறுத்தம் போன்ற முடிவுகளை எடுக்கின்றார்கள். அப்படி இருக்கின்றபோதும் ஜூன் 2024 இற்குப் பின்னர், கடந்த 14 மாதங்களில் எட்டாவது தடவையாக கனடா தொழிலாளர் சட்டத்தின் 107 ஆம் பிரிவு பிரயோகிக்கப்பட்டு... Continue Reading →
ஈழநிலத்தார் அழைப்பாடல்
நான் இணைந்து செயற்பட்ட சங்கமொன்றின் வருடாந்த நிகழ்வுகளில் கடவுள் வாழ்த்தும் வரவேற்பு நடனமும் தொடர்ச்சியாக நடக்கின்ற நிகழ்வுகளாக இருந்தன. மதச்சார்பின்மையையும் மரபுரிமையையும் கருத்திற்கொண்டு இவற்றுக்குப் பதிலாக மதச்சார்பின்மையையும், சமூகநீதி அரசியலையும் விஞ்ஞான ரீதியிலான பார்வையையும் கொண்டதான நிகழ்வொன்றைச் செய்து நிகழ்வை ஆரம்பிக்கவேண்டும் என்று நாம் முடிவெடுத்திருந்தோம். அதன் விளைவாக “ஈழநிலத்தார் அழைப்பாடல்” என்று ஒரு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. அதன் ஒவ்வொருவரியையும் மிகவும் அவதானமாக, சமூக முன்னேற்றத்துக்கும் அறிவியல் பார்வைக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் எமக்கிருந்தது.... Continue Reading →
யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை
ஆய்வுக் கட்டுரை குறித்த அறிமுகம் பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்ட ஆளுமைகொண்டவராக குறமகள் விளங்கியிருந்தாலும் கூட அவரது மிக முக்கியமான பணி “யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு” என்கிற அவரது ஆய்வுநூலே. தனது டிப்ளோமா படிப்பிற்காக எழுதிய “பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையிற் பெண்கல்வி” என்கிற கட்டுரை பெற்ற வரவேற்பும் மதிப்பீடும், பெண்ணியம் தொடர்பாக அவருக்கு இயல்பாக இருந்த அக்கறையுடன் இணைந்து இந்த நூலை எழுதுவதற்காக முதலாவது விதையாக அமைந்தது என்று குறமகள் தனது முன்னுரையில் பதிவுசெய்கின்றார். ... Continue Reading →
“எனக்குத் திசைகளைப் பற்றிக் கவலையில்லை; தேடல்களைப் பற்றித்தான் கவலை” – ஆர். பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்
நான் ஒரு தமிழ் மாணவன்; அதுவே எனது அடையாளம் என்பதைத் தொடர்ந்து சொல்லிவரும் ஆர். பாலகிருஷ்ணன் இந்தியவியல், திராவிடவியல், தொல்லியல் போன்ற துறைகளில் ஆழங்கால்பட்ட அறிவுடைய ஆய்வறிஞரும் ஆவார். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஐ.ஏ.எஸ். பரீட்சையை முழுமையாகத் தமிழ்மொழி மூலம் எழுதித் தேர்தவான ஒரே நபர் என்ற பெருமையையும் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-இல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வின் பின் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை... Continue Reading →
பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும்
“பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? “ என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். சீமானின் திட்டமிட்ட அவதூறுகளில் ஒன்றினை அப்படியே நம்பிக்கொண்டே நண்பர் என்னிடம் கேள்வி கேட்கின்றார்; அவருக்கான தனிப்பதிலாக இல்லாமல் இந்தக் கேள்வி இருக்கக் கூடிய பலருக்குமான விளக்கமாக இதுபற்றிச் சற்றே பகிர்கின்றேன்.எவரேனும் ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே ஒப்பிக்காமல் சிறிதளவேனும் ஆராய்ந்து முடிவெடுத்தலே பகுத்தறிவு; அதன்படி சீமான் சொல்வதை அப்படியே... Continue Reading →
அவரை மட்டும் தான் தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டுமா?
நேற்று (பெப்ரவரி 8, 2025) இலண்டனில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டமும் தமிழ் மொழிச் செயற்பாட்டகமும் இணைந்து ஒருங்கிணைத்திருந்த “தமிழர் தலைவர் தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள்: விளக்கமும் உரையாடலும்” என்கிற நிகழ்வில் புகுந்து நிகழ்ச்சியைக் குழப்பும் நோக்குடன் செய்யப்பட்டது ரவுடியிசம். இது தன்னிச்சையாக நடந்தது அல்ல; தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுகள், இனப்பெருமிதங்கள், சாகச வாதக் கதைகள், உருட்டல் திரித்தல் கதைகளினூடாக மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டத்தின் செயற்பாடு இப்படித்தான் அமையும். இந்தப்... Continue Reading →