பால் – பாலியல், காமம் – காதல், பெண் – பெண்ணியம்: ஓர்ஆண்நிலைநோக்கு : உரையாடல் ஒன்றுக்கான குறிப்புகள்

குறிப்பு: மீராபாரதி எழுதிய பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு என்கிற நூலின் வெளியீட்டினை முன்வைத்து ரொரன்றோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்படி நூலாசிரியர் மீராபாரதி கேட்டிருந்தார்..  இந்நூல் பேசுகின்ற விடயமும் அது பற்றி மீராபாரதி அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும் முக்கியமானது.  அந்த வகையில் இந்நூலையும் அதில் உள்ள கட்டுரைகளையும் தன் அக்கறையின் பாற்பட்டும், தான் கொண்ட கருத்தியலின் மீதிருக்கும் நம்பிக்கையின் பாற்பட்டும் மீராபாரதி தன்னோடும் சமூகத்தோடும் தொடர்ச்சியாக நடத்திய... Continue Reading →

சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி எஸ்.பி. ஜனநாதன்

சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி என்ற பெயரில் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கான நினைவு மலர் ஒன்றை GKV மகாராஜா முரளீதரனின் தொகுப்பில் பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருக்கின்றனர்.  ஜனநாதனின் முதற்திரைப்படமான இயற்கையின் பாடல்களும் காதல் கொண்டேன் படத்தின் பாடல்களும் ஒரே இசைத்தட்டாக வெளிவந்திருந்தன.  எனக்கு மிகவும் பிடித்த இசைத்தட்டுகளில் ஒன்றாக அதைச் சொல்வேன்.  இயற்கையில் எல்லாரும் பெரிதும் சொல்லுகின்ற, மிகப்பிரபலமான பாடல் “காதல் வந்தால் சொல்லி அனுப்பு…”; எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாக இன்றும் இருக்கின்றது. ... Continue Reading →

கசடறக் கற்பித்தார் ச.வே.ப

கல்வியைக் கண்ணெனப் போற்றும் யாழ்ப்பாணத்துச் சமூகம் என்ற கூற்று நினைவுதெரிந்த நாளில் இருந்து நான் கேட்டுவளர்வது.  ஆனால் கல்வியைக் கண்ணெனப் போற்றுவது என்கிற பெயரில் கற்றலின் பயனென்னவென்பதையும் கற்பித்தலின் பொருளென்ன என்பதையும் கூட அறியாமல் அது கற்பித்தல் தொழிற்சாலைகளை நிறைத்து வைத்திருக்கின்ற பிரதேசமாகவே நடைமுறையில் இருந்துவருகின்றது.  இங்கே கற்பிக்கப்படுகின்ற விஞ்ஞானம், கணிதம், மொழி, இலக்கியம், வரலாறு, சமூக விஞ்ஞானம் உட்பட அனைத்துப் பிரிவுகளினதும் பிரதான நோக்கம் மாணாவர்களை நல்ல பெறுபேறுகளை போட்டிப்பரீட்சைகளில் பெறப்பண்ணுவது என்பதைத் தவிர வேறொன்றில்லை. ... Continue Reading →

என். செல்வராஜாவின் நமக்கென்றொரு பெட்டகமும் நூலகச் சிந்தனைகளும்

செல்வராஜா அவர்கள் - பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமானது போல - எனக்கும் நூல் தேட்டம் செல்வராஜா என்றே அறிமுகமானவர்.  புலம்பெயர்ந்து கனடாவிற்கு வந்து நான் புத்தக வாசிப்பிற்கு மீண்டும் திரும்பிக்கொண்டிருந்த காலப்பகுதியில் இலங்கையில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி அறிந்துகொள்வது என்பதே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.   இப்பொழுது ரொரன்றோவில் தமிழ்ப் புத்தகக் கடையென்று ஒன்றுதான் இருக்கின்றது.  ஆனால் அந்தக் காலப்பகுதியில் 5 புத்தகக் கடைகள் இருந்தன.  இவற்றைத் தவிர தனிப்பட்ட முயற்சிகளால் புத்தகங்களை எடுத்து விற்பவர்களும் இருந்தனர். ... Continue Reading →

அ. யேசுராசாவின் “பதிவுகள்” நூல் குறித்து…

கலை இலக்கியத்தின் போக்குக் குறித்த விவாதங்களும் உரையாடல்களும் ஈழத்தில் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியாக எழுபதுகளைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் இயங்கத் தொடங்கிய யேசுராசா இலக்கியத்தின் உள்ளடக்கம், அழகியல் தொடர்பாகவும் படைப்பாளிகளுக்கான அறம்,  இதர கலை வடிவங்களில் இருக்கவேண்டிய பரிச்சயம் என்பன குறித்தும் இன்றுவரை தொடர்ச்சியாகப் பேசியும், வலியுறுத்தியும் வருபவர்.  இன்றுவரை ஈழத்தின் கலை இலக்கிய இதழ்களுக்குச் சரியான முன்மாதிரியாக விளங்குகின்ற “அலை” இதழின் ஆரம்பத்தில் அதன் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும், பின்னர் அதன் ஆசிரியராகவும் விளங்கியவர்; தவிர மாணவர்களுடையே... Continue Reading →

தேவகாந்தனின் எதிர்க்குரல்கள் பற்றிய உரை

இலக்கிய வெளி அமைப்பினர் ஒழுங்குசெய்த தேவகாந்தனின் நான்கு நூல்களின் விமர்சன அரங்கு நவம்பர் 28, 2021 அன்று சூம் தளத்தினுடாக இடம்பெற்றது. சு. குணேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் எதிர்க்குரல்கள் என்கிற நூல்குறித்து நான் ஆற்றிய உரையின் காணொலி வடிவினை இலக்கியவெளியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து பகிர்ந்துகொள்கின்றேன். நிகழ்வில் “லவ் இன் த டைம் ஒஃப் கொரனாவும் சில கதைகளும்” நூல் குறித்து உடுவில் அரவிந்தனும், ”திகம்பர நினைவுகள்” குறித்து வேல்கண்ணனும் ”காற்று மரங்களை அசைக்கிறது” நூல்... Continue Reading →

எங்கள் குமாரதேவன் ஐயா

ஈழத்தில் நான் வாழ்ந்த போர் சூழ்ந்த 1990 முதல் 97 வரையான காலப்பகுதியில் என் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அன்றைய வாழ்வை, அதை எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக  யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்தியில் தொடரொன்றை 2014 ஆம் ஆண்டின் இறுதியில் எழுதிவந்தேன். சில வாரங்கள் மட்டுமே வந்த இந்தத் தொடர் அன்றைய யாழ்ப்பாணத்து உணவகங்கள், சிற்றுண்டிச் சாலை, தனியார்கல்வி நிலையங்கள் பற்றிய நினைவுகள், யாழ்ப்பாண வெளியேற்றத்துக்குப் பின்னரான தென்மராட்சி... Continue Reading →

மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள்

தேர்தல் பரபரப்புகள் நடந்துகொண்டிருந்த அதே சமகாலப் பகுதியில் சைவ மகாசபையின் ஏற்பாட்டில் எழுப்பப்பட்ட இராவணன் சிலை பற்றிய குறிப்பொன்றினையும் சைவ மகாசபையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பரா. நந்தகுமாரின் முகநூலில் காணநேர்ந்தது.  தேர்தல் பற்றிய தொடர்ச்சியான செய்திகள், பரபரப்பு என்பனவற்றாலும், தொடர்ச்சியாக மதவாதப்போக்கு அதிகரித்துச் செல்வதை அவதானிப்பதில் ஏற்படுகின்ற சலிப்பாலும் இதையும் கடந்துபோகவே விரும்பினாலும் சில விடயங்களை நாம் உரையாடுவது அவசியம் என்று கருதுகின்றேன். ஈழத்தில் இப்படியாக இராவணனை இராவணேசுவரர் என்கிற ”சைவத் தமிழ்” அடையாளங்களுடன் முன்னிறுத்துகின்ற போக்கினையும்... Continue Reading →

ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம்

அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர்.  அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும், அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார்.  இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனாக் காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன்.  தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: