பண்பாட்டுப் படையெடுப்பு என்பது பற்றிப் பலதடவைகள் வெவ்வேறு இடங்களில் பேசியிருக்கின்றோம் என்றாலும் இப்போதையை சூழலில் இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பு என்றால் என்னவென்பதைப் பற்றி நாங்கள் சற்று ஆழமாக யோசிக்க வேண்டி இருக்கின்றது. நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்திலும் தீவிரடைந்து இருப்பதை அண்மைக் காலங்களில் நிகழும் சம்பவங்கள் ஊடாக நம்மால் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. பொதுவாக படையெடுப்பு என்கிறபோது அதை போர் சம்பந்தமாகவும் ராணுவத்துடன்... Continue Reading →
நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து…
ஈழப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் குறித்தும் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்தும், பின்போர்க்கால நிலைமைகள் குறித்ததுமான பல்வேறு தொகுப்புகளும் அறிக்கைகளும் பதிவுகளும் வெவ்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ளன என்றாலும் இன்று வரை போரினால் நிகழ்த்தப்பட்ட அழிவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு முடியவில்லை என்பதே உண்மை. அதுபோல போர் நிறைவடைந்த பின்னரும் தொடருகின்ற பண்பாட்டு இனப்படுகொலையும் அதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அம்பலப்படுத்தப்படவில்லை. இவை குறித்த செய்திகளும் பதிவுகளும் பெரும்பாலும் தனித்த சம்பவங்களாகவே கடந்து செல்லப்படுகின்றன. இத்தகைய சூழலில் இந்த அழிவுகளை... Continue Reading →
எச்சமும் சொச்சமும்
சூரியகாந்தியில் நான் எழுதிவந்த பத்தியில் 90களில் யாழ்ப்பாணத்தில் இருந்த சாப்பாட்டுக்கடைகள் பற்றியும் அவற்றுடனான எனது நினைவுகள் குறித்தும் ”நான் கடந்த நளபாகம்” என்ற தலைப்பில் எழுதியிருந்தேன். கடைகளில் சாப்பிடுவதுடன் ஒவ்வொரு கடைகளுக்கும் இருக்கக்கூடிய சிறப்பான உணவுகள், உணவுத்தயாரிப்பு முறை, உபசரிப்பு என்பன குறித்து கவனிப்பதும் இயல்பாகவே எனக்குப் பழக்கத்தில் வந்திருக்கின்றது என்றே நினைக்கின்றேன். மிக எளிமையான உணவுப் பழக்கத்தை வழமையாகக் கொண்ட, உணவுபற்றியும் அதன் சுவை குறித்தும் அதிகம் பேசும் வழக்கத்தைக் கொண்டிராத அப்பம்மா வீட்டில் சிறுவயதில்... Continue Reading →
நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும்
ஈழத்திலக்கியம் பெரிதும் போரையும் போரின் தாக்கங்களையுமே தன் உள்ளடக்கமாகக் கொண்டதாக அமைவதான குற்றச்சாற்று பரவலாக முன்வைக்கப்படுவதுண்டு. அதை முன்வைத்தே ஈழத்திலக்கியம் புலம்பல் இலக்கியமாகவே அமைகின்றது என்கிறதான அபிப்பிராயமும் கூறப்படுவதுண்டு. போரும் போரின் தாக்கமும் அதன் நேரடி அனுபவமும் என்பது எப்போதும் தமிழகத்தவருக்கும் ஈழத்தவருக்கும் வெவ்வேறு அனுபவங்களை தரக்கூடியதாகவே இருக்கின்றது. போரையோ அல்லது அதன் தாக்கத்தையோ நேரடியாகவோ அல்லது நெருங்கிய உறவுகளூடாகவொ சந்தித்திராத ஈழத்தவர் ஒருவரைக் காண்பது என்பதே மிக அரிதானதாகவே இருக்க, மாறாக போரை நேரடியாக -... Continue Reading →
செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும்
போருக்குப் பிந்தைய காலத்தில் அபிவிருத்தி, மக்கள் நல உதவித்திட்டம், கல்விக்கான உதவி, மக்கள் எதிர்கொள்ளும் சமகாலப் பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கவனப்படுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவைகுறித்து நேர்மறை / எதிர்மறையான பார்வைகளும் கேள்விகளும் உரையாடல்களுக்கான தேவைகளும் இருக்கின்றன. ஆயினும் சமூக பொருளாதார அடிப்படையிலான நோக்குகளும் ஆய்வுகளும் பொதுத்தளத்தில் நடப்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. போருக்குப் பின்னைய காலத்தில் மட்டும்தான் இந்த நிலைமை என்றில்லாமல், அதற்குமுன்னரும் கூட இந்த உரையாடல்கள் பரவலாக்கப்படவில்லை என்றே சொல்லமுடியும். உள்ளூர்ப் பொருளாதாரம் பற்றிய... Continue Reading →
எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து…
எங்கட புத்தகங்கள் முதலாவது இதழ் வாசித்து முடித்தேன். கச்சிதமாக வெளிவந்திருக்கின்றது. வாசிப்பினையும் வாசிப்புப் பழக்கத்தையும் பரவலாக்கம் செய்யவேண்டும் என்ற நோக்குநிலையுடனான ஒரு செயற்பாட்டு வாதத்தை எங்கட புத்தகங்கள் முன்னெடுத்திருப்பது குறித்து நன்றியும் மகிழ்ச்சியும். நாம் எதை நோக்கி வேலை செய்கின்றோமோ அந்த எல்லையை சென்றடைவதற்குத் தேவையான எல்லாக் கருவிகளையும் நாம் கைவசம் கொள்ளவும் கையாளும் பக்குவம் கொள்ளுவதும் அவசியம். எங்கட புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியினைத் தொடர்ந்து, எங்கட புத்தகங்கள் இதழும் வெளிவந்திருப்பது அவர்கள் அதனை செவ்வனே உணர்ந்திருக்கின்றார்கள்... Continue Reading →
கல்வியும் மதமும் குறித்து பெரியார்…
பெரியாரை வெறுமனே ஒரு நாத்திகவாதியாய் மட்டுமே குறுக்கி அடையாளப்படுத்திக் கடந்துபோவர்களிடம் ஓர் அரசியலும், அறியாமையும் இருக்கின்றது என்றே கருதவேண்டியிருக்கின்றது. பெரியார் தன்னளவில் நாத்திகராய் இருந்தாலும், கடவுள் மறுப்பை வலியுறுத்தினாலும் அதற்குக் காரணம் அவர் கல்வி, சமூகம், அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம் போன்ற அனைத்துப் பரப்புகளிலும் மதம் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவும் ஒடுக்குமுறைகளையும் மூடநம்பிக்கைகளையும் நியாயப்படுத்துவதுமாக இருந்தது என்பதே. சிதம்பரம் அண்ணாமலை நகரில் 19-2-1956 இல் பெரியார் ஆற்றிய உரையின் கீழ்க்காணும் பகுதியைப் பாருங்கள், இதே பிரச்சனை இன்றும்... Continue Reading →
கொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள்
தற்போது உலகளாவிய ரீதியில் பரவியிருக்கின்ற கொரொனாத் தொற்று மற்றும் அதன்விளைவுகள் பற்றிய யுவால் நோவா ஹராரி எழுதிய மூன்று கட்டுரைகளை இதுவரை படித்திருக்கின்றேன்.
In the Battle Against Coronavirus, Humanity Lacks Leadership என்கிற முதலாவது கட்டுரை Time இதழில் வெளியானது.
”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம்
நூலக நிறுவனத்தின் பொறுப்பொன்று காரணமாக அதன் எண்ணிம நூலகத்தில் இருக்கின்ற புத்தகங்களை தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தபோது மேமன் கவி தொகுத்த ”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” என்கிற நூலினைப் பார்த்ததும் அதன் தலைப்பு ஏற்படுத்திய கவனயீர்ப்பினால் உடனேயே தரவிறக்கி வாசிக்கத் தொடங்கினேன். நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் நான் ஊகித்துக் கொண்டதைப் போலவே 2001 ஆம் ஆண்டு ஈழத்து இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கியச் செயற்பாட்டாளர்களில் ஒருவரும் எழுத்தாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவர் இலக்கியத்துறையில் ஆற்றிவரும் பணிகளுக்காக கௌரவ... Continue Reading →
காலம் : 30 ஆண்டு | 54 இதழ்
காலம் இதழ் தொடங்கி 30 ஆவது ஆண்டு நிறைவையும் சொற்களில் சுழலும் உலகு நூல் வெளியீட்டு விழாவையுமொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு காலம் இதழ் பற்றிப் பேசியிருந்தேன். காலம் இதழிற்கும் அல்லது காலம் செல்வத்திற்கும் எனக்கும் இருக்கின்ற தொடர்பு நான் கனடாவுக்கு வந்து புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய காலந்தொட்டு இருக்கின்றது எனலாம். அவரது வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சிகளும் அவர் ஒருங்கிணைத்த பல்வேறு கூட்டங்களும் என்னளவில் முக்கியமானவை. அந்த வகையில் செல்வம் அவர்கள் நன்றிக்குரியவர். நான், வாழும்... Continue Reading →