புதிய தொழினுட்பங்கள் பற்றித் தேடிதேடித் வாசித்து தன்னை இற்றைபப்டுத்து வைப்பவராக இருந்த கருணா தொழினுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்களையெல்லாம் நாம் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துபவராக இருந்தார். தாய்வீடு நடத்திய அரங்கியல் விழாக்களில் அவர் தொடர்ந்து இதனைக் கையாண்டதுடன், தொழினுட்பக் கோளாறுகள் ஏற்படுத்தக் கூடிய நெருக்கடிகள் சில கசப்பான நினைவுகளைத் தந்தபோதும் தொழினுட்பக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளாமல் அவற்றுக்கு அவர் மீது குற்றப்பத்திரிகைகளைச் சிலர் பரப்புரைச் செய்தபோதும் கூட தொடர்ச்சியாக தொழினுட்பத்தை நம்புபவராகவே இருந்தார்.
பிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்…
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியரும் பல்வேறு பாடநூல்களை எழுதியவருமான பிரான்சிஸ் மாஸ்ரர் என்றழைக்கப்படுகின்ற மனுவேல்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் நவம்பர் 18 அன்று தனது 91வது வயதில் இயற்கையெய்தியிருக்கின்றார். அவரது இழப்பு, பலவாண்டுகளுக்கு முன்னர் அவரிடம் கற்ற பல்வேறு மாணவர்களுக்கும் கூட ஏற்படுத்தியிருக்க்கின்ற தாக்கத்தை அறியக்கூடியதாக இருக்கின்றது. பிரான்சிஸ் மாஸ்ரரிடம் நான் கல்விகற்கவில்லை; ஆனாலும் அவரிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் 2017 ஆம் ஆண்டிற்கான கலையரசி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவம் செய்யப்பட்ட... Continue Reading →
பௌத்த குருமாரும் இலங்கை அரசியலும்
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் ஞானசார தேரர் தலைமையில் நீதிமன்றத் தீர்ப்பினைப் புறம் தள்ளி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்திருக்கின்ற நிகழ்வு இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் காட்டுகின்ற செல்வாக்கினையும் அதிகாரத்தையும் மீண்டும் வெளிப்படுத்திக் காட்டுவதுடன் அங்கே சிறுபான்மையினருக்கு எந்தவிதமான சம உரிமைகளும் இலகுவில் கிடைக்கப்போவதில்லை என்பதையும் காட்டுகின்றது சமவுரிமைக்கும் சமத்துவத்துக்கும் குரல் எழுப்புகின்றனவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தவிடயம் குறித்துப் போராடவேண்டும். செப்ரம்பர் 2019 தாய்வீடு பத்திரிகையில் க. சண்முகலிங்கம் எழுதிய பௌத்த குருமாரும் இலங்கை... Continue Reading →
ஈழக்கூத்தன் தாசீசியஸ்
இந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும். பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது. அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம். இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.
ஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு
வெளிநாட்டவர்களின் தமிழ்ச் சேவை என்கிற பெயரில் ஈழத்தில் வடக்கு கிழக்கில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலைகள் பற்றிய தொடரினையே முருகேசு பாக்கியநாதன் தாய்வீட்டில் எழுதிவந்தார். கிட்டத்தட்ட 28 பாடசாலைகளை இந்தத் தொடரில் முருகேசு பாக்கியநாதன் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அதே தாய்வீடு பத்திரிகையில் வடக்குக் கிழக்கில் நூறாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சைவப் பாடசாடசாலைகள் பற்றிய தொடரொன்றினையும் முருகேசு பாக்கியநாதன் எழுதிவந்தார். அந்தத் தொடரில் இருபது பாடசாலைகள் பற்றிய விபரங்களையும் வரலாற்றினையும் திரட்டி ஆவணப்படுத்தியிருந்தார். ஈழத்தைப் பொறுத்தவரை அங்கிருக்கின்ற பாடசாலைகள் பற்றிய இத்தகைய ஒரு ஆவணப்படுத்தல் இதற்கு முன்னர் நடக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒடுக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் ஆவணப்படுத்தல் என்பதை ஓர் அரசியற் செயற்பாடு என்ற புரிதலுடன் முன்னெடுப்பது அவசியமானது. அந்த வகையில் ஈழத்தின் தமிழ்ப் பாடசாலைகளின் வரலாற்றைத் தொகுப்பது என்கிற இந்தப் பெருமுயற்சியை எடுத்த முருகேசு பாக்கியநாதனுக்கு மதிப்புக் கலந்த நன்றியும் பாராட்டுகளும்.
ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு
ரகரொன்றோவில் இடம்பெற்ற 48வது இலக்கியச் சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்வின் நான்காவது அமர்வு ஈழத்தின் சமகாலப் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இடம்பெற்றது. எஸ்.கே. விக்னேஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொலி.
பா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து
அகதியாதல், போரின் அவலம், பின் போர் விளைவுகள் ஏற்படுத்தும் அஞர் என்பன எப்படி எல்லைகளும் கண்டங்களும் கடந்து மானுடத்தைப் பாதித்தன என்பதையும், இவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர்ந்தும் கூட தம் நினைவுகளையும் வடுக்களையும் எப்படி பொருட்களூடாகவும் ஞாபகச் சின்னங்களூடாகவும் பேணி அதை அஞரிலிருந்து கடப்பதற்கான ஒருவிதமான கருவிகளாகவும் கையாளுகின்றனர் என்பதை ஜயகரனின் கதைகளில் காணலாம்.
ஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து…
பொருள்சார்ந்த, விடயம் சார்ந்த அறிவுச்சேகரங்களைத் தொகுக்கின்ற முயற்சிகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்தே நடந்திருப்பதாக பிரித்தானியக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது. ஆயினும் என்சைக்ளோபீடியா என்பதற்கு வழங்கப்படுகின்ற இன்றைய அர்த்தத்துக்கு நெருக்கமானதாக, தொகுப்பு நூல் என்ற அர்த்தத்தில் என்சைக்ளோபீடியா என்ற சொல்லைப் பாவித்தவர் Paul Scalich என்கிற ஜெர்மனியராவார். இவர் எழுதி 1559 இல் வெளியான Encyclopaedia, or Knowledge of the World of Disciplines என்ற நூலே என்சைக்ளோபீடியாவுக்கான சமகால விளக்கத்துக்கு ஏற்ற அர்த்தத்திலும் உள்ளடக்கத்திலும் வெளியான முதல் நூலாகும். ஆயினும் என்சைக்ளோபீடியாவுக்கான உள்ளடக்கத்துடன் இதற்கு முன்னர் வெளியாகிய நூல்கள் அகராதி (Dictionary) என்ற பெயருடனேயே வெளியாகியிருக்கின்றன.
DIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்!
ஏற்றங்களும் இறக்கங்களும் சேர்க்கைகளும் பிரிவுகளும் இழப்புக்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை என்பது மீள மீள நினைவூட்டப்பட்டாலும் இந்த இரவில் இருந்து திரும்பிப்பார்க்கின்றபோது இறந்துபோன நண்பர்களின் பிரிவுகளும் அவர்களுடன் சேர்ந்த களித்த, கழித்த தருணங்களின் தடங்களுமே நினைவெல்லாம் தளும்பிக்கிடக்கின்றன. வாழ்வில் தவிர்க்கவே முடியாத யதார்த்தம் மரணம் என்றபோதும் நெஞ்சார்ந்து கூடிப் பழகினவர்களின் மரணந்தரும் வலிகூட மரணத்திற்கொப்பானது என்பதே அனுபவமாகின்றது. கருணா அண்ணையுடன் நான் நெருக்கமாகப் பழகியது மிகக் குறுகிய காலமே என்றாலும் அந்தத்தாக்கங்கள் இருந்தே தீரும். கருணா அண்ணையை நான்... Continue Reading →
வரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு
சத்தியன் சமகாலத்தின் முக்கியமான தமிழ்வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவராவார். தமிழ்ப்பாஷை நூலின் பதிப்பாசிரியரும் மோகனாங்கியின் பதிப்பாசிரியர்களில் ஒருவருமான சத்தியன் இலக்கிய வரலாறு குறித்துத் தொடர்ச்சியாக உரையாடியும் செயற்பட்டும் வருபவராவர். IBC தொலைக்காட்சியின் இன்றைய விருந்தினர் நிகழ்வில் சத்தியன் கலந்துகொண்டு கூறுகின்ற தகவல்கள் மிக முக்கியமானவை. அதற்கான வீடியோ இணைப்பினைக் கீழே காணலாம். மோகனாங்கியை தேடிய சத்தியனின் பயணத்தினைப் பற்றி முன்னர் நான் எழுதிய கட்டுரைக்கான இணைப்பையும் இங்கே இணைத்துள்ளேன் https://arunmozhivarman.com/2018/02/08/mohanaangi/ சத்தியன் பதிப்பாசிரியராக இருந்த தமிழ்ப்பாஷை நூலினை நூலக... Continue Reading →