வெண்ணிலா கபடிக்குழுவும் யாழ்ப்பாணத்துச் சாதித் திமிரும்

சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். - அம்பேத்கார்வெகுதாமதமாக... Continue Reading →

திமிர்

சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். - அம்பேத்கார்வெகுதாமதமாக... Continue Reading →

உலக ரட்சகர் ஒபாமாவும் உளுத்துப்போன தமிழர்களும்

அலுவலகத்தில் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும், ஓய்வு நேரங்களில் நூலகங்களுக்கு செல்லும்போதும் The new york times, Time, Macleans, The Economist என்கிற சில ஆங்கில இதழ்களை சற்று புரட்டிப்பார்ப்பது எனது அண்மைக்கால வழக்கம். இந்த நிலையில் பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து வந்த சில இதழ்களை பார்த்தபோது கட்டுக்கடங்காத அளவு கோபமே வந்தது. எந்த ஒரு இதழிலும் அதன் அட்டைப்பட செய்தி ( cover story ) பெரும் கவனத்தை பெறுவது... Continue Reading →

சுஜாதா இல்லாமல் ஓராண்டு

தோற்றம் - மே 3, 1935 - - - - மறைவு - பெப்ரவரி 27, 2008நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றதுநாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி).சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு... Continue Reading →

மாற்றம் தேவை : சே குவேரா மற்றும் Slum Dog Millionaire

1சில ஆண்டுகளுக்கு முன்னர் சூரியா நடித்த ஸ்ரீ திரைப்படம் வெளியாகியிருந்த நேரம் அப்படத்தின் இயக்குனர் புஷ்பவாசகன் பத்திரிகை பேட்டி ஒன்றில் ”சே குவேரா, ஹோசிமின், பிரபாகரன் போன்ற புரட்சியாளர்களை பார்த்து நாம் வியந்திருக்கிறோம், ஆனால் அவர்கள் எப்படி, எதன் தூண்டலால் புரட்சியாளர் ஆனார்கள் என்று நாம் யோசிப்பதில்லை. உலக புரட்சியாளார்கள் எப்படி உருவானார்கள் என்று இப்படம் சொல்லும்” என்று சொல்லியிருந்தார். புது இயக்குணர் வேறு. சூர்யா கூட அப்போதுதான் நந்தாவில் நடித்து முடித்து பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார்.... Continue Reading →

ஈழப்பிரச்சனை – பாகம் 2

ஈழப்பிரச்சனை கொழுந்துவிட தொடங்கிய நாட்கள் முதலாக பலவிதமான விமர்சனங்கள் அதன் மீது எழுத போதும் அதை பற்றிய எதிர்வினைகளை நான் தவிர்த்தே வந்தேன். நேற்று சாருவின் வலைப்பக்கத்தில் அந்த கடிததத்தை பார்த்ததும் அதை பற்றிய எதிர்வினையாக நேற்றைய பதிவை எழுதினேன். இந்த கடிதம் மீது நான் வைக்கின்ற மிக முக்கியமான விமர்சனம் என்னவென்றால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை கூறும்போது தமக்கான கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என்று கவலைப்படுபவர் தனது கருத்து சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் மீது... Continue Reading →

நீங்களுமா சாரு நிவேதிதா அல்லது கருத்து சுதந்திரம்

சமூக பிரச்சனைகள் பற்றி அடிக்கடி தனது கருத்துகளை வெளிப்படையாக சொல்லிபருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. விஜய் டிவியில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடிக்கடி இவர் கலந்து கொள்ளுபவர் இவர். அப்படி இவர் கலந்து கொள்ளும்போதெல்லாம் இவரை அறிமுகப்படுத்த “மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லக்கூடிய எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள்” என்று நீட்டி முழக்கி சொல்லப்படுவது உண்டு. காஷ்மீர் பிரச்சனை பற்றி (அஸாதி அஸாதி), சட்டக் கல்லூரி கலகம் பற்றியும் வேறு விடயங்கள் பற்றியும் உயிர்மையில் இவர் எழுதிய அரசியல்... Continue Reading →

ஜெயமோகன் – ஏழாம் உலகம் சொன்னவை

நவீன இலக்கியங்களுடனான தொடர்பு எனக்கு நெருக்கமாவதில் ஜெயமோகனின் பங்கு பெருமளவானது. ஆனால் அவரது புத்தகங்களை என்னால் பெருமளாவு அணுகமுடியவில்லை. முதலில் விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கினேன். ஏனோ என்னால் அதில் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இதே நிலை தான் சாருவின் ஸீரோ டிகிரிக்கும் ஏற்பட்டதால் அது நவீன இலக்கியங்களுடன் எனக்கு அந்த நேரத்தில் போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். ஜெயமோகனின் எழுத்துக்களில் அவர் இலக்கியமுன்னோடிகள் வரிசை என்று எழுதிய சில நூல்களை வாசித்திருக்கின்றேன். சில முக்கியமான... Continue Reading →

சென்று வாருங்கள் ஹைடன்

எம் பதின்ம வயதின் ஆதர்சங்கள் எல்லாம் படிபடியாக விடைபெறும் காலம் என்று முன்பொருமுறை ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி மன்னன் மத்யூ ஹைடனும் இணைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய அணியினருடனான டெஸ்ட் போட்டிகளின் பின்னர் அவரது துடுப்பாட்டம் சோபிக்காததாலும், அவரது ஆரம்ப துடுப்பாட்டக்காரர் என்ற இடத்தில் ஆடக்கூடியவர்களான பில் ஜாக்கஸ் மற்றும் மைக்கேல் கடிச் ஆகியோர் சிறப்பான முறையில் ஆடிவரும் நிலையிலும் இவரது ஓய்வு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் தனது அதிரடி ஆட்டங்கள்... Continue Reading →

அபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள்

அபியும் நானும் திரைப்படம் இந்தியாவில் வெளியாகி ஓரிரு தினங்களின் பின்னரே கனடாவில் வெளியானது. அண்மைக்காலங்களில் நான் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் இது. வைரமுத்து – வித்யாசாகர் – ராதாமோகன் கூட்டணி ஏற்கனவே மொழியில் ஒரு இனிய இசை அனுபவத்தை தந்த பின்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி என்னை மிகவும் கவர்ந்திருந்தன. அதிலும் பாலா உயிரை தந்து பாடி இருந்த அழகிய அழகிய... பாடலும் சின்னம்மா கல்யாணம்... பாடலும் எப்படியாக படமாக்கப்பட்டிருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். பிரகாஷ்ராஜ்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑