பாரதியும் சரவணமுத்துப்பிள்ளையும்

“ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னைஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறைமேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்” என்று தொடங்குகின்ற பாரதி எழுதிய பாடல், நாட்டுப் பாட்டு என்ற பெயரில் 1919 இல் வெளியான அவரது கவிதை / பாடல் தொகுதியில் இடம்பெற்றிருந்தது.  இந்தப் பாடலில் பாரதி,  புத்தம் புதிய கலைகள் – பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்மெத்த வளருது மேற்கே – அந்தமேன்மைக் கலைகள் தமிழினில் இல்லைசொல்லவும் கூடுவ தில்லை –... Continue Reading →

“தலைமறைவு வாழ்க்கை: ஒரு நினைவுக் குறிப்பு”நூல் பற்றிய அறிமுகக் குறிப்புகள்

ரெஜி சிறிவர்த்தனவின் “Working Undergroud: The LSSP in Warime, A memoir of happenings and personalities என்கிற நூலின் தமிழாக்கமான “தலை மறைவு வாழ்க்கை ஒரு நினைவுக் குறிப்பு” என்ற நூல் சமூகம் இயல் பதிப்பகத்தின் வெளியீடாக எஸ் கே விக்னேஸ்வரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. எஸ். கே. விக்னேஸ்வரன் அவர்களுடனான எனது அறிமுகம் கிட்டத்தட்ட 10 - 12 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் கனடாவுக்கு வந்து சேர்ந்த சில காலங்களின் பின்னர் ஆரம்பித்தது. ... Continue Reading →

பல்வங்கர் பலூ : இந்தியக் கிரிக்கெட்டின் பிதாமகன்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நிறைய சூப்பர் ஸ்டார்களால் ஆனது என்று சொல்வார்கள்.  எனக்குக் கிரிக்கெட் அறிமுகமான காலத்தில், இந்தியாவில் இருந்து வருகின்ற தமிழ் இதழ்கள் தந்த அறிமுகத்தால் கவாஸ்கர், கபில்தேவ் என்கிற நாயகர்களின் வழிபாட்டுடன் சேர்ந்தே கிரிக்கெட்டும் அறிமுகமாகி இருந்தது. பின்னர் வெவ்வேறு காலப்பகுதிகளில் சச்சின், கங்கூலி, ஷேவாக், தோணி, கோலி, என்று அந்த ”சூப்பர் ஸ்ரார்” மரபு தொடர்ந்தது.  இந்த நாயக வழிபாடு கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்கிற விமர்சனங்களும் நடந்தபடிதான் இருக்கின்றன.  அந்த... Continue Reading →

ஏர் கனடா விமானப் பணியாளர் வேலை நிறுத்தமும் கனடா தொழிலாளர் சட்டம் 107ம்

ஏர் கனடாவின் விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக கனடா தொழிலாளர் சட்டத்தின் 107 ஆம் பிரிவைப் பிரயோகித்து அவர்கள் வேலைத்துக் திரும்புவது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது என்பதை பெரும்பாலோனோர் அறிவோம்.  தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காகப் பல்வேறு பேச்சுவார்த்தைப் படிநிலைகளின் பின்னர் அவை எவையும் தமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை என்கிறபோதே வேலைநிறுத்தம் போன்ற முடிவுகளை எடுக்கின்றார்கள்.  அப்படி இருக்கின்றபோதும் ஜூன் 2024 இற்குப் பின்னர், கடந்த 14 மாதங்களில் எட்டாவது தடவையாக கனடா தொழிலாளர் சட்டத்தின் 107 ஆம் பிரிவு பிரயோகிக்கப்பட்டு... Continue Reading →

தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன.  கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது.  அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த... Continue Reading →

ஆறுமுகநாவலர்: பதிப்புச் செயற்பாடா? மதச்செயற்பாடா?

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் ரா. கமலக்கண்ணன் பேசிய  ஆறுமுக நாவலரின் பதிப்புச் செயற்பாடுகள் என்கின்ற உரையை யூட்யூபில் பார்த்தேன்.  இதில்  ஆறுமுகநாவலர்  சைவத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக தமிழினை ஒரு கருவியாக பாவித்தார் என்று கூறி  ஆறுமுகநாவலர் தனது நிலைப்பாட்டில் இருந்து சரியாகத்தான் செயற்பட்டார் என்ற வாதத்தை முன்வைத்துப் பேசி இருக்கின்றார் கமலக்கண்ணன்.  இந்த உரையில் கிறிஸ்தவ மிஷனரிகள் இலங்கையில் மதப்பரப்பினைச் செய்யும் பொழுது  கல்விக்கூடங்களை நிறுவினார்கள், பதிப்புக்கூடங்களை நிறுவி நூல் பதிப்புகளைச்... Continue Reading →

ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு 2024 சாகித்திய அகடமி  விருதுகிடைத்தமை குறித்த விமர்சனங்கள் அல்லது புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல்

ஆ. இரா. வேங்கடாசலபதி  எழுதி காலச்சுவடு பதிப்பகம் ஊடாக பெப்ரவரி 2022 இல் வெளிவந்த “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” என்கிற நூலுக்கு இந்த ஆண்டுக்குரிய (2024) சாகித்திய அகாதமி விருது கிடைத்திருப்பதன் தொடர்ச்சியாக  சில உரையாடல்கள் தொடங்கியிருக்கின்றன.  இந்த விமர்சனங்களில், ஏற்கனவே மக்கள் வெளியீடாக 1987 இல் வெளிவந்த நூலுக்கு இப்பொழுது 2024இல் விருது கிடைத்திருக்கின்றது என்கின்ற ஒரு கருத்து முன் வைக்கப்பட்டிருக்கின்றது.  இந்தக் கருத்தை முன்வைத்தவர்களில் ஒருவரான  ரியாஸ் குரானா அவர்கள் டிசம்பர் 22... Continue Reading →

கொம்ரேட் காங்ஸ்டாவின் “Break The Bloody Silence”

கொம்ரேட் காங்ஸ்டாவின் யூட்யூப் பக்கத்தில் “Break The Bloody Silence” என்கிற தற்போதைய பலஸ்தீனப் பிரச்சனை குறித்த தமிழ் ரப் பாடலினையும், அதன் வெளியீட்டுவிழாவில் செல்வா, ராஜு முருகன், யுகபாரதி ஆகியோர் ஆற்றிய உரைகளையும் பார்த்தேன்.  சமூக நீதிக்கான அரசியலுக்கான தணிக்கைகளும், அந்த அரசியல் பேசுவதையும் பேசுவோரையும் மைய ஊடகங்கள் தவிர்த்தும் புறக்கணித்தும் வருகின்ற, வலதுசாரி அரசியலுக்கு எதிரான கருத்துகள் கடுமையாகத் தணிக்கை செய்யப்படுகின்ற சூழலில் இதுபோன்ற சுயாதீன பாடல்களின் வருகை முக்கியமானதும் ஆதரவளிக்கவேண்டியதுமாகும்.  இந்தப் பாடலுக்கான... Continue Reading →

பாடசாலைச் சங்கங்கள்: பொறுப்புணர்வும் மதச்சார்பின்மையும்

குறிப்பு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அழைப்பில் ஆறு திருமுருகன் அவர்கள் கனடா வருகைதர இருப்பது குறித்த செய்தியொன்று வெளியாகி இருந்தது.  இது குறித்து சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்த எனது நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்குடன் சங்கத்து நான் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தைப் பொதுவெளியில் பகிர்கின்றேன்.  இக்கடிதத்தை சங்கத்தின் நிர்வாக சபைக்கு அனுப்பியதுடன் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் இதனை அனுப்பிவைக்கும்படியும் கேட்டிருந்தேன்.  எனது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட சங்கத்தினர் அதனை அங்கத்தவருடன் பகிரும்படியான... Continue Reading →

கெடுப்பாரிலானுங் கெடும் இனம்

கடந்த சில நாட்களில் வெளித்தெரிய வந்த இரண்டு முக்கியமான பிரச்சனைகள் குறித்து இந்த அவதானம். சிவபூமி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மகளிர் இல்லங்களில் இருக்கும் சிறுமியர் கட்டாயமாகத் திறந்த வெளியில் குளிக்குமாறு பணிக்கப்பட்டதாயும் அவ்வாறு அவர்கள் குளிக்கும் இடங்களை நோக்கி CCTV கமரா பொறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள செய்தியில் மக்கள் அறம் சார்ந்து, அவ்வாறு நடந்திருப்பது உண்மையா என்றும் நடந்திருப்பின் சிவபூமி அறக்கட்டளை, அதன் நிர்வாகிகளை பொறுப்புக் கோரும்படி கேட்டுத்தான் குரலெழுப்பியிருக்கவேண்டும். ஆனால் பிரச்சனை, அது தொடர்பாக உதயன்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑