எதிர்வினைக்கான பதில்

(நேற்று நான் எழுதியிருந்த மக்களும் மாற்றுக் கருத்தாளர்களும் தேவைகளும் என்ற பதிவிற்கு மருதன் ஒரு எதிர்வினையை எழுதி இருந்தார்.  அதற்கான என் விளக்கத்தை, விளக்கம் அளவில் சற்றுப் பெரியதாக போய் விட்டதால் தனிப் பதிவாகவே இடுகின்றேன்)இது போன்ற விவாதங்களின் / உரையாடல்களின் தொடக்கத்தைத்தான் நான் விரும்புவதும், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த விரும்புவதும்.  அதை விடுத்து மக்கள் பங்கேற்காமல் ஈழப் பிரச்சனை போன்ற விவகாரங்களில் ஒதுங்கி நின்றதும் பிழை,அப்படி மக்கள் ஒதுங்கி நிற்கவேண்டும், தாம் சொல்வதின் படி... Continue Reading →

மக்களும் மாற்றுக்கருத்தாளர்களும் தேவைகளும்

எந்த ஒரு மொழியிலும் சொற்கள் கால ஓட்டத்தில் தமக்கான அர்த்தத்தை இழந்து விடுவது அல்லது வேறு அர்த்தங்களுடன் அழைக்கப்படுவது நடந்து கொண்டு இருப்பதுடன் சில சொற்கள் அவை கொண்டிருந்த அர்த்தத்துக்கு எதிரான அர்த்தத்துடன் பொருள் கொள்ளப்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது.  கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று கிருஷ்ணனின் கையில் இருக்கின்ற வெண்சங்கிடம் கேட்பதாக ஆண்டாள் பாடிய பாடலில் நாற்றம் என்பது இப்போது வாசனை என்ற பொது வழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாக மாறிவிட்ட்து.  நாற்றம் என்பது கெட்ட... Continue Reading →

G8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்

கனடாவில் G8 மற்றும் G20 கூட்டங்களுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் G20 என்றால் என்னவென்று கேட்டார். இயலுமானவரை சுருக்கமாக எப்படி விளங்கப்படுத்தலாம் என்று யோசித்தேன். சட்டென்று பொறி தட்டக் கூறினேன் "பாட்ஷா திரைப்படத்தில் ரகுவரன் எல்லாக் கொள்ளைக்காரர்களையும் அழைத்து தாம் ( கொள்ளைக்காரர்கள்) நன்றாக இருக்கவும் மென்மேலும் கொள்ளை அடிக்கவும் தம்மிடையே புரிந்துணர்வுடன் இருப்பது எவ்வளவு அவசியம் என்று (சாத்தான்) வேதம் ஓதுவார். அது போல உலகின் மிகப் பெரிய கொள்ளைக்காரர்களின் பிரதிநிதிகள் 20... Continue Reading →

பாரதி பாடல்களுக்குத் தடை புத்தகம் பற்றிய சில பகிர்தல்கள்

"சென்னை அரசாங்கம் சுயமாகத் தீர்மானிக்கும் ஆற்றல் முற்றிலும் தனக்குக் கிடையாது என்பதை இந்த விஷயத்தின் மூலம் வெளிக்காட்டி விட்டது. தமிழ் படிக்கும் மக்கள் நேரடியாக இகழ்ந்து அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதை அவர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இந்த அரசாங்கம் மக்கள் கருத்துக்களுக்கு ஏதேனும் மதிப்புக் கொடுக்கிறது என்றால், இந்த நடவடிக்கையை அது மறுபரிசீலனை செய்யவேண்டும். தென்னிந்திய மக்களின் தேசிய உணர்வினை இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திவிடமுடியும் என எண்ணினால் அவர்கள் கருத்து முற்றிலும் தவறானது". இந்த வரிகள் 82... Continue Reading →

சோளகர் தொட்டி மீட்டுத் தந்த போர்க்கால நினைவுகள்

அண்மையில் வாசித்த நூல்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவை என்று சோளகர் தொட்டியையும், லிவிங் ஸ்மைல் வித்யாவின் 'நான் வித்யா'வையும் குறிப்பிடலாம். வாசிப்பின் மீது அக்கறை கொண்டவர்கள் மாத்திரம் அல்லாமல் தாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று இவற்றைக் குறிப்ப்டவேண்டும். சோளகர் தொட்டி நாவல் அதன் ஆசிரியர் ச. பாலமுருகன் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி எழுத, வித்யா, தான் சந்தித்த அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். வாழ்வின் தரம்... Continue Reading →

தாயகக் கனவுகள்

சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய Ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால்,... Continue Reading →

தாயகக் கனவுகள்

சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால்,... Continue Reading →

இன்றும் வெல்லும் நீதி – என்னுயிர்த் தோழன்

மிக தீவிரமான திரைப்பட ரசிகனாக இருந்தும் நல்ல சினிமா, கெட்ட சினிமா என்கிற விவாதங்களில் நான் ஒரு போதும் ஈடுபடுவதில்லை. என்னை பொறுத்தவர சினிமாவை ரசித்த சினிமா, ரசிக்காத சினிமா என்றுதான் பாகுபடுத்த முடிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று கூறுவது இப்போதெல்லாம் ஒரு fashion ஆகவே மாறிவிட்டது. மொழி திரைப்படத்தின் 100வது நாள் விழாவின் போது ஞாநிக்கு பதிலாக இயக்குநர் அமீர் சொன்னது போல நல்ல சினிமாக்களை எல்லாம் திரையரங்கில் சென்று பார்த்திருந்தால்,... Continue Reading →

கொழும்புக் காட்சிகளும், ஊடகங்களும், தமிழ் மொழிக்கான எதிர்காலத் தேவைகளும் : சில பகிர்தல்கள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரான கொழும்புப் பயணம் என்பது எத்தனையோ ஆச்சரியங்களுடனும், சலிப்புகளுடனும், சந்தோசங்களுடனும் மெல்ல முடிவடைந்தது. தாய்நாடு பற்றிய ஏக்கமும், நனவிடை தோய்தல்களும் சராசரிக்கு சற்று அதிகமாகவே நிரம்பிய எனக்கு இது போன்ற உணர்வுகளின் சங்கமம் எதிர்பார்ககூடிய ஒன்றே.-1-தலதா மாளிகையை பார்வையிட குடும்பத்துடன் சென்றிருந்தோம். புத்தரின் புனிதப் பல் இருப்பதாக நம்பப்படும் பழம் சிறப்புடையது தலதா மாளிகை. தலதா மாளிகையில் முதலில் எம்மை வரவேற்றதே ஒரு தமிழ்ப் படுகொலைதான். அதன் வாசல் ஒன்றில் “உட் பேகவாண்டாம்” என்றூ... Continue Reading →

நடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் | புதிய வரவுகள்

  - 1 - நடிகர் விஜய் இதோ அரசியலுக்கு வருகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார், சேர்ந்தே விட்டார், என்ற செய்திகள் எல்லாம் மெல்லக் கரைந்து போய், அவரது வேட்டைக்காரன் திரைப்படம் தான் வரப் போகிறது என்பது மெல்ல உறுதியாகி இருக்கின்றது. பரபரப்புச் செய்திகளை அள்ளிக் குவித்து, மோசமான வியாபாரம் செய்து கொண்ட பத்திரிகைகளும், இதழ்களும் மெல்ல மெல்ல இப்போது "விஜய் சொன்ன நோ, சூர்யாவுக்கு வலை வீசும் காங்கிரஸ்" என்று அடுத்த சரவெடியை பற்ற... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑