ஈழத்தமிழர்களின் மிக முக்கியமான புலமையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை தமிழ் மொழியிலும், சாசனவியலிலும், மதங்கள் பற்றியும் ஆழ்ந்த புலமைகொண்டிருந்தார். தனது 28வது வயதிலேயே இரண்டு கலாநிதிப் பட்டங்களைப் பெற்றிருந்த அவர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் மாணவர். வடமராட்சியில் இருக்கின்ற புலோலியில் 1936ல் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை புலோலித் தமிழ்ப்பாடசாலையிலும், பின்னர் ஹாட்லிக் கல்லூரியிலும் கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் கடமையாற்றியவர். பின்னர் 1984 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத்... Continue Reading →
ஆவணப்படுத்தலும் தமிழர்களும்
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள்... Continue Reading →
நூலகம் – உன்னதம் – விழாக்கள் : சில எண்ணங்கள்
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 28 ஆண்டுகளாகிவிட்டன. சில வருடங்களின் முன்னர் எரியும் நினைவுகள் என்ற பெயரில், இப்போது பார்த்தாலும் நெஞ்சை உலுக்கும் அந்த நினைவுகளை சோமிதரன் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த நூலக எரிப்புப் பற்றி அதிகம் பேசும் பலர் கூட இந்த ஆவணப் படத்தைப் பார்க்கவில்லை என்று பலருடன் பேசியபோது தெரிந்து கொண்டேன். 'யாழ்ப்பாணம் எரிகிறது', '24 மணி நேரம்' ஆகிய இரண்டு நூல்களிலும் யாழ்ப்பாண எரிப்புப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா “ஒரு லட்சம் புத்தகங்கள்” என்ற பெயரில்... Continue Reading →