நட்பை திருமணம் பிரித்திடுமா : எதிர்பக்கம் சிறுகதை

மனிதவாழ்வின் பயணத்தில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ரசனைகளும், விருப்பங்களும் கொள்கைகளும் முக்கியத்துவங்களும் மாறிவருவதுபோல உறவுகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் எம் கண்ணுக்கு தெரியாத ஒரு ரகசியபாதையில் தடம் மாறி செல்கின்றன. குழந்தை பருவத்தில் தாயுடன் இருக்கின்ற நெருக்கமான உறவு பின்னர் தந்தையுடன் நெருங்கிபின்னர் பதின் பருவத்தின் மத்தியில் நண்பர்களுடன் தாவுகின்றது. இந்த உறவு எல்லார் வாழ்விலும் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது. பொதுவாக உறவுகள் எல்லாம் ஏதோ ஒரு தீர்க்கமுடியாத பந்தத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நட்பை பொறுத்தவரை அதற்கு எந்தவித... Continue Reading →

பிள்ளைகள் கூடி பிதாமனுக்கு அஞ்சலி

“நாம் கற்றதெல்லாம் உன்னிடத்தில் பெற்றது நாம் பெற்றதெல்லாம் உன்னை கற்றதால் வந்தது” (எழுத்தாளர் சுஜாதாவின் மறைவை முன்வைத்து கலைஞர் முதல் கையெழுத்து பிரதி எழுத்தாளர்கள் வரை அஞ்சலிகளையும் அவரது படைப்புகள் பற்றிய ஆய்வுகளையும் எழுதி விட்ட நிலையில் அவரது பிறந்ததினமான இன்று (மே 3 1935) என்மீதான சுஜாதவின் பாதிப்புகள் பற்றி). சுஜாதாவின் மறைவை ஒட்டி சில பத்திரிகைகளும் நபர்களும் அவர் ஒரு பைலட், ஒரு விஞ்ஞானி, பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்தவர் என்றெல்லாம் எழுதிவிட்டு போகிற... Continue Reading →

பாலகுமாரன்: தொழிற்சங்கவாதி (?); எழுத்தாளர்; சித்தர்

அண்மையில் மீண்டும் ஒருமுறை பாலகுமாரன் எழுதிய இரும்புக் குதிரைகள் என்ற புத்தகத்தை வாசித்து முடித்த போது பாலகுமாரன் மீது லேசான கோபம் வந்தது; ஏன் இவர் இப்படியான புத்தகங்களை இப்போது எழுதுவது இல்லை. அதிலும் அந்த குதிரை கவிதைகள்.குதிரைகள் பயணம் செய்யா கூட்டமாய் பறவை போல இலக்குகள் குதிரைக்கில்லை முன்பின்னாய் அலைதல் தவிர… …………………………….. …………………………………. இலக்கில்லா மனிதர் பெரியோர் உள்ளவர் அடைய மாட்டார். என்று அவர் எழுதிய குதிரை கவிதைகள் எமது பதின் வயதுகளில் எம்மிடையே... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑