ரொரன்றோவில் வெகுஜனக் கலாசாரத்தின் மத்தியில் சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களை இழுக்கும் நோக்குடன் நாடகம் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் இணைந்து 1996 இல் உருவாக்கிய அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும். பொதுவாக மனவெளி கலையாற்றுக் குழுவினர் வருடாந்தம் “அரங்காடல்” என்ற பெயரில் நாடகவிழாக்களை ரொரன்றோவில் நடத்துவது உண்டு. அந்த வகையில் அதன் 17வது அரங்காடல் ஏப்ரல் 26ம் திகதி “ஃப்ளேடோ மார்க்கம் தியேட்டர்” இல் நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர். மனவெளி கலையாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில்... Continue Reading →
சாம்பல் பறவைகள் குறுநாவலை முன்வைத்து
ஒப்பீட்டளவில் குறைவாகவே படைப்பிலக்கியங்கள் வெளியாகும் கல்முனையில் இருந்து எஸ். அரசரெத்தினம் எழுதிய சாம்பல் பறவைகள் என்ற குறுநாவலை வாசிக்கமுடிந்தது. இக்குறுநாவல் 2009ல் ஈழப்போரில் தொடர்ச்சியாக அகப்பட்டு, கடுமையான இழப்புகளைச் சந்தித்த ஒரு குடும்பத்தைப் பற்றியும், அதன் கதாபாத்திரங்கள் ஊடாக எம்முடனான உரையாடல்களையும், விமர்சனங்களையும் மேற்கொள்ளுவதால் முக்கியமான ஒன்றாக அமைகின்றது. வன்னியைச் சேர்ந்த பவானிக்கும் வவுனியாவைச் சேர்ந்த ஆனந்தனுக்கும் அவர்கள் வவுனியாவில் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோது காதல் உருவாகின்றது. பெரும் செல்வந்தரான ஆனந்தனின் தந்தை தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு,... Continue Reading →
பூர்ணம் விஸ்வநாதன் முன்னொருநாள் சொன்ன கதை
பூர்ணம் விஸ்வநாதன் என்றவுடன் எமக்கு அவர் திரையில் ஏற்று நடித்த சில பாத்திரங்களே நினைவு வரும். குறிப்பாக மகாநதி, வருஷம் 16, ஆசை திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள். தனது நாடகங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுத்தவர் பூர்ணம் விஸ்வநாதன் என்று சுஜாதா எழுதியிருக்கின்றார். தொடக்கத்தில் தான் எழுதி அவர் நடித்த நாடகங்கள் நிறைவானதாக தனக்குத் தோன்றியதால் பிற்பாடு சில நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதனை மனதில் வைத்துக்கொண்டே தான் எழுதியதாகவும் சுஜாதா கற்றதும் பெற்றதுவும் இல் குறிப்பிட்டிருந்தார். ... Continue Reading →
மனுநீதிச் சோழன் யார்? அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா?
Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது. அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன்... Continue Reading →
மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ!
எஸ்பொ விற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். வாசிப்பு மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட எனது தலைமுறையைச் சேர்ந்த பலரையும்போலவே எஸ்பொ எனக்கும் பிடித்தமான ஒரு எழுத்தாளர். சிறுவயதில் இந்தியப் பத்திரிகைகளையே அதிகம் படித்து வளர்ந்தவன் என்பதால் எழுத்தாளன் என்கிற கர்வத்துடனனான விம்பங்களாக இருவர் என் மனதில் பதியவைக்கப்பட்டனர். ஒருவர் பாரதி. அடுத்தவர் ஜெயகாந்தன். பின்னாளில் அந்த திருவுருக்கள் மனதில் தூர்ந்துபோயினர். ஆனால் மறக்கவே முடியாதவராக, பேராளுமையாக தாக்கம் செலுத்தியவர் எஸ்பொ அவர்கள். அவருடன் நெருக்கமான... Continue Reading →
எஸ்பொ பற்றி ஒரு நனவிடை
முற்குறிப்பு : சென்றவாரம் வழமைபோலவே கடைசிநேரத்தில் வாராந்த யாழ் உதயனுக்கான கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது முகநூல் உரையாடல் மூலம் இடைவெட்டிய நண்பர் கற்சுறா “எஸ்பொ அதிக நாள் தாங்கமாட்டார் என்று செய்தி கிடைத்திருப்பதாகக் கூறினார். அதன்பிறகு அன்றைய கட்டுரையை மனமொருமித்து எழுதமுடியவில்லை. மனம்பாரமான வழமையான பொழுதுகளில் செய்வதுபோலவே மலேசியாவில் இருக்கின்ற நண்பன் விசாகனை அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் வேலையில் விடுப்பு, தூங்கி எழுந்தால் தொலைபேசியில் குறுஞ்செய்தி காத்திருந்தது. தேவகாந்தன் அனுப்பியிருந்தார், “EsPo expired two hrs... Continue Reading →
இஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்
நவாஸ் சௌபி எழுதிய “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்கிற நூல் ஈழத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்பில் இருந்தும், ஏற்கனவே அழைக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற பகுப்பில் இருந்தும் வேறுபட்டு, மேற்குறித்த பகுப்புகளின் போதாமையை எடுத்துரைத்து “முஸ்லிம் தேசிய இலக்கியம்” என்ற அடையாளத்தின் அவசியத்தினை தர்க்கபூர்வமாக முன்வைக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் தமிழ்மொழியைப் பேசுவதால் தமிழ்பேசும் மக்கள் என்ற அரசியல் அடையாளத்தாலேயே நீண்டகாலம் அழைக்கப்பட்டனர், அவர்கள் படைக்கும் இலக்கியமும் ஈழத் தமிழ் இலக்கியம் என்ற அடையாளத்தினுள்ளேயே உள்ளடக்கப்பட்டது.... Continue Reading →
மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? 2
நான் மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? என்கிற என் முன்னைய குறிப்பில் வலியுறுத்தியது, இங்கே குறிப்பிடப்படும் அறம் என்பது, “ஆள்வோர்க்கான அறம்” என்பதை வலியுறுத்தவே. அவ் அறம், எல்லாருக்கும் பொதுவானதாகவோ அல்லது எல்லாருக்கும் அறமாகவோ இருப்பதில்லை. புராணக்கதைகள், தொன்மங்கள் என்பவற்றைப் பற்றி ஆராயும்போது அன்றைய காலப்பகுதியுடன் வைத்தே பேசவேண்டும். அன்றைய வழமைகளை ஆராயவேண்டும். அவற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும். அவையெல்லாம் புராணங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல. அதே நேரத்தில் புராணங்கள், அடிப்படைவாதம் ஒன்றினையோ அல்லது மதவெறியையோ தூண்டவோ அல்லது... Continue Reading →
மகாபாரதக் கதையின் அரசியல் என்ன?
மகாபாரதக் கதையின் அரசியல் என்ன என்கிற கேள்வியொன்றினை அண்மையில் முகநூலில் மீராபாரதி அவர்கள் எழுப்பி இருந்தார். மகாபாரதம் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த காவியம். இராமாயணத்தைவிடவும் கூட. அதிலும் குறிப்பாக நான் யாழ்ப்பாணத்தில் இருந்த 1990 – 96 வரையான காலப்பகுதியில் அனேகமான ஆலயங்களில் திருவிழாக்காலங்களில் கம்பராமாயண சொற்பொழிவு தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது. பெரும்பாலும் கம்பன் கழகத்தைச் சேர்ந்தவர்களாலும், சில தனிப்பட்டவர்களாலும் இச்சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. ஆயினும், மகாபாரதம் போல இராமாயணம் ஒருபோதும் நெருக்கமானதாக இருந்ததில்லை. மகாபாரதம்... Continue Reading →
ஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள்
சென்ற கோடைகாலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீஸ்கந்தன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பல்வேறு சஞ்சிகைகளிலும், இதழ்களிலும் தொடர்ச்சியாக தான் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளை அரியாலையூர் நாடகக் கலைஞர்கள் பற்றிய ஒரு தொகுப்பாகவும், தனது அனுபவங்களை, நினைவுப்பதிவுகளை, அவரே சொன்ன வார்த்தையையில் குறிப்பிட்டால் முசுப்பாத்திகளை ஒரு தொகுப்பாகவும் ஆக இரண்டு புத்தகங்களாக்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார். அடடே, நல்ல விஷயம் தானே. அது முக்கியமானதும் கூட என்று எனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தேன். நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை... Continue Reading →