ரெஜி சிறிவர்த்தனவின் “Working Undergroud: The LSSP in Warime, A memoir of happenings and personalities என்கிற நூலின் தமிழாக்கமான “தலை மறைவு வாழ்க்கை ஒரு நினைவுக் குறிப்பு” என்ற நூல் சமூகம் இயல் பதிப்பகத்தின் வெளியீடாக எஸ் கே விக்னேஸ்வரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. எஸ். கே. விக்னேஸ்வரன் அவர்களுடனான எனது அறிமுகம் கிட்டத்தட்ட 10 - 12 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் கனடாவுக்கு வந்து சேர்ந்த சில காலங்களின் பின்னர் ஆரம்பித்தது. ... Continue Reading →
றஷ்மியின் சற்றே பெரிய கதைகளின் புத்தகம் – வாசிப்பனுபவம்
ஓவியராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் கவிஞராகவும் நன்கறியப்பட்டவரான றஷ்மி நிறைய நூல்களின் அட்டைப்படங்களை தனித்துவமான அழகியலோடு உருவாக்கிக் கொடுத்திருப்பவர். பல எழுத்தாளர்கள், கலை இலக்கியச் செயற்பாடுகளின் கோட்டோவியங்களை அவ்வப்போது வரைந்தும் முகநூலில் பகிர்ந்துவருவார். பலரது புரொஃபைல் படங்களாக றஷ்மி வரைந்த கோட்டோவியங்களே இருப்பதை அவதானித்திருக்கின்றேன். இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள், ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு, ஈதேனின் பாம்புகள், ஈ தனது பெயரை மறந்துபோனது, அடைவுகாலத்தின் பாடல்கள் என்கிற இவரது... Continue Reading →
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் நூலை முன்வைத்து
எழுபதுகளின் இறுதி முதல் எண்பதுகள் வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பதும் எழுதுவதும் எனக்குத் தனிப்பட திருப்தியளிக்கின்ற, ஆர்வமான ஒரு விடயம். ஈழத்தில் கலை இலக்கியங்களின் வடிவம், உள்ளடக்கம், கருத்தியல், சமூக நோக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்த காத்திரமான விமர்சனங்கள் இடம்பெற்ற காலப்பகுதியின் விளைவுகளாக இந்தக் கலை இலக்கியப் படைப்புகளை அவதானிக்கமுடியும். இந்த விவாதங்களினால், விமர்சனத்துறை கூர்மையடைந்ததுடன் படைப்புகளும் செழுமையடைந்தன. இந்தக் காலப்பகுதியில் எழுதியதுடன், இதழாசிரியராகவும் செயற்பட்டு, விவாதங்களில் பங்கேற்றவர் டானியல் அன்ரனி. 1947 முதல்... Continue Reading →
மற்றும் பலர் நடித்த: ஓர் அறிமுகம்
சிறுவர் இதழ்களை வாசிப்பதால் ஏற்பட்ட வாசிப்பின் அறிமுகம் அதிலிருந்து வெகுஜன இதழ்களை நோக்கிச் சென்றபோது கல்கண்டில் பொது அறிவுத் துணுக்குகள், ஒரு பக்கக் கட்டுரைகள், சங்கர்லால் துப்பறியும் தொடர்கதைகள் போன்றவற்றைப் போலவே அதில்வரும் தமிழ்த் திரைப்பட விமர்சனங்களும் விருப்பத்துக்குரியனவாக அமைந்திருந்தன. திரைப்படம் என்பது அப்போது எனக்குத் தமிழ்த் திரைப்படங்களாகவே இருந்தது. திரைப்படங்களைப் பார்ப்பது போலவே திரைப்படங்கள் குறித்த இதழ்களை வாசிப்பதிலும், திரை விமர்சனங்களை வெவ்வேறு இதழ்களில் வாசிப்பதிலும் சிறுவயதில் ஆர்வம் இருந்தது. அந்த இதழ்களிலும் சினிமா பற்றிய... Continue Reading →
“வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்
நூல்களுக்கான அறிமுக உரை வழங்குவது என்பது எச்சரிக்கையுடன் கையாளவேண்டியியதாகவே இருந்துவருகின்றது. பொதுவாக அறிமுக உரைகள் நூல்களின் வெளியீட்டின்போதே வழங்கப்படுகின்றன. இதனால் அந்த நூலை அரங்கிலிருப்போரும் இதர வாசகர்களும் வாசித்திருக்கக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. இதனால் அறிமுக உரையாற்றுபவருக்கு நூலின் உள்ளடக்கம் குறித்த பின்னணி, நூலாசிரியர் குறித்த எழுத்து, நோக்கு போன்றவை குறித்ததானவையாகவும் நூல் குறித்த அறிமுகமாகவும் கூறுவதாகவே அறிமுக உரை அமைகின்றது. உண்மையில், நூல் வெளியீடு செய்யப்பட்ட சிலகாலங்களின் நூலினை வாசித்தவர்கள் நூல் குறித்த... Continue Reading →
தாயகக் கனவுகள் நூல் அறிமுகம் – சத்தியதேவன்
தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஜூன் 28 அன்று நடைபெற்ற புத்தக அரங்க விழாவில் எனது "தாயகக் கனவுகள்: நூல் குறித்த அறிமுகத்தை சத்தியதேவன் செய்திருந்தார். இந்நிகழ்வைப் பதிவுசெய்து காணொலியை Red Fox Club பதிவுசெய்துள்ளனர். அந்தக் காணொலியை இங்கே பகிர்கின்றேன். தொடர்ச்சியாக புத்தக அறிமுக விழாக்களை ஒருங்கிணைக்கும் தனுஜனுக்கும், உரையாற்றிய சத்தியனுக்கும், காணொலியப் பதிவுசெய்த Red Fox Clubக்க்கும் நன்றி.https://www.youtube.com/embed/fpjOgyRiHGE?si=ZXf-sSVDBSZ2BqF9&start=2880
சட்டநாதன்: தனித்துவமான ஒரு படைப்பாளி
எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடர்ச்சியாக வாசித்தேன். இலக்கியம் / எழுத்துச் செயற்பாட்டின் நோக்கம், அதன் வடிவம், உள்ளடக்கம் என்பன குறித்த பல்வேறு விவாதங்களும், அந்த விவாதங்களின் தெறிப்புகளாக / எதிர்வினைகளாகவும் பல்வேறு படைப்புகள் இந்தக் காலத்தில் வெளிவந்திருந்தன. அவற்றை வாசிக்கின்றபோது உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் இந்தக் காலத்தில் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது. அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும்... Continue Reading →
வாழிடத்தைக் காக்கும் வெஞ்சினம் கொண்ட குருவி
தமிழின் முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவரான தேவகாந்தன் தனித்துவமான மொழியாலும், தேர்வுசெய்யும் வித்தியாசமான களங்களாலும், தனது புனைவுகளூடாக சம்பவங்களையும் கருத்தியலையும் ஊடுநூலும் பாவுநூலுமாய்க் கலந்துபின்னும் ஆற்றலாலும் அறியப்பட்டவர். காவியங்கள் மீதான அவரது தாடனத்தையும் அவற்றை ஈடுபாட்டோடு கற்றுத் தெளிவதற்கான அவரது முனைப்புகளையும் அவருடனான உரையாடல்களின் வழியே அறிந்திருக்கின்றேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் தேவகாந்தன், மிகுந்த தேடலுடன் தொடர்ச்சியாக தத்துவங்களையும், கோட்பாடுகளையும், அபுனைவு நூல்களையும் தொடர்ந்து தேடித்தேடி வாசித்தும் வருபவர். தேவகாந்தன் எழுதி இதுவரை 12... Continue Reading →
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் பற்றிய எனது உரையின் காணொலி
ஏப்ரல் 20, 2024 அன்று Zoom ஊடாக இலக்கியவெளி ஒருங்கிணைத்திருந்த இணையவெளி கலந்துரையாடல் 37இல் டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் நூல் பற்றிய எனது உரையின் காணொலிவடிவம். https://www.youtube.com/embed/C98rbo4cog8?si=CtwbAx240Erir412 நன்றி - இலக்கியவெளி
பால் – பாலியல், காமம் – காதல், பெண் – பெண்ணியம்: ஓர்ஆண்நிலைநோக்கு : உரையாடல் ஒன்றுக்கான குறிப்புகள்
குறிப்பு: மீராபாரதி எழுதிய பால் பாலியல், காமம் காதல், பெண் பெண்ணியம் – ஓர் ஆண் நிலை நோக்கு என்கிற நூலின் வெளியீட்டினை முன்வைத்து ரொரன்றோவில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும்படி நூலாசிரியர் மீராபாரதி கேட்டிருந்தார்.. இந்நூல் பேசுகின்ற விடயமும் அது பற்றி மீராபாரதி அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கறையும் முக்கியமானது. அந்த வகையில் இந்நூலையும் அதில் உள்ள கட்டுரைகளையும் தன் அக்கறையின் பாற்பட்டும், தான் கொண்ட கருத்தியலின் மீதிருக்கும் நம்பிக்கையின் பாற்பட்டும் மீராபாரதி தன்னோடும் சமூகத்தோடும் தொடர்ச்சியாக நடத்திய... Continue Reading →