மருதன்,நீங்கள் எனது பதிவுக்கு ஆற்றிய எதிர்வினைக்கு மீண்டும் நான் பதில் அளித்திருந்தேன். அதற்கு மீண்டும் எதிர்வினையாற்றி இருக்கின்றீர்கள். தொடர்ச்சியாக விவாதம் நிகழ்வது வரவேற்கத்தக்கது என்றாலும், எந்த விதமான அர்த்தமும் இல்லாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் எனது கட்டுரையில் நான் மாற்றுக் கருத்தாளர்கள் விடும் தவறுகள், ஊடகங்கள் ஈழப் பிரச்சனையை வணிக நோக்கில் அணுகுவது, மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிடுவது, புலி எதிர்ப்பையே மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் ஏற்றுக்... Continue Reading →
எதிர்வினைக்கான பதில்
(நேற்று நான் எழுதியிருந்த மக்களும் மாற்றுக் கருத்தாளர்களும் தேவைகளும் என்ற பதிவிற்கு மருதன் ஒரு எதிர்வினையை எழுதி இருந்தார். அதற்கான என் விளக்கத்தை, விளக்கம் அளவில் சற்றுப் பெரியதாக போய் விட்டதால் தனிப் பதிவாகவே இடுகின்றேன்)இது போன்ற விவாதங்களின் / உரையாடல்களின் தொடக்கத்தைத்தான் நான் விரும்புவதும், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த விரும்புவதும். அதை விடுத்து மக்கள் பங்கேற்காமல் ஈழப் பிரச்சனை போன்ற விவகாரங்களில் ஒதுங்கி நின்றதும் பிழை,அப்படி மக்கள் ஒதுங்கி நிற்கவேண்டும், தாம் சொல்வதின் படி... Continue Reading →
மக்களும் மாற்றுக்கருத்தாளர்களும் தேவைகளும்
எந்த ஒரு மொழியிலும் சொற்கள் கால ஓட்டத்தில் தமக்கான அர்த்தத்தை இழந்து விடுவது அல்லது வேறு அர்த்தங்களுடன் அழைக்கப்படுவது நடந்து கொண்டு இருப்பதுடன் சில சொற்கள் அவை கொண்டிருந்த அர்த்தத்துக்கு எதிரான அர்த்தத்துடன் பொருள் கொள்ளப்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று கிருஷ்ணனின் கையில் இருக்கின்ற வெண்சங்கிடம் கேட்பதாக ஆண்டாள் பாடிய பாடலில் நாற்றம் என்பது இப்போது வாசனை என்ற பொது வழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாக மாறிவிட்ட்து. நாற்றம் என்பது கெட்ட... Continue Reading →
சோளகர் தொட்டி மீட்டுத் தந்த போர்க்கால நினைவுகள்
அண்மையில் வாசித்த நூல்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவை என்று சோளகர் தொட்டியையும், லிவிங் ஸ்மைல் வித்யாவின் 'நான் வித்யா'வையும் குறிப்பிடலாம். வாசிப்பின் மீது அக்கறை கொண்டவர்கள் மாத்திரம் அல்லாமல் தாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று இவற்றைக் குறிப்ப்டவேண்டும். சோளகர் தொட்டி நாவல் அதன் ஆசிரியர் ச. பாலமுருகன் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி எழுத, வித்யா, தான் சந்தித்த அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். வாழ்வின் தரம்... Continue Reading →
தாயகக் கனவுகள்
சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய Ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால்,... Continue Reading →
தாயகக் கனவுகள்
சென்ற ஆண்டின் இறுதியில் மிலன் குந்த்ரோவ் எழுதிய ignorance என்ற நாவலின் தமிழாக்கம் மாயமீட்சி என்ற பெயரில் வெளிவருகின்றது என்கிற அழைப்பிதழ்கள் என் மின் அஞ்சல் முகவரியை மொய்த்தபோது நான் இலங்கை போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தேன். வாழும் தமிழ் பதிப்பக வெளியீடாக மணி வேலுப்பிள்ளையின் மொழி பெயர்ப்பில் எழுத்துப் பிழைகள் சற்று அதிகமாகவே தென்பட்டாலும், சிறப்பான அச்சு நேர்த்தியுடன் புத்தகம் வெளியாகி இருந்தது. நாவலின் கருவும், அப்போது நான் இருந்த மன நிலையும் பெரிதளவும் ஒத்துப் போயிருந்ததால்,... Continue Reading →
கொழும்புக் காட்சிகளும், ஊடகங்களும், தமிழ் மொழிக்கான எதிர்காலத் தேவைகளும் : சில பகிர்தல்கள்
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரான கொழும்புப் பயணம் என்பது எத்தனையோ ஆச்சரியங்களுடனும், சலிப்புகளுடனும், சந்தோசங்களுடனும் மெல்ல முடிவடைந்தது. தாய்நாடு பற்றிய ஏக்கமும், நனவிடை தோய்தல்களும் சராசரிக்கு சற்று அதிகமாகவே நிரம்பிய எனக்கு இது போன்ற உணர்வுகளின் சங்கமம் எதிர்பார்ககூடிய ஒன்றே.-1-தலதா மாளிகையை பார்வையிட குடும்பத்துடன் சென்றிருந்தோம். புத்தரின் புனிதப் பல் இருப்பதாக நம்பப்படும் பழம் சிறப்புடையது தலதா மாளிகை. தலதா மாளிகையில் முதலில் எம்மை வரவேற்றதே ஒரு தமிழ்ப் படுகொலைதான். அதன் வாசல் ஒன்றில் “உட் பேகவாண்டாம்” என்றூ... Continue Reading →
நடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் | புதிய வரவுகள்
- 1 - நடிகர் விஜய் இதோ அரசியலுக்கு வருகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார், சேர்ந்தே விட்டார், என்ற செய்திகள் எல்லாம் மெல்லக் கரைந்து போய், அவரது வேட்டைக்காரன் திரைப்படம் தான் வரப் போகிறது என்பது மெல்ல உறுதியாகி இருக்கின்றது. பரபரப்புச் செய்திகளை அள்ளிக் குவித்து, மோசமான வியாபாரம் செய்து கொண்ட பத்திரிகைகளும், இதழ்களும் மெல்ல மெல்ல இப்போது "விஜய் சொன்ன நோ, சூர்யாவுக்கு வலை வீசும் காங்கிரஸ்" என்று அடுத்த சரவெடியை பற்ற... Continue Reading →
ஈழப் போராட்டம் பற்றிய சில கட்டுரைகள் |கனவுப் புத்தகம் | சுப்ரமணியபுரம்
பெரும்பாலும் வாரம் ஒன்றில் ஏழு நாட்களும் வேலை என்பதாகவே திணிக்கப்பட்ட வாழ்வில் எப்போதாவது கிடைக்கின்ற ஓய்வு நாட்களும் சலிப்புடனேயே கடந்து செல்லுகின்றன. கொடுக்கப்பட்ட குறுகிய சில மணித்தியால ஓய்வுகளையே கொண்டாடிப் பழகிய மனதிற்கு அரிதாகவே கிடைக்கின்ற முழு ஓய்வு நாட்களை கொண்டாட தெரியவில்லையோ தெரியாது. சுதந்திரம் கிடைக்காதவர்களை விட கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாதவர்களே அதிகம் என்று ஏனோ தோன்றுகின்றது. சில நாட்களாகவே மையம் கொண்டிருக்கும் வெறுமை வலைப்பதிவில் கூட கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு அனுசரிக்கவில்லை.... Continue Reading →
நவாலி தேவாலயப் படுகொலைகள் – 14 ஆண்டு நினைவுகள்
பிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவு சொல்லை ஞாபகப்படுத்த கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்த காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை. அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக... Continue Reading →