இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நிறைய சூப்பர் ஸ்டார்களால் ஆனது என்று சொல்வார்கள். எனக்குக் கிரிக்கெட் அறிமுகமான காலத்தில், இந்தியாவில் இருந்து வருகின்ற தமிழ் இதழ்கள் தந்த அறிமுகத்தால் கவாஸ்கர், கபில்தேவ் என்கிற நாயகர்களின் வழிபாட்டுடன் சேர்ந்தே கிரிக்கெட்டும் அறிமுகமாகி இருந்தது. பின்னர் வெவ்வேறு காலப்பகுதிகளில் சச்சின், கங்கூலி, ஷேவாக், தோணி, கோலி, என்று அந்த ”சூப்பர் ஸ்ரார்” மரபு தொடர்ந்தது. இந்த நாயக வழிபாடு கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்கிற விமர்சனங்களும் நடந்தபடிதான் இருக்கின்றன. அந்த... Continue Reading →
கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட்
கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று. விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின்... Continue Reading →