எல்லாற்ற மாடும் உழுகிதென்றிட்டு சுப்பற்ற பேத்தை மாடும் உழுகைக்கு போச்சாம் என்று அடிக்கடி என் நண்பன் விசாகன் சொல்வது போல எல்லாரும் ஏதோ செய்யினம் போல இருக்கு என்றுதான் நானும் வலைப்பூக்களுக்க வந்தனான். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமென்று எழுதினாலும் இதில் ஒரு சந்தோஷம் கிடைத்தது உண்மை. அதை கொஞ்சம் கூட்டுவதுபோல கானாபிரபா வேற எனக்கு சினிமா பற்றிய தொடர் பதிவுக்கு அழைப்பு தந்தார். அவருக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.கால் நூறாண்டை கடந்துவிட்ட வாழ்க்கை பயணத்திலே, சற்று... Continue Reading →
கண்ணை கட்டி கோபம்…………
கடந்து போன எமது வாழ்வை வாழ்வின் அமைதியான ஒரு பொழுதில் திரும்பிப் பார்க்கும் போது முதல் காதல், முதல் முத்தம் போல சிறு வயதில் நண்பர்களுடன் கோபித்துக்கொண்டு கதைக்காமல் விட்ட, மீண்டும் கதைக்க தொடங்கிய நினைவுகளும் நெஞ்சில் பச்சை வயலில் பாத அடையாளம் போல மாறாமல் தொடர்கின்றன. சற்று பக்குவப்பட்ட இந்த வயதில் அந்த கோபங்கள் எல்லாம் ஒரு நகைச்சுவைக்கு இடமானதாக இருந்தாலும் எம் மனதை அதே பால்ய மனதாக்கி கொண்டு பார்த்தால், உள்ளொன்று வைத்து புறமொன்று... Continue Reading →
கலைந்து போகும் காலங்கள்…
அண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான The Sporststar ன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு... Continue Reading →