பாரதி பாடல்களுக்குத் தடை புத்தகம் பற்றிய சில பகிர்தல்கள்

"சென்னை அரசாங்கம் சுயமாகத் தீர்மானிக்கும் ஆற்றல் முற்றிலும் தனக்குக் கிடையாது என்பதை இந்த விஷயத்தின் மூலம் வெளிக்காட்டி விட்டது. தமிழ் படிக்கும் மக்கள் நேரடியாக இகழ்ந்து அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதை அவர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இந்த அரசாங்கம் மக்கள் கருத்துக்களுக்கு ஏதேனும் மதிப்புக் கொடுக்கிறது என்றால், இந்த நடவடிக்கையை அது மறுபரிசீலனை செய்யவேண்டும். தென்னிந்திய மக்களின் தேசிய உணர்வினை இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திவிடமுடியும் என எண்ணினால் அவர்கள் கருத்து முற்றிலும் தவறானது". இந்த வரிகள் 82... Continue Reading →

சாரு நிவேதிதா – பவா செல்லத்துரை – கிருத்திகா

  1 சாரு நிவேதிதாவைப் பொறுத்தவரை நித்தியானந்தா விவகாரம் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போலவே ஆகிவிட்டது. நான் என்ன நடிகையுடன் படுத்தேனா, எனது குற்றம் என்ன, நித்தியானந்தாவை நான் முழுவதும் நம்பினேன், அது குற்றமா என்று தொடர்ந்து வருகிறார் சாரு. ஆனால் நித்தியானந்தா விவாகரத்தில் சாரு நித்தியானந்தரின் நேரடியான பிரசாரகராகவே இயங்கினார் என்பதே உண்மை. தனது வாசகர்களை நித்தியானந்தரின் முகாம்களுக்குப் போகுமாறு தொடர்ந்து பிரேரித்தவர் சாரு. இதுவரை எந்த ஒரு இடத்திலும் சாரு இதற்கான... Continue Reading →

சோளகர் தொட்டி மீட்டுத் தந்த போர்க்கால நினைவுகள்

அண்மையில் வாசித்த நூல்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவை என்று சோளகர் தொட்டியையும், லிவிங் ஸ்மைல் வித்யாவின் 'நான் வித்யா'வையும் குறிப்பிடலாம். வாசிப்பின் மீது அக்கறை கொண்டவர்கள் மாத்திரம் அல்லாமல் தாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று இவற்றைக் குறிப்ப்டவேண்டும். சோளகர் தொட்டி நாவல் அதன் ஆசிரியர் ச. பாலமுருகன் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி எழுத, வித்யா, தான் சந்தித்த அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். வாழ்வின் தரம்... Continue Reading →

பஷீரின் மதில்கள் ஒரு பார்வை

ஒருதலை ராகம் திரைப்படத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உருகி உருகிக் காதலிக்கும் காதலனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஆண்கள் பற்றிய கசப்பான அனுபவங்களால் (சகோதரிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்) விலத்திச் செல்லும் பெண், திரைப்படத்தின் இறுதியில் அவனிடம் பிரியப்பட்டு பேசச் செல்கின்றபோது அவன் இறந்து விடுகிறான். 1980ல் வந்த இந்தத் திரைப்படம் இன்றளவும் காதல் தோல்வியைச் சொன்ன காவியமாக அனேகமாக எல்லா இள வயதுக்காரர்களாலும் பேசப்படுகின்றது. பின்னர் நடிகர் முரளி அலுக்காமல் கொள்ளாமல் இதே கதையமைப்பைக் கொண்ட பல ... Continue Reading →

மஞ்சள் வெயில் மீளத்தந்த நினைவுகள்

காதல் பற்றிய பதிவுகளும் படைப்புகளும் வந்தபடியேதான் இருக்கின்றன. காதல் பற்றி எத்த்னை படைப்புகள் வந்தாலும் காதல் புதிதாக்வே இருக்கின்றது. இதில் பிரிந்து போன காதல் பற்றிய கதறலாக, ஆற்றாமையுடன் கூடிய துயரை ஒரு ப்டைப்பாக இறக்கி வைக்கின்ற முயற்சியே யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவல். இந்த நாவல் (இதை ஒரு நாவல் என்ற வகைக்குள் அடக்கிவிடலாமோ தெரியாது.) கதிரவன் என்ற பத்திரிகை ஒன்றில் ஓவியனாகப் பணிபுரிபவன், கொஞ்சம் கவிதைகளும் எழுதுபவனுக்கு, அவன் சக் ஊழியன் சொல்லி... Continue Reading →

மஞ்சள் வெயில் நாவலும் மீளவந்த நினைவுகளும்

காதல் பற்றிய பதிவுகளும் படைப்புகளும் வந்தபடியேதான் இருக்கின்றன. காதல் பற்றி எத்தனை படைப்புகள் வந்தாலும் காதல் புதிதாகவே இருக்கின்றது. இதில் பிரிந்து போன காதல் பற்றிய கதறலாக, ஆற்றாமையுடன் கூடிய துயரை ஒரு படைப்பாக இறக்கி வைக்கின்ற முயற்சியே யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவல். இந்த நாவல் (இதை ஒரு நாவல் என்ற வகைக்குள் அடக்கிவிடலாமோ தெரியாது.) கதிரவன் என்ற பத்திரிகை ஒன்றில் ஓவியனாகப் பணிபுரிபவன், கொஞ்சம் கவிதைகளும் எழுதுபவனுக்கு, அவன் சக ஊழியன் சொல்லி தன்... Continue Reading →

அங்கிள் சாமுக்கு மண்டோ எழுதிய கடிதங்கள் மற்றும் எஸ். ராமகிருஷ்ணனின் விகடன் கட்டுரை

சென்றவார ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய வெளிநாட்டுக்காரர்கள் அறிவு ஜீவிகளா என்ற கட்டுரை இடம்பெற்று இருக்கின்றது. வெளிநாட்டுக்காரர்கள் பற்றி எம்மவரிடையே இருக்கின்ற பொதுப் புத்தி பற்றி இந்தக் கட்டுரையில் அலசப்பட்டிருக்கின்றது. இது போன்ற பொதுப் புத்திகளை நாமும் நிறைய அவதானித்தே இருக்கின்றோம். அதிலும் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் அதிகம். வெள்ளையர்கள் எல்லாரும் குடிப்பவர்கள் என்றும், கறுப்பினத்தவர்கள் எப்போதும் துப்பாக்கியுடனே திரிவார்கள் என்றும் இவர்கள் எல்லாம் பாலியல் தேவைகளுக்காக இலகுவாக அணுகக்கூடியவர்கள் என்றும் எம்மிடையே இன்றும் அபிப்பிராயம்... Continue Reading →

சாரு நிவேதிதா சொல்லும் கேரளமும், சக்கரியா சொல்லும் தமிழ்நாடும்

அரபிக்கடலோரம் என்ற சக்கரியா எழுதி சுகுமாரன் மொழி பெயர்த்த பத்திகளின் தொகுப்பை கொழும்பு பூபாலசிங்கம் புத்தக நிலையத்தில் வாங்கினேன். பத்தி எழுத்துகளை வாசிப்பவர்களுக்கும், தீவிர வாசகர்களுக்கும் சக்கரியா பற்றிய அறிமுகம் அவசியமில்லை. முக்கியமான மலையாள எழுத்தாளர். பத்திரிகையாளர், ஊடக ஆலோசகர், பத்தியாளர், விவசாயி, சினிமா, சிறுகதை – நாவல் எழுத்தாளர் என்ற பல தளங்களில் செயல்படுபவர் சக்கரியா. தொடர்ச்சியாக ஆங்கிலம், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் எழுதுகிறார். காலச்சுவடு இதழுக்காக பிரத்தியேகமாக இவர் எழுதிய பத்திகளே இந்தத்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑