சாம்பல் பறவைகள் குறுநாவலை முன்வைத்து

ஒப்பீட்டளவில் குறைவாகவே படைப்பிலக்கியங்கள் வெளியாகும் கல்முனையில் இருந்து எஸ். அரசரெத்தினம் எழுதிய சாம்பல் பறவைகள் என்ற குறுநாவலை வாசிக்கமுடிந்தது.  இக்குறுநாவல் 2009ல் ஈழப்போரில் தொடர்ச்சியாக அகப்பட்டு, கடுமையான இழப்புகளைச் சந்தித்த ஒரு குடும்பத்தைப் பற்றியும், அதன் கதாபாத்திரங்கள் ஊடாக எம்முடனான உரையாடல்களையும், விமர்சனங்களையும் மேற்கொள்ளுவதால் முக்கியமான ஒன்றாக அமைகின்றது. வன்னியைச் சேர்ந்த பவானிக்கும்  வவுனியாவைச் சேர்ந்த ஆனந்தனுக்கும் அவர்கள் வவுனியாவில் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றபோது காதல் உருவாகின்றது.  பெரும் செல்வந்தரான ஆனந்தனின் தந்தை தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு,... Continue Reading →

பூர்ணம் விஸ்வநாதன் முன்னொருநாள் சொன்ன கதை

பூர்ணம் விஸ்வநாதன் என்றவுடன் எமக்கு அவர் திரையில் ஏற்று நடித்த சில பாத்திரங்களே நினைவு வரும்.  குறிப்பாக மகாநதி, வருஷம் 16, ஆசை திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்.  தனது நாடகங்கள் பலவற்றுக்கு உயிர் கொடுத்தவர் பூர்ணம் விஸ்வநாதன் என்று சுஜாதா எழுதியிருக்கின்றார்.  தொடக்கத்தில் தான் எழுதி அவர் நடித்த நாடகங்கள் நிறைவானதாக தனக்குத் தோன்றியதால் பிற்பாடு சில நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதனை மனதில் வைத்துக்கொண்டே தான் எழுதியதாகவும் சுஜாதா கற்றதும் பெற்றதுவும் இல் குறிப்பிட்டிருந்தார். ... Continue Reading →

மனுநீதிச் சோழன் யார்? அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா?

Good Governance: Who Is Responsible? என்கிற Upali Cooray எழுதிய கட்டுரை ஒன்று கொழும்பு ரெலிலிகிராப் இணைய இதழில் மார்ச் 11, 2015 அன்று வெளியாகியிருந்தது.  அதில் கிமு 205 முதல் கிமு 161 வரை அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட எலார (எல்லாளன் என்று தமிழில் நாம் அழைக்கும் மன்னன் மகாவம்சத்தில் எலார என்றே குறிப்பிடப்படுகின்றான்) என்ற சோழ மன்னன் தன் அரண்மனையில் அவனிடம் நீதி வேண்டிவருவோர் ஒலிக்கவிடவேண்டிய மணி ஒன்றினை பேணியதாகவும், மன்னனின் மகன்... Continue Reading →

மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ!

எஸ்பொ விற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.  வாசிப்பு மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட எனது தலைமுறையைச் சேர்ந்த பலரையும்போலவே எஸ்பொ எனக்கும் பிடித்தமான ஒரு எழுத்தாளர்.  சிறுவயதில் இந்தியப் பத்திரிகைகளையே அதிகம் படித்து வளர்ந்தவன் என்பதால் எழுத்தாளன் என்கிற கர்வத்துடனனான விம்பங்களாக இருவர் என் மனதில் பதியவைக்கப்பட்டனர்.  ஒருவர் பாரதி.  அடுத்தவர் ஜெயகாந்தன்.  பின்னாளில் அந்த திருவுருக்கள் மனதில் தூர்ந்துபோயினர்.  ஆனால் மறக்கவே முடியாதவராக, பேராளுமையாக தாக்கம் செலுத்தியவர் எஸ்பொ அவர்கள்.  அவருடன் நெருக்கமான... Continue Reading →

நமக்கான வரலாற்றை நாமே எழுதுவோம்!

யாழ்ப்பாணத்து நினைவுகள் என்ற பெயரில் கடந்த சில வாரங்களாக நான் எழுதிவந்த சில கட்டுரைகளை, போர் சூழ்ந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் குறிப்பாக 90க்கும் 96க்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்த பதின்மவயதுகளைச் சேர்ந்த ஒருவனின் நினைவுகளின் பதிவுகளாகவே பதிவுசெய்தேன். வெறும் நனவிடைதோய்தலாக மாத்திரமல்லாமல், அன்றைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலவிய வாழ்வியலின் ஒரு பகுதியை இப்பதிவுகள் பதிவுசெய்திருக்கும் என்பது என் நம்பிக்கை. இதேபோல, இன்னும் பலரும் தம் அனுபவங்களை ஆவணப்படுத்தும்போது அவை மிகப்பெரிய வரலாற்று ஆவணமாக மாறும். உதாரணமாக இக்கட்டுரைகளை... Continue Reading →

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

  மரணம் மனிதர்களை மறக்கச்செய்துவிடுகின்றது, மகா மனிதர்களை மனதில் நிலைக்கச்செய்துவிடுகின்றது. பழகியவர்களைக் கூட மரணத்தின்பின்னர் மறந்துசெல்கின்ற இன்றைய காலத்தில், இலேசான அறிமுகம் மாத்திரம் உள்ள ஒருவரை மரணத்தின் பின்னர் அறிந்து, அவர் பற்றி மதிப்புற்று, இன்னும் இன்னும் தேடி அறிந்து அதிசயிப்பது என்பது அரிதாகவே நிகழ்கின்றது. அப்படி ஒருவர் பவன் என்று பலராலும் அறியப்பட்ட சத்தியபவன் சத்தியசீலன் அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து இலக்கிய நிகழ்வொன்றை ஒழுங்குசெய்திருந்தோம். எம் அனைவருக்கும் அது முதன்முயற்சி.... Continue Reading →

ஒவ்வொரு பாடலிலும்… (யாழ்ப்பாணத்து ஒலிப்பதிவுக் கூடங்கள்)

“ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஓர் அழகானபாடலினை என்னவளே திரைப்படத்திற்காக எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுத உன்னிகிருஷ்ணன் பாடியிருந்தார். சற்று நினைத்துப்பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்கமுடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இசைத்துக்கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்விற்காக பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்துபோன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம்சரமாக ஒன்றுடன்ஒன்று... Continue Reading →

அது ஒரு அழகிய நிலாக்காலம் (யாழ்ப்பாணத்து ட்யூசன் காலம்)

யாழ்ப்பாணத்துக் கலாசாரம் என்ன கலாசாரம் என்று யாரேனும் கேட்டால், யாழ்ப்பாணத்துக் கலாசாரம் ட்யூஷன்கள் நிறைந்த கலாசாரம் என்று சொல்லும் அளவுக்கு 90களில் முதலாம், இரண்டாம் வகுப்புப்படிக்கும் பிள்ளைகள் முதல் பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வானவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள் என பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற ட்யூஷன்கள் நிறைந்திருந்தன. கனடாவில எல்லாரும் ரெண்டு, மூன்று என்று வேலை செய்தது போல அந்நாட்களில் ஒரே பாடத்துக்கு ரெண்டு மூன்று ட்யூஷன் போனவர்களும் உண்டு. தென்னிந்திய திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்நாட்களில் மக்களுக்கு “கட்-அவுட்” கலாசாரத்தை அறிமுகம் செய்த... Continue Reading →

எஸ்பொ பற்றி ஒரு நனவிடை

முற்குறிப்பு : சென்றவாரம் வழமைபோலவே கடைசிநேரத்தில் வாராந்த யாழ் உதயனுக்கான கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது முகநூல் உரையாடல் மூலம் இடைவெட்டிய நண்பர் கற்சுறா “எஸ்பொ அதிக நாள் தாங்கமாட்டார் என்று செய்தி கிடைத்திருப்பதாகக் கூறினார். அதன்பிறகு அன்றைய கட்டுரையை மனமொருமித்து எழுதமுடியவில்லை. மனம்பாரமான வழமையான பொழுதுகளில் செய்வதுபோலவே மலேசியாவில் இருக்கின்ற நண்பன் விசாகனை அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் வேலையில் விடுப்பு, தூங்கி எழுந்தால் தொலைபேசியில் குறுஞ்செய்தி காத்திருந்தது. தேவகாந்தன் அனுப்பியிருந்தார், “EsPo expired two hrs... Continue Reading →

நான் கடந்த நளபாகம்

உங்கள் வாழ்வில் நீங்கள் உண்ட ஆகச்சிறந்த உணவு எது என்று எப்போதாவது யோசித்துப்பார்த்து இருக்கின்றீர்களா? அந்த உணவை ஆக்கிய முகத்தை உங்களால் நினைவுக்குக் கொண்டுவரக்கூடியதாக உள்ளதா? எப்போதாவது அந்த உணவை ஆக்கியவர்களைத் தேடிச்சென்று பாராட்டுத் தெரிவித்தது உண்டா? பொதுவாக எல்லாருக்கும் எப்போதும் வீட்டுச் சாப்பாடோ, அம்மாக்கள் தயாரித்த உணவுகளோ, மனைவியர் கைப்பக்குவமோ, அரிதான சிலருக்கு தந்தையரின், கணவன்மார்களின், நண்பர்களின் கைப்பக்குவமோ அல்லது வேறும் ஏதோ ஒரு உறவு தயாரித்த உணவுகளோ பிரியமானதாக இருக்கும். இன்னும் சிலருக்கு அதைவிடுத்து... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑