தமிழர் உணவுகள் என்கிற பக்தவத்சல பாரதி தொகுத்து காலச்சுவடு பதிப்பாக வெளியான புத்தகத்தைப் பார்த்ததும் உடனே படிப்பதில் ஆர்வம் உண்டானது. என்னுடன் வேலைத் தளத்தில் பணிபுரிகின்ற ஈரானைச் சேர்ந்த வர்லாறு, வாசிப்பில் அதிகம் அக்கறை கொண்ட நண்பர் ஒருவருடன் மத்தியான சாப்பாட்டு நேரத்திலும் பேசுகையில் எமக்கும் பாரசீகர்களுக்கும் உணவுப் பழக்கங்களில் இருக்கின்ற அனேக ஒற்றுமைகளை அவதானிக்க முடிந்தது. ஒரு உதாரணத்துக்கு நாம் குத்தரிசிச் சோற்றில் கஞ்சியை வடித்துக் குடிப்பது வழக்கம் (தமிழகத்தில் இவ்வழக்கம் இருக்கின்றதோ தெரியவில்லை). அனேகம்... Continue Reading →
புத்திசீவிகளின் அறிக்கை தொடர்பாக சில சந்தேகங்கள்………
1. அடித்தவர் sorry சொன்னால்தான் அடிவாங்கியவரின் வலி குறையும் என்று தமிழர் - முஸ்லீம்கள் பிரச்சனைகளில் சொல்லுபவர்கள்தான் சிங்கள அரசுடன் நல்லிணக்கம் செய்யுமாறு தமிழர்களைக் கூறுகின்றனர், எனது கேள்வி இங்கே அடித்தவர்கள் சிங்களவரா அல்லது தமிழரா........... 2. இங்கே முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றிப் பேசுபவர்கள் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி ஏன் வாய் திறப்பதேயில்லை. தமிழர்கள் - முஸ்லீம்களிடையான அடிப்படைப் பிணக்கள் தொடர்பான குறைந்த பட்ச இணக்கப்பாடுகள்... Continue Reading →
Rob Ford மற்றும் Kristyn Wong-Tam கற்கவேண்டிய பாடங்கள்
ரொரன்றோ மேயர் Rob Ford ன் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பது நல்லது. இப்படி ஒருவர் எப்படி மேயரானார் என்கிற கேள்வியே தொடந்து எழுகின்றது. 2008 ல் இவர் கவுன்சிலராக இருந்த போது “Those Oriental people work like dogs. … They’re slowly taking over என்றும் they even sleep beside machines என்றும் கூறியிருந்தார். அப்போது இதற்கான த்மது எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்தவர் ஆன Krystyn Wang-Tam அதன் பின்னர் தானும்... Continue Reading →
பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்
“பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்” அறிமுகவிழாவில் வாசித்த கட்டுரை பெயரிடாத நட்சத்திரங்கள் என்கிற பெயரில் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன என்று அறிந்தபோது, அந்தப் புத்தகம் என் கைக்கு கிட்டும் முன்னர் அந்தப் புத்தகம் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தேன். புலி எதிர்ப்பு எதிர் புலி ஆதரவு என்கிற தீர்மாணிக்கப்பட்ட பார்வைகளோடே பிரதிகள் அணுகப்படும் இன்றைய சூழலில் இப்புத்தகம் முழுக்க முழுக்க புலிகளின் பெண் போராளிகளின் கவிதைகளுடன் வெளிவந்திருப்பது எவ்வாறு... Continue Reading →
பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995
பிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவுச்சொல்லை ஞாபகப்படுத்தக் கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை. அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில்... Continue Reading →
எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை
உரையாடல் என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது. வெவ்வேறு கருத்துகளை, பார்வைகளை, அரசியலைக் கொண்டோர் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆர்வத்துடன் தேடி வாசித்து வந்திருக்கின்றேன். இவ்வாறான உடையாடல்கள் மூலம் தெளிவும், நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற கருத்துகளை, அரசியலை மீள்பார்வை, மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றன. அண்மையில் பிளேட்டோவின் குடியரசை வாசிக்கத் தொடங்கியபோது உரையாடல் என்பது எத்தனை வீச்சான வடிவம் என்பதையும் அறிய முடிந்தது. வெறும் வாதத்துக்காக என்றில்லாமல் ஆழமாக தத்தம் நிலைகளை முன்வைத்துப் பேசுகின்ற விவாதங்களும்... Continue Reading →
The Cage-ஐ முன்வைத்து ஈழப் போர் – எனது வாசிப்புகளூடான ஒரு பார்வை
ஈழத்தில் நடந்தேறிய போரின் இறுதிக் கட்டத்தில் பாரிய அளவில் போர்க் குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் பரவலாக வெளிவந்துகொண்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற மிக முக்கிய ஆவணங்களில் ஒன்று கோடன் வைஸ் (Gordon Weiss) எழுதி வெளிவந்திருக்கின்ற The Cage: The Fight For Srilanka and The Last Days of Tamil Tigers என்கிற நூலாகும். அவுஸ்திரேலியாவில் பிறந்த கோடன் வைஸ் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகச் செயலாற்றுவதுடன், கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஐக்கிய நாடுகள்... Continue Reading →
எஸ்பொவுடனான சந்திப்பும் இயல் விருதுக் குழப்பங்களும்
எஸ்பொ நனவிடை தோய்தல்இயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத்... Continue Reading →
நான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ
ஈழத்துப் படைப்பாளிகளும் முக்கியமானவர்களுல் ஒருவரும் எனக்குப் பிடித்தவருமான எஸ் பொவிற்கு இவ்வாண்டு இயல் விருது வழங்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இயல்விருது பற்றிய விமர்சனங்கள் நிறைய இருந்தபோதும் இவ்வாண்டுக்குரிய இயல்விருது எஸ்பொவிற்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எஸ்பொவை காணும் வாய்ப்புக் கிட்டியிருப்பது குறித்தும் மகிழ்ச்சியே. ஈழத்துப் படைப்பாளிகளில் எஸ்பொவையும், மு. தளையசிங்கத்தையும் முழுவதும் தொடர்ச்சியாகவும், விரிவாகவும் வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் நிறையத் தடவைகள் காலந்தாழ்த்தியே வந்துள்ளேன். அண்மையில் எஸ்பொ கனடா வருகின்றார் என்று அறிந்ததும் அதற்கிடையில் அவரை முழுமையாக... Continue Reading →
ஜெயமோகனின் இணையத்தளத்தில் என் பெயர் இடம்பெற்ற “ஜென்ம சாபல்யத்துடன்”
-1- நேற்று ரொரன்ரோவில் நடைபெற்ற குறும்பட விழா பற்றி ஜெயமோகன் அவர்கள் சில கருத்துக்களை எழுதி இருந்தார். அதில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜெயமோகன் சொல்கிறார், "‘நீங்கள் தமிழ் சினிமா குப்பை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் அதில் பணியாற்றுகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி. அருண்மொழி வர்மன் என்பவர் கேட்டது. ‘அய்யா நான் சொன்னது நேர் மாறு’ என்று சொன்னவற்றை அப்படியே திருப்பிச் சொன்னேன். உடனே அடுத்த கேள்வி ‘சரி, ஆனால் தமிழ் சினிமாவில் தரம் இல்லை... Continue Reading →