இரண்டாவது எதிர்வினை – ஈழப்போராட்டம்

மருதன்,நீங்கள் எனது பதிவுக்கு ஆற்றிய எதிர்வினைக்கு மீண்டும் நான் பதில் அளித்திருந்தேன்.  அதற்கு மீண்டும் எதிர்வினையாற்றி இருக்கின்றீர்கள்.  தொடர்ச்சியாக விவாதம் நிகழ்வது வரவேற்கத்தக்கது என்றாலும், எந்த விதமான அர்த்தமும் இல்லாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.  முதலில் எனது கட்டுரையில் நான் மாற்றுக் கருத்தாளர்கள் விடும் தவறுகள், ஊடகங்கள் ஈழப் பிரச்சனையை வணிக நோக்கில் அணுகுவது, மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிடுவது, புலி எதிர்ப்பையே மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் ஏற்றுக்... Continue Reading →

எதிர்வினைக்கான பதில்

(நேற்று நான் எழுதியிருந்த மக்களும் மாற்றுக் கருத்தாளர்களும் தேவைகளும் என்ற பதிவிற்கு மருதன் ஒரு எதிர்வினையை எழுதி இருந்தார்.  அதற்கான என் விளக்கத்தை, விளக்கம் அளவில் சற்றுப் பெரியதாக போய் விட்டதால் தனிப் பதிவாகவே இடுகின்றேன்)இது போன்ற விவாதங்களின் / உரையாடல்களின் தொடக்கத்தைத்தான் நான் விரும்புவதும், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த விரும்புவதும்.  அதை விடுத்து மக்கள் பங்கேற்காமல் ஈழப் பிரச்சனை போன்ற விவகாரங்களில் ஒதுங்கி நின்றதும் பிழை,அப்படி மக்கள் ஒதுங்கி நிற்கவேண்டும், தாம் சொல்வதின் படி... Continue Reading →

மக்களும் மாற்றுக்கருத்தாளர்களும் தேவைகளும்

எந்த ஒரு மொழியிலும் சொற்கள் கால ஓட்டத்தில் தமக்கான அர்த்தத்தை இழந்து விடுவது அல்லது வேறு அர்த்தங்களுடன் அழைக்கப்படுவது நடந்து கொண்டு இருப்பதுடன் சில சொற்கள் அவை கொண்டிருந்த அர்த்தத்துக்கு எதிரான அர்த்தத்துடன் பொருள் கொள்ளப்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது.  கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று கிருஷ்ணனின் கையில் இருக்கின்ற வெண்சங்கிடம் கேட்பதாக ஆண்டாள் பாடிய பாடலில் நாற்றம் என்பது இப்போது வாசனை என்ற பொது வழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாக மாறிவிட்ட்து.  நாற்றம் என்பது கெட்ட... Continue Reading →

மூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்

1அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. "லிவிங் ஸ்மைல்" வித்யாவின் "நான் வித்யா"வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.அந்த வகையில் ரேவதி தொகுத்த "உணர்வும் உருவமும்", மற்றும் மகாராசன் தொகுத்த "அரவாணிகள்; உடலியல் - உளவியல் -வாழ்வியல்"... Continue Reading →

G8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்

கனடாவில் G8 மற்றும் G20 கூட்டங்களுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் G20 என்றால் என்னவென்று கேட்டார். இயலுமானவரை சுருக்கமாக எப்படி விளங்கப்படுத்தலாம் என்று யோசித்தேன். சட்டென்று பொறி தட்டக் கூறினேன் "பாட்ஷா திரைப்படத்தில் ரகுவரன் எல்லாக் கொள்ளைக்காரர்களையும் அழைத்து தாம் ( கொள்ளைக்காரர்கள்) நன்றாக இருக்கவும் மென்மேலும் கொள்ளை அடிக்கவும் தம்மிடையே புரிந்துணர்வுடன் இருப்பது எவ்வளவு அவசியம் என்று (சாத்தான்) வேதம் ஓதுவார். அது போல உலகின் மிகப் பெரிய கொள்ளைக்காரர்களின் பிரதிநிதிகள் 20... Continue Reading →

ஒடுக்கு முறைகள் பற்றி சில வாசிப்புகள்

1 அமைதிக்கான யுத்தம் என்ற பெயரில் ஒரு மிகப்பெரும் அழிவு இலங்கையில் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், கைது செய்யப்பட்டோர் எத்தனை பேர் என்று எந்தக் கணக்குகளும் காண்பிக்கப்படாமல் இலங்கை அரசாங்கம் இந்தியப் படவிழா என்றும், புலி உறுப்பினர்களுக்குத் திருமணம் என்றும் ஈழப் பிரச்சனையில் அக்கறை கொண்டோர் கவனத்தைக் கூட வெற்றிகரமாக சிதறடிக்கத் தொடங்கியிருக்கின்றது.  அழித்தொழிப்பின் ஒரு பங்குதாரரான இந்திய அரசோ இப்போது இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பச்சை... Continue Reading →

பாரதி பாடல்களுக்குத் தடை புத்தகம் பற்றிய சில பகிர்தல்கள்

"சென்னை அரசாங்கம் சுயமாகத் தீர்மானிக்கும் ஆற்றல் முற்றிலும் தனக்குக் கிடையாது என்பதை இந்த விஷயத்தின் மூலம் வெளிக்காட்டி விட்டது. தமிழ் படிக்கும் மக்கள் நேரடியாக இகழ்ந்து அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதை அவர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இந்த அரசாங்கம் மக்கள் கருத்துக்களுக்கு ஏதேனும் மதிப்புக் கொடுக்கிறது என்றால், இந்த நடவடிக்கையை அது மறுபரிசீலனை செய்யவேண்டும். தென்னிந்திய மக்களின் தேசிய உணர்வினை இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திவிடமுடியும் என எண்ணினால் அவர்கள் கருத்து முற்றிலும் தவறானது". இந்த வரிகள் 82... Continue Reading →

சாரு நிவேதிதா – பவா செல்லத்துரை – கிருத்திகா

  1 சாரு நிவேதிதாவைப் பொறுத்தவரை நித்தியானந்தா விவகாரம் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போலவே ஆகிவிட்டது. நான் என்ன நடிகையுடன் படுத்தேனா, எனது குற்றம் என்ன, நித்தியானந்தாவை நான் முழுவதும் நம்பினேன், அது குற்றமா என்று தொடர்ந்து வருகிறார் சாரு. ஆனால் நித்தியானந்தா விவாகரத்தில் சாரு நித்தியானந்தரின் நேரடியான பிரசாரகராகவே இயங்கினார் என்பதே உண்மை. தனது வாசகர்களை நித்தியானந்தரின் முகாம்களுக்குப் போகுமாறு தொடர்ந்து பிரேரித்தவர் சாரு. இதுவரை எந்த ஒரு இடத்திலும் சாரு இதற்கான... Continue Reading →

சோளகர் தொட்டி மீட்டுத் தந்த போர்க்கால நினைவுகள்

அண்மையில் வாசித்த நூல்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவை என்று சோளகர் தொட்டியையும், லிவிங் ஸ்மைல் வித்யாவின் 'நான் வித்யா'வையும் குறிப்பிடலாம். வாசிப்பின் மீது அக்கறை கொண்டவர்கள் மாத்திரம் அல்லாமல் தாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருமே நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் என்று இவற்றைக் குறிப்ப்டவேண்டும். சோளகர் தொட்டி நாவல் அதன் ஆசிரியர் ச. பாலமுருகன் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி எழுத, வித்யா, தான் சந்தித்த அனுபவங்கள் பற்றி எழுதுகிறார். வாழ்வின் தரம்... Continue Reading →

பஷீரின் மதில்கள் ஒரு பார்வை

ஒருதலை ராகம் திரைப்படத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உருகி உருகிக் காதலிக்கும் காதலனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஆண்கள் பற்றிய கசப்பான அனுபவங்களால் (சகோதரிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்) விலத்திச் செல்லும் பெண், திரைப்படத்தின் இறுதியில் அவனிடம் பிரியப்பட்டு பேசச் செல்கின்றபோது அவன் இறந்து விடுகிறான். 1980ல் வந்த இந்தத் திரைப்படம் இன்றளவும் காதல் தோல்வியைச் சொன்ன காவியமாக அனேகமாக எல்லா இள வயதுக்காரர்களாலும் பேசப்படுகின்றது. பின்னர் நடிகர் முரளி அலுக்காமல் கொள்ளாமல் இதே கதையமைப்பைக் கொண்ட பல ... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑